Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மே 1 தொழிலாளர் தினத்து அன்னைக்கு தொழிலாளர்களுக்கு இந்த விஷயத்தை சொல்ல மறந்துடாதீங்க...!
ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொழில்துறை தொழிலாளர்கள் தலைமையிலான புரட்சியைக் குறிக்கும் நாள் இது. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு சிறந்த வேலைச் சூழலுக்கான கோரிக்கையை வைத்து போராட்டம் நடத்தி, அந்த போராட்டத்தில் வெற்றியும் கண்டனர். அந்த காலகட்டத்தில், தொழிலாளர்கள் 12 முதல் 15 மணி நேரம் வேலை செய்யும்படி கட்டாயபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரத்தை 8 மணி நேரமாகக் குறைக்கக் கோரினர்.

உலகம் முழுவதும் உழைக்கும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுத்த நாளை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். பாட்டாளி வர்க்கத்தின் தியாகத்தையும், வலிமையையும் இந்த மே தினத்தில் நாம் அனைவரும் நினைவுகூறுவோம். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மே தினத்தன்று நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.

வாழ்த்து 1
உலக தொழிலாளார்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின சிறப்பு வாழ்த்துக்கள்

வாழ்த்து 2
உலகம் முழுவதும் எத்தனையோ இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்களின் வலிக்கு மருந்து போடும் நன்னாள். தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 3
எந்த வேலையும் அற்பமானதல்ல. மனிதகுலத்தை உயர்த்தும் அனைத்து உழைப்பிற்கும் கண்ணியம் உண்டு. அவை சிறப்போடு மேற்கொள்ளப்பட வேண்டும் - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்.

வாழ்த்து 4
உலகம் உழைப்பவர்களாலேயே வாழ்கிறது. அதனால் அது உழைப்பவர்களுக்கே சொந்தமானது. இத்தைகைய பெருமையையும் சிறப்பினையும் கொண்ட உழைப்பாளர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 5
தங்களின் கடின உழைப்பால் வீட்டையும், நாட்டையும் உயர்த்திடும், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த மே தின நல்வாழ்த்துகள்!

வாழ்த்து 6
தொழிலாளர் தினம் என்பது அனைத்து தொழிலாளர்களையும் கவுரவிப்பதற்கான ஒரு சிறப்பு சந்தர்ப்பமாகும். அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துகிறது. அனைத்து உழைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்த்து 7
தொழிலாளர்கள் கடுமையாக உழைத்துவருகிறீர்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் அயராத முயற்சிகள் மட்டுமே தேசத்தின் வளர்ச்சிக்கு உதவிவருகிறது. உழைப்பாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 8
தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்து பாராட்டப்பட வேண்டியவர்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்!

வாழ்த்து 9
தொழிலாளர் தினம் சராசரி மனிதனுக்கு பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கான நமது உறுதியைக் குறிக்கிறது. இது அவர்களுக்கு அரசியல் சுதந்திரத்தை அளிக்கும். -பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்

வாழ்த்து 10
தங்களின் வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்ளும் அதே வேளையில் நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு பங்களிக்க கடினமாக உழைக்கும் உழைப்பாளர்கள் அனைவரையும் கவுரவிக்கும் ஒரு சிறப்பு நாள் இது. உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!



Click it and Unblock the Notifications