For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலகோடி ஆண்டுகளுக்கு முன் உருவான அண்ணாமலை... கிரிவலம் வந்தால் கிடைக்கும் பலன்கள்!

எல்லாம் வல்ல ஈசனே மலையாக உருவாகி அருள்பாலிக்கும் தலம் அண்ணாமலை. திருவண்ணாமலை என்பது லிங்கமே மலையாக அமைந்திருப்பது தான். இம்மலையானது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவான மலையாகும்.

|

கிரிவலம் வருதல் என்றாலே சட்டென்று திருவண்ணாமலை கிரிவலம் தான். அதற்கு பின்பு தான் மற்ற கோவில்கள் நினைவுக்கு வரும். மற்ற கோவில்கள் உள்ள மலைகளை எல்லாம் அந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களின் போது மட்டுமோ அல்லது பவுர்ணமி நாளில் மட்டுமோ தான் கிரிவலம் வருவதுண்டு.

MOST READ: திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?

மற்ற நாட்களில் அப்படி ஒரு கோவிலோ அல்லது மலையோ இருப்பது அவர்களின் கண்களுக்கு புலப்படாது. அந்தந்த ஊர்களில் இருப்பவர்களும் அந்த மலையை சுத்தமாக மறந்து விடுவார்கள். அந்த மலைக்கு அருகிலுள்ளவர்களும் அந்த மலையை கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், திருவண்ணாமலை கிரிவலம் முற்றிலும் தனித்துவம் வாய்ந்தது. திருவண்ணாமலை என்பது லிங்கமே மலையாக அமைந்திருப்பது தான். இம்மலையானது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவான மலையாகும்.

MOST READ: இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை படு ரொமான்டிக்கா இருக்கும் தெரியுமா?

மலையை வலம் வரத் தொடங்கும் போது, அஷ்டதிக் பாலகர்களில் கிழக்கு திசை அதிபதியான இந்திர லிங்கத்தை முதலில் வணங்கி, பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள நந்திகேஸ்வரரை வணங்கி வழிபட்டு தான் மலையை வலம் வரத் தொடங்க வேண்டும். காரணம் இவர் மூலம் தான் மலையை வலம் வருவதற்கு ஈசன் அனுமதி அளித்துள்ளார். அதே போல் கிரிவலத்தை முடிக்கும் போதும் அருணாச்சலேஸ்வரரை வணங்கினால் தான் முழு கிரிவலம் வந்ததற்குரிய பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோதி வடிவான ஈசன்

ஜோதி வடிவான ஈசன்

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டியில், அவர்களின் அகந்தையை அழிப்பதற்காக, சிவபெருமானே முதலும் முடிவும் இல்லாத ஜோதி வடிவாக காட்சி கொடுத்த மலையாகும். அதோடு, முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் நாள்தோறும் இம்மலையை வலம் வந்து வணங்கி வருகிறார்கள். இதன் காரணமாகவே, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கால நேரம் பார்க்காமல், அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விட்டு மலையை வலம் வருகிறார்கள்.

கிரிவலம்

கிரிவலம்

இம்மலையை வலம் வருவதற்கு குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல் எந்நேரமும் கிரிவலப் பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து செல்வார்கள். இதில் ஒவ்வொரு நாளும் கிரிவலம் வருவதற்கும், பவுர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் வலம் வருவதற்கும் என சிறப்பு பலன்கள் உண்டு. அதை தெரிந்து கொண்டு கிரி வலம் வந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.

