For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹர் கர் திரங்கா: தேசியக்கொடியை எப்படி மடிப்பது மற்றும் எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் தெரியுமா?

இந்த ஆண்டு 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

|

இந்த ஆண்டு 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது, இதன் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13 மற்றும் 15 க்கு இடையில் குடிமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை காட்டவோ அல்லது ஏற்றவோ வலியுறுத்தப்பட்டுள்ளது. மூவர்ணக் கொடியை எவ்வாறு சரியாக மடிப்பது என்பது குறித்த வழிகாட்டியையும் மத்திய அரசு பகிர்ந்துள்ளது.

Har Ghar Tiranga: How to Correctly Fold and Store the National Flag in Tamil

நாட்டின் 76 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில், மையத்தின் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' முயற்சியின் ஒரு பகுதியான 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. பிரச்சாரத்தை துவக்கி வைத்து, மோடி ஒரு ட்வீட்டில், "தேசியக் கொடியுடனான நம்முடைய தொடர்பை ஆழப்படுத்தும்" என்று கூறியிருந்தார்.

ஜூலை 22 ஆம் தேதி, நமது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. 1947ஆம் ஆண்டு இதே நாளில்தான் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவர்ணக் கொடி மற்றும் பண்டிட் நேருவால் ஏற்றப்பட்ட முதல் மூவர்ணக் கொடியுடன் தொடர்புடைய குழுவின் விவரங்கள் உட்பட வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யமான நுணுக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம், "என்று பிரதமர் ஒரு ட்வீட்டில் எழுதினார்.

இயக்கம் தொடங்கும் முன், தேசியக் கொடியை சரியாக மடிக்க மத்திய அரசு வகுத்துள்ள முறைகள் மேற்கொண்டு பார்க்கலாம்.

Step 1: மூவர்ணத்தை கிடைமட்டமாக வைக்கவும்

Step 2: காவி நிறம் மற்றும் பச்சை நிற பட்டைகளை வெள்ளை பட்டையின் கீழ் மடித்து வைக்க உறுதி செய்யவும்.

Step 3: இப்போது காவி மற்றும் பச்சை நிற பட்டைகளின் குறிப்புகளுடன் அசோக சக்கரம் மட்டும் தெரியும் வகையில் வெள்ளை நிற பட்டையை மடியுங்கள்.
Step

English summary

'Har Ghar Tiranga': How to Correctly Fold and Store the National Flag in Tamil

'Har Ghar Tiranga': Read to know how to correctly fold a and store the national flag.
Desktop Bottom Promotion