For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளிக்கு மறுநாள் கோவர்தனன் பூஜை எதனால் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படும் கோவர்தனன் பூஜை நாளில் கிருஷ்ணர், கோவர்தனன் மலை மற்றும் பசு வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் இந்திரனை வென்ற நாளே கோவர்தனன் பூஜையாக கொண்டாடப்படுகிறது.

|
Govardhan Puja 2022 Date, History, Shubh Muhurat, Puja Vidhi, Samagri, Rituals and Significance in Tamil

கோவர்தனன் பூஜை ஐப்பசி மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் பிரதிபடா திதியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படும் கோவர்தனன் பூஜை நாளில் கிருஷ்ணர், கோவர்தனன் மலை மற்றும் பசு வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் இந்திரனை வென்ற நாளே கோவர்தனன் பூஜையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோவர்த்தனம் மலையானது, பசுவின் சாணத்தால் செய்யப்பட்டு, வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது. பின்னர், கோவர்தனனுக்கு தூபம், தீபம், நைவேத்யம், பழங்கள், தண்ணீர் போன்றவற்றை வைத்து வழிபாடு நடைபெறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவர்தனன் பூஜையின் வரலாறு

கோவர்தனன் பூஜையின் வரலாறு

இந்து புராணங்களின்படி, மக்கள் தங்கள் பயிர்களைப் பாதுகாக்கவும் காப்பாற்றவும் இந்திரனிடம் பிரார்த்தனை செய்தனர். எதிர்பாராமல் மாறி பெய்த மழையால் பயிர்கள் நாசமாகின. இந்திரனின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் போரிடும் போதும், ​​கடுமையான மழை பெய்யும் போதும், ​​இயற்கையின் மதிப்பையும் அதன் விளைவுகளையும் பகவான் கிருஷ்ணர் எடுத்துரைத்தார். கிருஷ்ணர் கோவர்தனன் மலையை உயர்த்தி இந்திரனின் கோபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.

கோவர்தனன் பூஜையுடன் தொடர்புடைய மற்றொரு புராணம் என்னவென்றால், மன்னன் பாலி விஷ்ணுவை தோற்கடித்தது. கோவர்தனன் பூஜை நாளில், பாலி மன்னன் படால் லோகத்தில் இருந்து வெளிப்பட்டு தனது ராஜ்ஜியத்திற்கு செல்வதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, இந்தியாவின் சில பகுதிகளில், இந்த நாள் 'பாலி பிரதிபதா' மற்றும் 'பத்வா' என்றும் அழைக்கப்படுகிறது.

கோவர்தனன் பூஜை தேதி

கோவர்தனன் பூஜை தேதி

பெரும்பாலான நேரங்களில், கோவர்தனன் பூஜை தீபாவளிக்கு அடுத்த நாள் கொண்டாடப்படும். இருப்பினும் சில சமயங்களில், தீபாவளிக்கும் கோவர்தனன் பூஜைக்கும் இடையே ஒரு நாள் இடைவெளி இருக்கலாம். இந்த ஆண்டு கோவர்தனன் பூஜை அக்டோபர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது.

கோவர்தனன் பூஜைக்கான நேரம்

கோவர்தனன் பூஜைக்கான நேரம்

கோவர்தனன் பூஜை முகூர்த்தம்- காலை 05:28 மணி முதல் 07:43 மணி வரை

கால அளவு - 02 மணி 16 நிமிடங்கள்

கோவர்தனன் பூஜையின் சடங்குகள்

கோவர்தனன் பூஜையின் சடங்குகள்

கோவர்தனன் பூஜையின் மிக இன்றியமையாத விழா பசுவின் சாணத்தால் செய்த குன்றுகளைத் தயாரிப்பது தான். இந்த குன்றுகள் மலர்கள், குங்குமம் மற்றும் அட்சதையால் கலைநயத்துடன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

சாணத்தினால் குன்றுகளை உருவாக்கி வழிபடுவது என்பது பகவான் கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்வது, வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களைத் துடைக்கக் கோருவது போன்றவற்றுடன் தொடர்புடையது. இந்த நாளில், மக்கள் தங்கள் பசுக்கள் மற்றும் காளைகளை மலர் மாலைகள் மற்றும் குங்குமத்தால் அலங்கரிப்பர். பசுக்கள் கிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவை என்பதால், மக்கள் அவற்றை அலங்கரித்து போற்றி வணங்குகிறார்கள்.

கோவர்தனன் பூஜை இந்நாளில் நடத்தப்படும் விழாக்களின் மற்றொரு முக்கிய அங்கம் 56 உணவுப் பொருட்கள் அடங்கிய அன்னகூடு தயாரிப்பு ஆகும். அன்னகூடு பிரசாதம் பல்வேறு கோவில்களில் தயாரிக்கப்பட்டு குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Govardhan Puja 2022 Date, History, Shubh Muhurat, Puja Vidhi, Samagri, Rituals and Significance in Tamil

Govardhan Puja 2022 Date, History, Shubh Muhurat, Puja Vidhi, Samagri, Rituals and Significance in Tamil, Read on to know more...
Story first published: Sunday, October 23, 2022, 11:00 [IST]
Desktop Bottom Promotion