Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
ரஷ்யமொழி படிக்க நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற செக்யூரிட்டி... சூப்பர்மேன்ப்பா...
ஜே.என்.யுவின் பாதுகாப்புத் துறையின் காவலர் ரஷ்ய மொழி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். அதுபற்றி இங்கே பார்ப்போம்.
"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் " என்ற வாக்கு, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த தாழ்மையான மனிதருக்கு பொருந்தும். ஒரு பாதுகாப்புக் காவலர் பணியில் இருந்து வரும், ராம்ஜால் மீனாவின் உறுதியும், மனநிலையும் அவருக்கு ரஷ்ய மொழிக்கான நுழைவுத் தேர்வில் வெற்றிபெற உதவியது.

ரஷ்யாவுக்கு செல்ல வேண்டும் என்ற கனவுதான் இந்த 33 வயது மனிதரை ரஷ்ய மொழியைத் தேர்வு செய்யத் தூண்டியது. இப்போது, மீனா ரஷ்ய மொழியில் பி.ஏ நுழைவுத் தேர்வை முடித்துவிட்டார்.

சூப்பர் மேன்
மேலும் ஏ.என்.ஐ.யுடன் பேசும்போது, "இப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழியை இங்கு படிப்பேன்" என்றார்.
"நான் ஒரு நாள் ரஷ்யாவுக்குச் செல்ல விரும்புகிறேன். அதன் கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் நான் காண விரும்புகிறேன். ரஷ்யா ஒரு நல்ல நாடு. இந்தியாவும் ரஷ்யாவிலிருந்து நிறைய பாதுகாப்பு உபகரணங்களை வாங்குகிறது," என்று அவர் மேலும் கூறினார்.

பெஸ்ட் ஸ்டூ்ண்ட்
ராஜஸ்தானில் கரோலி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. மீனாவின் வாழ்க்கை ஒருபோதும் எளிதாக இல்லை. இன்று அவர் அடைந்திருப்பது, அவர் மேற்கொண்ட முடிவற்ற போராட்டத்தின் விளைவாகும். குடும்பப் பொறுப்புகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, அவர் தனது படிப்பை பாதியில் விட்டுவிட்டு, ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே ஒரு சிறந்த மாணவனாக இருந்த மீனா தனது வகுப்பில் முதல் இடத்தைப் பெறுவார். "நான் 2000 ஆம் ஆண்டில் ஒரு அரசு பள்ளியில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதன்பிறகு, ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பி எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்து. அந்த கல்லூரியில் இடமும் கிடைத்தது.

தினக்கூலி வேலை
ஆனால் நிதிப் பிரச்சினைகள் காரணமாக, நான் முதல் ஆண்டில் படிப்பை விட்டுவிட்டேன், தினசரி கூலியாக பணியாற்றிய என் தந்தைக்கு உதவ ஆரம்பித்தேன், "என்று அவர் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மீனா தனது தந்தையுடன் தினசரி கூலித் தொழிலாளியாக வேலை செய்து ஒரு நாளைக்கு ரூ .50-60 சம்பாதித்தார். இப்போது, அவர் திருமணமாகி 3 குழந்தைகளைக் கொண்டிருக்கிறார், ஆனால் அவரது தந்தை தனது சகோதரிகளின் திருமணங்களுக்காக எடுத்த கடன்களால் சூழப்பட்டார், இப்போது அவற்றைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறுகிறார்.

ரஷ்ய மொழி ஆசை
அவர் வீட்டில் 6 மணிநேரம் படிப்பார், மேலும், இந்த தேர்வை முடிக்க தனது வேலை நேரங்களுக்கு இடையில் கூட படிப்பார். இப்போது அவர் ரஷ்ய மொழிப் படிப்பைத் தொடர உற்சாகமாக உள்ளார். இது நேரடி பாடத்திட்டம் ஆகும் என்பதால் இவருடைய பணி நேரமும், கல்லூரி நேரமும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் விதத்தில் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

ஜே.என்.யுவின் பாதுகாப்புத் துறை
அவரது வாழ்க்கை மாறும் முடிவுக்கு மீனாவை ஆதரித்து, அவரைப் பாராட்டிய ஜே.என்.யுவின் பாதுகாப்புத் துறையின் தலைவர் ராஜேஷ் பவார் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டது, தங்கள் அணியைச் சேர்ந்த ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்தியதில் அனைவரும் மகிழ்ச்சியடைவதாகவும், அவர்கள் அவரை சிறந்த முறையில் ஆதரிப்பதாக உறுதியளித்ததாகவும் கூறினார்.

காவலராக
மீனா 2014 நவம்பரில் ஜே.என்.யுவில் பாதுகாப்பு காவலராக சேர்ந்தார், 2018 ல் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் தொலைதூர பாடத் திட்டத்தின் மூலம் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்வதைத் தவிர, இப்போது யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸுக்கும் அவர் தயாராகி வருகிறார்.



Click it and Unblock the Notifications