நினைத்தாலே முக்தி தரும்

நினைத்தாலே முக்தி தரும்

நினைத்தாலே முக்தி தரும் தலம் என்பதாலேயே, திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும் என்று நினைத்த உடனே கிளம்பி, திருவண்ணாமலையை வந்தடைந்த உடனேயே அப்படியே கிளம்பி கிரிவலம் வருவது என்பது மிகப்பெரிய தவறாகும். சில பேர் திருவண்ணாமலைக்கு பேருந்திலோ அல்லது ரயிலிலோ வந்திறங்கிய உடனே, அப்படியே கிரிவலம் வர ஆரம்பித்து விடுகின்றனர். அந்த முற்றிலும் தவறானது. எங்கோ ஆரம்பித்து சீக்கிரம் வலம் வரவேண்டும் என்பதற்காக குறுக்குப் பாதை ஏதாவது உள்ளதா என்று ஆராய்ந்து அதன் வழியே வரக்கூடாது. 14 கி.மீ சுற்றளவுள்ள பரந்த விரிந்த முழு மலையையும் நடந்தே செல்ல வேண்டும். அதோடு வெறும் கால்களால் மட்டுமே நடக்க வேண்டும்.

கிரிவலம் எப்படி வரவேண்டும்

கிரிவலம் எப்படி வரவேண்டும்

வீம்புக்காகவே கிரிவலம் தானே வரவேண்டும், எப்படி வந்தால் உங்களுக்கென்ன என்று, முருகப்பெருமான் மயில் வாகனத்தில் உலகை சுற்றி வந்தது போல், நாமும் வாகனத்தில் வலம் வரவே கூடாது. அது கிரிவலம் வரும் மற்ற பக்தர்களுக்கும் தொந்தரவாக அமைந்து விடும்.

கிரிவலம் வரும் போது நண்பர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டும், வெறுமனே கைகளை வீசிக்கொண்டும் நடக்கக்கூடாது. கிரிவலம் முடியும் வரையிலும் சிவநாமத்தை மட்டுமே உரக்க சொல்லிக்கொண்டோ அல்லது மனதில் நினைத்துக்கொண்டோ தான் செல்ல வேண்டும்.

பவுர்ணமி கிரிவலம்

பவுர்ணமி கிரிவலம்

அன்றைய காலகட்டத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து கிரிவலம் வந்துள்ளார்கள். இன்றைய கால கட்டத்திலும் வெகு சிலர் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்கள். அதனால் நாம் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அமைதியாக ஈசனை நினைத்துக்கொண்டு கிரிவலம் வந்தாலே உரிய பலன் கிடைக்கும்.

எல்லா மாதமும், எல்லா நாட்களுமே கிரிவலம் வருவதற்கு ஏற்றதாக இருந்தாலும் கூட, மழைக்காலங்களான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களிலும் மற்றும் பவுர்ணமி நாட்களிலும் கிரிவலம் வருவதற்கு ஏற்றதாக இருக்கும்.

விநாயகர் தரிசனம்

விநாயகர் தரிசனம்

கிரிவலம் வரும்போது முதலில் விநாயகரையும், அருணாச்சலேஸ்வரரை வணங்கிவிட்டு, கிழக்கு வாயிலில் இருந்து மலையை வலம் வரத் தொடங்க வேண்டும். அதே போல் கிரிவலத்தை முடிக்கும் போதும் அருணாச்சலேஸ்வரரை வணங்கினால் தான் முழு கிரிவலம் வந்ததற்குரிய பலன் கிடைக்கும்.

அண்ணாமலையை வலம் வரத் தொடங்கும் போது, அஷ்டதிக் பாலகர்களில் கிழக்கு திசை அதிபதியான இந்திர லிங்கத்தை முதலில் வணங்கி, பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள நந்திகேஸ்வரரை வணங்கி வழிபட்டு தான் மலையை வலம் வரத் தொடங்க வேண்டும். காரணம் இவர் மூலம் தான் மலையை வலம் வருவதற்கு ஈசன் அனுமதி அளித்துள்ளார்.

