Just In
- 7 hrs ago
வார ராசிபலன் (22.05.2022-28.05.2022) - இந்த வாரம் இந்த ராசிக்காரங்களாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
- 8 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை பிறருடன் பகிர்வதைத் தவிர்க்கவும்..
- 17 hrs ago
மட்டன் தால்சா
- 18 hrs ago
உங்கள் ஆயுளை அதிகரிக்க நெய்யுடன் இந்த பொருட்களில் ஒன்றை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்...!
Don't Miss
- Movies
அதிர்ச்சி.. ‘தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை’ பாடலை பாடிய பிரபல பாடகி சங்கீதா சஜித் காலமானார்!
- News
அறிவே இல்லாதவன்! வார்த்தையை விட்ட பெண்.. கண்ணசைத்த அன்புமணி.. மைக்கை பிடுங்கிய மூர்த்தி.. ஒரே கூத்து
- Sports
பண்ட் கேப்டன்சியில் பெரும் பிரச்சினை?? ரிக்கிப் பாண்டிங் கூறிய தடாலடி பதில்.. அப்படி என்ன கூறினார்?
- Finance
61 மடங்கு லாபம் கொடுத்த அதானி பங்கு.. லட்சாதிபதியாக கிடைத்த வாய்ப்பு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனர் என்ன ஆகப்போகுதோ? ஜீப் மெரிடியன் காரின் டெலிவரி பணிகள் விரைவில் தொடக்கம்!
- Technology
லுக் வேற லெவல்: புதிய எமரால்டு பிரவுன் வண்ண விருப்பத்தில் சாம்சங் கேலக்ஸி எம்33, எம்53 5ஜி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2022 திருமணம் ஆகாதவர்களுக்கு அவங்க ராசிப்படி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? மனச தேத்திக்கோங்க...!
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை ஆரவாரத்துடன் நாம் வரவேற்கிறோம், எதிர்காலம் நமக்கு என்ன தர காத்திருக்கிறது என்று தெரியாவிட்டாலும் கூட புத்தாண்டின் மீதான ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை. நாம் முன்னோக்கிச் செல்லும் பாதையை தீர்மானிப்பதில் நமது ராசியானது சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய பங்கு வகிக்கும் என்பதை நாம் உறுதியாக அறிவோம்.
திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி வரப்போகிற புதிய ஆண்டு திருமணமாகாதவர்கள் அல்லது தனிமையில் இருப்பவர்களுக்கு வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் இருப்பது நல்லது என்றாலும், அதிகப்படியான ஆர்வம் சில நேரங்களில் உறவுக்கு தீங்கு விளைவிக்கும். மேஷ ராசிக்காரர்கள் எந்தவொரு உறவிலும் ஈடுபடும் போது அது அவர்களுக்கு கடினமான போரராக இருக்கும். ஆனால் 2022 இல், அவர்கள் ஒரு மாற்றத்திற்காக வித்தியாசமாக இருக்கலாம், அது அவர்களின் வாழ்க்கையில் காதலை ஏற்படுத்தும்.

ரிஷபம்
நீங்கள் ஒரு இலக்கை அடைய விரும்பினால், அனைத்து சிக்னல்களும் பச்சை நிறமாக மாறும் வரை காத்திருக்க முடியாது. ஒரு நிலையான உறவுக்கான தேடலானது நல்லதுதான், ஆனால் உறவின் ஆரம்பம் இருந்தால் மட்டுமே அதை அடைய முடியும். நீங்கள் மனவேதனைக்கு பயப்படுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தொடர விரும்பும் எவருடன் சுதந்திரமாக கலந்துகொள்ள வேண்டும்.

மிதுனம்
2022 ஆம் ஆண்டின் மத்தியில்அவர்கள் வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான ஒருவரைச் சந்திக்கப் போகிறீர்கள். நினைத்ததை சாதிப்பதற்கு நீங்கள் உங்களுடைய தெளிவான மற்றும் புத்திசாலித்தனமான தொடர்பு திறன்களைப் பயன்படுத்த வேண்டும்.

கடகம்
இந்த ராசியில் இருக்கும் சிங்கிளாக இருப்பவர்கள் சிறப்பு வாய்ந்த ஒருவருடன் பழகலாம் ஆனால் இருவருக்கும் இடையே உணர்ச்சிபூர்வமான ஆதரவு இல்லாதது உறவை பூக்க விடாது. அவர்கள் மிகவும் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

சிம்மம்
2022 என்பது பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் நிறைந்த ஆண்டு அல்ல. எப்படியாவது தங்கள் காதலைக் கண்டுபிடிக்கும் சிம்ம ராசிக்காரர்கள் பல சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு காதலில் ஆர்வம் இல்லையென்றால், அவர்கள் இப்போதைக்கு தனிமையில் இருப்பது நல்லது.

கன்னி
விசேஷமான ஒருவரைச் சந்திப்பது பெரும்பாலான கன்னி ராசியினருக்கு எளிதாக இருக்கும், ஆனால் அதன்பிறகு ஏற்படும் பிரச்சினைகளுக்கு அவர்கள் தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய இந்த அலட்சியமான அணுகுமுறை அவர்களின் துணையால் அதிகம் பாராட்டப்படாது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்களின் சரியான துணையை கண்டுபிடிக்க நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். உணர்ச்சிப்பூர்வமான இணக்கத்தன்மை, இலக்கு சார்ந்த அணுகுமுறை மற்றும் தொழில் பாதை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் பொருந்தக்கூடிய ஒருவரை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

விருச்சிகம்
இந்த ராசியைச் சேர்ந்த சிலர் இப்போதைக்கு தனிமையில் இருக்கலாம், ஆனால் அவர்கள் எதிர்காலத்தில் அதே நிலையில் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் விரைவில் உணர்ச்சி மற்றும் காதல் நிறைந்த உறவில் இருப்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சுதந்திரமான பறவை அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறார்கள், குறிப்பாக அவர்கள் எந்த உறவிலும் ஒரு பகுதியாக இல்லாதபோது. 2022 ஆம் ஆண்டில், ஒரு புதிய உறவு அவர்களின் கதவுகளைத் தட்டக்கூடும், ஆனால் அது அவர்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தது.

மகரம்
இந்த ஆண்டு தனிமையில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் அடுத்த ஆண்டு இறுதியிலும் அப்படியே இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ராசிக்காரர்களின் மனதில் வேலையும் வியாபாரமும் தொடர்ந்து ஆட்சி செய்யும்.

கும்பம்
2022 இந்த ராசியிலிருக்கும் பலருக்குத் தனிமையில் இருக்கும் கடைசி ஆண்டாக இருக்கலாம். இந்த காலகட்டத்தை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மற்றும் அவர்களது வாழ்க்கையில் எந்த ஆபத்தையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் ஆண்டு முழுவதும் கவனம் செலுத்துவார்கள். இருப்பினும், விசேஷமான ஒருவர் விரைவில் அவர்களின் வாழ்க்கையில் நுழைய வாய்ப்புள்ளது.