Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
உங்க ராசிப்படி உங்களோட மரணம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? பயப்படாம படிங்க...!
நம் வாழ்க்கையை வடிவமைப்பதில் நமது இராசி அடையாளம் பெரும் பங்கு வகிக்கிறது என்பது நமக்குத் தெரியும், அதே நேரத்தில் அவற்றுக்கும் நம் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது.
மனித வாழ்க்கை என்பது அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத ஒரு சுவாரஸ்ய நாவலாகும். அனைத்து நாவல்களும் முடிவுக்கு வந்துதான் ஆக வேண்டும், அதேபோல மனித வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும். வாழ்க்கையில் மறுக்க முடியாத ஒரு உண்மை என்னவென்றால் மனிதனாக பிறந்த அனைவரும் இருந்துதான் ஆகவேண்டும் என்பதுதான்.

மரணம் எப்போது வேண்டுமென்றாலும் ஏற்படலாம் ஆனால் அது எப்படி ஏற்படும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். நம் வாழ்க்கையை வடிவமைப்பதில் நமது இராசி அடையாளம் பெரும் பங்கு வகிக்கிறது என்பது நமக்குத் தெரியும், அதே நேரத்தில் அவற்றுக்கும் நம் மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறது. ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிட்ட குணங்கள், பலவீனங்கள் போன்றவை இருக்கும். இந்த குணங்கள் உங்களின் மரணம் எப்படி இருக்கப்போகிறது என்பதை வெளிப்படுத்தக்கூடும். இந்த பதிவில் உங்கள் ராசிப்படி உங்களின் மரணம் எப்படி நேர வாய்ப்புள்ளது என்பதை பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிதான் ஜோதிட சாஸ்திரத்தின் முதல் ராசியாகும், இது பொறுப்பற்ற மற்றும் பிடிவாதமான ராசியாக உருவகப்படுத்தப்படுகிறது. பொதுவாகவே இவர்கள் தைரியசாலிகளாகவும் மற்றவர்கள் செய்யத்தயங்குவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் சிலசமயம் சூழ்நிலைகள் இவர்களுக்கு எதிரானதாக மாறக்கூடும், இது இவர்களை சிக்கலில் மாட்டவைக்கும். இவர்களின் மரணம் மலையேறுதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், நெருப்பு போன்றவற்றால் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம்
இரண்டாவது ராசியான இவர்கள் எளிமையான மற்றும் அன்பானவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் தங்களின் உடமைகளை பெரிதும் நேசிப்பார்கள், அதிக சுயநலம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தங்களின் உடமைகளை இழப்பது இவர்களுக்கு பிடிக்காது, இது சிலசமயம் இவர்களுக்கு எதிரானதாக மாறக்கூடும். இவர்களின் சுயநலம் பிடிக்காதவர்களால் இவர்களின் மரணம் நேர வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஆர்வம், வேடிக்கை மற்றும் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களாக அறியப்படுகிறார்கள். இருப்பினும், சிலசமயம் இவர்கள் மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி நடந்து கொள்வார்கள். இது அவர்களுக்கு எதிர்மறையான சூழ்நிலைகளை உருவாக்கும். மோசமான குணம் கொண்டவர்களிடம் மனம் புண்படும்படி நடந்து கொள்வது இவர்களுக்கு நல்லதல்ல. இவர்களின் மரணம் வீண் சண்டைகளால், இயற்கைக்கு எதிர்மாறானதாக இருக்கும்.

கடகம்
இவர்களின் மரணம் தவறான நட்பால் ஏற்படும். அந்த மோசமான நண்பர் நல்லவர் போலத்தான் இருப்பார், ஆனால் அவர்களின் உண்மையான குணத்தை இவர்கள் இறுதிவரை அறியமாட்டார்கள். கடக ராசிக்காரர்கள் நண்பர்கள் தேர்ந்தேடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதேசமயம் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அதிக நபர்களின் ஆலோசனைகளை பெற வேண்டாம்.