எமன் பூஜித்த லிங்கம்

எமன் பூஜித்த லிங்கம்

அடுத்ததாக, தென் கிழக்கு திசைக்கு அதிபதியான அக்னி பூஜித்த அக்னி லிங்கம் உள்ளது. அதை வணங்கிவிட்டு, நடக்கையில் அடுத்ததாக தெற்கு திசைக்கு அதிபதியான எமன் பூஜித்த எமலிங்கம் உள்ளது. எமனுடைய கட்டளையை நிறைவேற்றும் எமகிங்கரர்கள், இந்த லிங்கத்தை வணங்கிவிட்டு தான் தங்களின் கடமையை நிறைவேற்ற கிளம்புவதாக ஐதீகம்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

குழந்தை பாக்கியம் கிடைக்கும்

அடுத்ததாக மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மஞ்சள் கயிற்றில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். அடுத்ததாக கிரிவலப்பாதையில் நம்மை வரவேற்பது தென்மேற்கு திசையின் காவலனான நிருதி வழிபட்ட நிருதி லிங்கம். இவரை வணங்கி விடைபெற்றுக்கொண்ட பின்பு, தெற்கிலிருந்து மேற்காக திரும்புகையில், சற்று மேல்நோக்கி நம் பார்வையை செலுத்தினால், அன்னை பார்வதி தேவிக்கு சிவபெருமான் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்த இடத்தை நாம் தரிசிக்க முடியும்.

நந்தி தேவர் தரிசனம்

நந்தி தேவர் தரிசனம்

இந்த இடத்திலிருந்து நாம் மலையை நோக்கினால், நந்தி தேவரின் தலை நம்மை நோக்கி திரும்பி பார்ப்பது போன்று தோற்றமளிக்கும். நாம் நிச்சயம் அதை வணங்கிவிட்டு செல்வது அவசியமாகும். இங்கிருந்து நாம் கிளம்பி நடக்கும்போது நம்மை வரவேற்பது நேர் அண்ணாமலை கோவில். கிழக்கு திசையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு நேராக மலையின் பின்புறத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் இங்கு வந்து கண்டிப்பாக தரிசிக்க வேண்டியது அவசியமாகும். இங்கு போகர் சித்தர் உருவாக்கிய மூலிகைகளால் ஆன முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அடி அண்ணாமலையார்

அடி அண்ணாமலையார்

அடுத்ததாக, மேற்கு திசைக்கு அதிபதியான வருணனும் சூரியனும் வழிபட்ட வருண லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட்டு பின்னர், பிரம்மன் வழிபாடு செய்து பாவங்கள் களையப்பெற்ற அடி அண்ணாமலையார் கோவிலை வணங்கி தரிசித்து செல்ல வேண்டும். அடுத்ததாக வருவது வடமேற்கு திசைக்கு அதிபதியான வாயுலிங்கம் உள்ளது. அருகிலேயே வடக்கு திசைக்கு அதிபதியான குபேர லிங்கமும் உள்ளது. இரண்டையும் தரிசித்து விட்டு வலம் வரவேண்டும்.

இடுக்கு பிள்ளையார் கோவில்

இடுக்கு பிள்ளையார் கோவில்

இவ்விரண்டு லிங்கங்களையும் தரிசித்துவிட்டு நடக்கையில் நம்மை வரவேற்பது பிரபலமான இடுக்கு பிள்ளையார் கோவில். இந்த கோவிலில் உடம்பை ஒருக்களித்து நுழைந்து வெளியில் வரவேண்டும். அப்போது உடம்பில் ஏதாவது சுளுக்கு வலி இருந்தால் விலகிவிடும். இங்கிருந்து மலையைப் பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவபெருமானின் ஐந்து திருமுகங்களையும் குறிக்கக்கூடியதாகும்.

அண்ணாமலையார் தரிசனம்

அண்ணாமலையார் தரிசனம்

அடுத்ததாக கிரிவலம் வரும் பாதையில், சுடலைக்கு செல்லும் தனிப்பாதையில் சென்றால் வருவது, வடகிழக்கு திசைக்கு அதிபதியான ஈசானன் வழிபட்ட ஈசான்ய லிங்கம். இதையும் வழிபட்டு, பின்னர் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசித்தால் தான் கிரிவலம் சென்றதன் முழு பலனும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Go To Thiruvannamalai Girivalam

As the mountain begins to circulate, one must first begin to circle the mountain in the Ashta Dik Balagar worshiping the Indira lingam of the East and then worshiping the Nandikeshwara in the Girivalam path.
Story first published: Wednesday, December 11, 2019, 9:50 [IST]
Desktop Bottom Promotion