For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐநா சபையின் அமைதிப்படையில் பணிபுரியப் போகும் இந்திய பெண் வீரர்கள்!

இந்தியா தற்போது இந்த ஐநா சபையின் அமைதிப்படைக்கு பல வீரர்களை அனுப்பியுள்ளது. அதுவும் நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் படை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் பணிபுரிய போகிறது.

|

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த அமைதிப்படையின் வேலையே பிரச்சனைகள் நிறைந்து அமைதியற்று இருக்கும் நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவி புரிவதாகும். நமது இந்தியா தற்போது இந்த ஐநா சபையின் அமைதிப்படைக்கு பல வீரர்களை அனுப்பியுள்ளது.

அதுவும் நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் படை தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் பணிபுரிய போகிறது. இது நமக்கு மிகவும் பெருமையாக உள்ளது தானே? நமது இந்திய ராணுவத்தில் உள்ள பெண்கள் இந்தியாவில் இருக்கும் பல பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக மற்றும் உத்வேகம் அளிக்கக்கூடியர்களாக உள்ளனர்.

Indias Women Peacekeepers In UN Mission In Abyei In Tamil

இந்நிலையில் இந்தியாவின் பெண்கள் பட்டாலியன் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் சூடானின் அபேயில் அமைதி காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இந்திய படையில் முற்றிலும் பெண் வீரர்களே உள்ளனர்.

முதன் முதலாக ஐநா அமைதி காக்கும் படையானது 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த படையில் இதுவரை சுமார் 2 லட்சம் இந்தியர்கள் சேவைசெதுள்ளனர். தற்போது நமது இந்திய மகளிர் அணியும் இந்த படையில் இணைந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இந்திய பெண் வீரர்கள் பணியாற்றினர். அப்போது இந்திய பெண்கள் பட்டாலியன் லைபீரியாவில் 24 மணிநேரமும் உழைத்தது. ஆண்களுக்கு இணையாக லைபீரியாவில் அமைதியை நிலைநாட்ட லைபீரியா காவல்துறைக்கு இந்திய அமைதிப்படை பெண்கள் உதவி செய்தனர்.

தற்போது ஐநா சபையின் அமைதிப்படையில் புதிதாக இணைக்கப்பட்ட இந்திய பட்டாலியனில் இரண்டு அதிகாரிகள் மற்றும் 25 மற்ற தரநிலை அதிகாரிகள் உள்ளனர். இந்த படையை ஐநா சூடானின் அபீன் நகருக்கு அனுப்புகிறது. ஏனெனில் சூடானின் அபீன் நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வழக்குகள் நடைபெறுகின்றன. இதைத் தடுத்து இங்கு அமைதியை நிலைநாட்ட முடிவு செய்து ஐநா அமைதிப்படையை இங்கு அனுப்புகிறது.

உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்திய பெண்களின் பங்கு உண்டு. அதில் ஐநா-வின் முதல் போலீஸ் ஆலோசகர் டாக்டர் கிரண் பேடி, மேஜர் சுமன் கவானி மற்றும் சக்தி தேவி ஆகியோர் ஐநா அமைதிப்படையில் ஏற்கனவே தனக்கென முத்திரை பதித்துள்ளனர்.

English summary

India's Women Peacekeepers In UN Mission In Abyei In Tamil

India Deploys Largest Platoon On Women Peacekeepers In UN Mission In Abyei In Tamil, Read on to know more..
Story first published: Friday, January 6, 2023, 19:25 [IST]
Desktop Bottom Promotion