For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க மூடநம்பிக்கைன்னு நினைக்கிற இந்த ஆரோக்கிய விஷயங்கள் உண்மைதானாம்... ஜாக்கிரதையா இருங்க...!

ஆரோக்கியம் தொடர்பான பல மூடநம்பிக்கைகள் நமது முன்னோர்கள் காலம் முதலே இருந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் வெறும் மூடநம்பிக்கைகள் இல்லை என்பதுதான் உண்மை.

|

நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகள் என்பது பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. காலம் காலமாக நாம் இந்த மூடநம்பிக்கைகளுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மூடநம்பிக்கைகள் அனைத்து விஷயங்களிலும் உள்ளது. இந்த மூடநம்பிக்கைகள் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களையும் விட்டுவைக்கவில்லை.

Health myths that turned out to be true

ஆரோக்கியம் தொடர்பான பல மூடநம்பிக்கைகள் நமது முன்னோர்கள் காலம் முதலே இருந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை அனைத்தும் வெறும் மூடநம்பிக்கைகள் இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் இந்த மூடநம்பிக்கைகளில் சில உண்மையிலேயே நமக்கு பாதிப்பை ஏற்படுத்துவாயாக உள்ளது. இந்த பதிவில் நீங்கள் மூடநம்பிக்கைகள் என்று நினைக்கும் சில உங்களை எப்படி பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை 1

உண்மை 1

காலம் காலமாக கூறப்படும் ஒன்று தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம் என்பதுதான். இதனை நாம் மூடநம்பிக்கை என்று நினைக்கலாம் ஆனால் இது மூடநம்பிக்கையல்ல. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் போது அது உங்கள் சுற்றுப்புறத்தில் இருந்து உங்களுக்கு சளி பிடிப்பதைத் தடுக்கிறது. மேலும் இது மட்டுமின்றி ஆப்பிளில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளது. 50 வயதை கடந்தவர்கள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது அவர்களின் இதயத்திற்கு பாதுகாப்பை அளிக்கிறது. இதிலிருக்கும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஆரோக்கியமான பொருட்கள் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும்.

உண்மை 2

உண்மை 2

தாமதமாக சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். இது முழுக்க முழுக்க உண்மையாகும். இந்த நம்பிக்கைக்கு அறிவியலும் துணையாக நிற்கிறது. இரவில் தாமதமாக சாப்பிடுபவர்கள் வழக்கமான நேரத்தில் சாப்பிடிடுபவர்களை விட அதிக எடை அதிகரிப்பிற்கு ஆள்வதாக ஆய்வுகள் கூறுகிறது. இரவு நேர உண்பவர்கள் அதிக அளவில் சாப்பிடுவதோடு அதிக கலோரிகளை உட்கொள்வார்கள். இரவில் சாப்பிடுவது உங்கள் சர்க்காடியன் தாளங்களையும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உங்கள் உடலின் திறனையும் சீர்குலைக்கும். மேலும் சரியான நேரத்தில் சாப்பிடுவது பசி ஹார்மோன்களான கிரெலின் மற்றும் லெப்டின் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உண்மை 3

உண்மை 3

பக்கத்தில் உட்கார்ந்து டிவி பார்ப்பது உங்கள் கண்களை கெடுக்கும் என்று அனைத்து வீட்டிலும் அம்மாக்கள் கூறுவார்கள். இதனை முற்றிலும் மூடநம்பிக்கை என்று கூற இயலாது, ஏனெனில் இதனால் கண்களின் பார்வைக் குறைபாடு ஏற்படாது. மாறாக, இது கண் திரிபு மற்றும் சோர்வு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தைகள் ஆறு முதல் ஏழு மணி நேரத்திற்கு மேல் போன் அல்லது டிவி திரையை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு கிட்டப்பார்வை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.

MOST READ: அனைவரையும் துன்புறுத்தும் சனிபகவான் பெண் உருவம் எடுத்து அனுமனிடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா?

உண்மை 4

உண்மை 4

காரமான உணவுகள் சாப்பிடுவது எடையை குறைக்க உதவும் என்று கூறுவார்கள். இது முழுக்க முழுக்க உண்மையான ஒன்றாகும். ஏனெனில் மிளகாய், மிளகு போன்ற கார பொருட்களில் இருக்கும் கேப்சைசின் தெர்மோஜெனீசிஸை ஊக்குவிப்பதன் மூலம் எடை குறைக்க உதவுகிறது. மேலும் இது கொழுப்பை கரைக்க உதவுகிறது. கெய்ன் போன்ற மசாலாப் பொருட்கள் உங்கள் பசியைக் கட்டுப்படுத்தவும் உங்களை முழுமையாக உணர செய்யவும் உதவுகிறது.

உண்மை 5

உண்மை 5

உங்களின் அலர்ஜிகள் பனிக்காலத்தில் மறைந்துவிடும் என்று கூறுவார்கள். இது உண்மைதான், ஆனால் இது ராக்வீட் போன்ற சில அலர்ஜிகள் மட்டுமே மறையும். குளிர்ந்த வானிலை ராக்வீட்டைக் கொல்லும், ஆனால் சில மோசமான அலர்ஜிகள் குளிர்காலத்தில் மறையாது.

உண்மை 6

உண்மை 6

ஊறுகாய் சாறு பிடிப்பை குணப்படுத்தும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிருக்கிறார்கள். இது உண்மைதான், உங்கள் உடலில் இருக்கும் பிடிப்பை 90 நொடிகளில் ஊறுகாய் சாறு குணப்படுத்தக்கூடும். ஊறுகாய் சாறு உங்கள் தொண்டையின் பின்புறத்தைத் தாக்கும் போது தசை நிர்பந்தத்தை ஏற்படுத்துகிறது என்று கருதுகின்றனர், இது உடல் முழுவதும் தவறான நியூரான்களை அணைக்கிறது, எனவே தசைப்பிடிப்பு குணப்படுத்துகிறது. இதற்கு காரணம் இதிலிருக்கும் வினிகராக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

MOST READ: உங்கள் கல்லீரல சுத்தமா வைச்சுக்கனும்மா? தினமும் இந்த ஜூஸ் குடிங்க போதும்...!

உண்மை 7

உண்மை 7

கர்ப்ப காலத்தில் அம்மாக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் குழந்தை அதிக முடியுடன் பிறக்கும் என்று கூறுவார்கள். இது உண்மையான ஒன்றுதான், நமது முன்னோர்களின் கருத்துப்படி மிதமானது முதல் கடுமையான நெஞ்செரிச்சலுக்கு ஆளாகும் பெண்கள் நிறைய முடியுடன் கூடிய அழகிய குழந்தையை பெற்றெடுப்பதாக கூறுகிறார்கள். இவை இரண்டிற்கும் இடையே இருக்கும் தொடர்பு இன்றும் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் பிற கர்ப்ப ஹார்மோன்களின் கூடுதல் அளவு கருவின் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் உணவுக்குழாயின் மேற்புறத்தில் உள்ள சுழற்சியை தளர்த்தலாம் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Myths That Turned Out to Be True

Here is the list of health myths that turned out ti be true.
Story first published: Saturday, September 21, 2019, 15:08 [IST]
Desktop Bottom Promotion