சிம்மம்
அதிக கவனமும், சிந்திக்கும் ஆற்றலும் கொண்டவராக சிம்ம ராசிக்காரர் அறியப்படுகிறார். இந்த நபர்கள் இந்த விஷயத்தை ஆழமாகப் பார்க்கிறார்கள், சில சமயங்களில் சில எண்ணங்கள் மனச்சோர்வு, விரக்தி, தூக்கமின்மை, தற்கொலை எண்ணங்கள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். இவர்களுக்கு மரணம் இவர்களாலேயே ஏற்பட வாய்ப்புள்ளது.

கன்னி
இது மிகவும் சிக்கலான ராசிகளில் ஒன்றாகும். கன்னி ராசிக்காரர்களுக்கு மரணம் விசித்திரமானதல்ல. நிச்சயமற்றதன்மை இவர்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் பின்தொடர்ந்து வரும். இவர்கள் அதிக சுய அன்பு உள்ளவர்கள், தங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். சில நேரங்களில் விஷயங்கள் தீவிரமடைந்து இவர்கள் கட்டுப்பாடில்லாமல் செல்லும்போது இவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்வார்கள்.

துலாம்
மிகவும் தந்திரமான ராசி என்றால் அது துலாம் ராசிக்காரர்கள்தான். இவர்கள் எப்பொழுதும் ஆபத்தான மற்றும் சிக்கலான விஷயங்களை செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபவது இவர்களுக்கு ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்கும். இவர்களின் மரணம் எதிர்பாராத சூழ்நிலைகளில் திடீரென நிகழ வாய்ப்புள்ளது.

விருச்சிகம்
இவர்கள் அதிக கோபப்படுபவர்களாகவும், உணர்ச்சிவசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் குறிப்பிட்ட நபருடன் எளிதில் இணைந்து விடுவார்கள் குறிப்பாக விலங்குகளுடன் அதிக பிணைப்பில் இருப்பார்கள். தங்களுக்கு விருப்பமானவற்றை இழப்பது இவர்க்ளுக்கு துயரமான ஒன்றாகும். நெருக்கமானவர்களின் மரணம் அல்லது பிரிவு இவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், மரணத்தை கூட ஏற்படுத்தும்.

தனுசு
அதிக ஆற்றலும், சுறுசுறுப்பும் மிக்கவர்கள் தனுசு ராசிக்காரர்கள். இந்த நபர்கள் தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் கேம்களை நோக்கி அதிகம் சாய்ந்திருக்கிறார்கள். ஆன்லைன் கேம்களை விளையாடும்போது இணையத்தில் அதிக நேரம் செலவிடுவது அவர்களின் மரணத்திற்கு முக்கிய காரணமாக மாறும்.

மகரம்
கவனக்குறைவும், சோம்பேறித்தனமும் மிக்கவர்கள் மகர ராசிக்காரர்கள். இவர்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் விரும்பாமல், கவலையும் இல்லாமல் வாழ நினைப்பார்கள். இவர்களின் மரணம் உடல்நலக்குறைவால் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்
அதிக கவனமும், கவலையும் கொண்ட ராசிக்காரர்கள் இவர்கள். இவர்கள் வியாபரம் மற்றும் பைனான்ஸில் அதிகம் ஈடுபடுவார்கள். இலாபத்தை பெறுவதற்காக இவர்கள் எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள், அதேசமயம் சிறிய விஷயத்திற்கு கூட அதிக விரக்தி அடைவார்கள். இவர்களின் விரக்திதான் இவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும்.

மீனம்
தந்திரமம், புத்திசாலித்தனமும் மிக்கவர்கள் மீன ராசிக்காரர்கள். இவர்கள் எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்கக் கூடியவர்கள், எந்தவொரு முடிவையும் புத்திசாலித்தனமாக எடுக்கக் கூடியவர்கள். ஆனால் சிலசமயம் இவர்களின் முடிவுகள் விபரீதங்களை ஏற்படுத்தக்கூடும். இவர்களின் மரணம் மின்சாரத்தின் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications











