For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

190 லட்சம் வருடத்துக்கு முன் வாழ்ந்த கிளியின் படிமம் கண்டுபிடிப்பு... இதோ பாருங்க...

19 மில்லியன் ஆண்டுகளான கிளியின் படிமத்தை கண்டறிந்து உள்ளனர் நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள், வாங்க அதுபற்றி தெரிஞ்சுக்கலாம்.

|

நம்முடைய வரலாற்றைத் தேடுவது என்பதே மிக சுவாரஸ்யமான அதேசமயம் நம்மை யார் என்று நிரூபிப்பதற்கான முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஏனெனில் உலக அரங்கில் நம்முடைய பழமை மற்றும் தொன்மையை எடுத்துக்காட்டுவதில் உள்ள பெருமிதம் தான். அது மனித உயிர்களான நமக்கு மட்டும் கிடையாது. இந்த உலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இது பொருந்தும். அவை தங்களுடைய இனத்தின் தொன்மையை, பெருமையை மற்ற உயிரிகளுக்கு நிரூபிக்க ஆசை கொள்கின்றன.

Squawkzilla

சமீபத்தில் நியூசிலாந்து விஞ்ஞானிகளால் 'ஸ்கூகோவில்லா' என்ற புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. விஞ்ஞானிகள் தலைமையிலான அந்த குழு ஒரு புதிர் வாய்ந்த படிமத்தை மீட்டெடுத்து உள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரிய கிளி

பெரிய கிளி

இப்பகுதியில் 360 அடி உயரமானதும், 15 பவுண்டுகள் எடை கொண்ட கிளிகள் அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த "கக்கப்பூ" கிளி தான் இருக்கிறதிலயே பெரிய கிளியாம். இது நியூசிலாந்தின் ஆரம்ப கால மைக்ரோசெட் ஸ்டாண்ட் பானன்ஸ் விலங்கினங்களுடன் சேர்க்கப்பட்டது.தற்போது அதன் படிமங்களை நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

MOST READ: பியூட்டிகான் லாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா... அவங்க கண்ணுல இருக்கிற விஷயத்த கண்டுபிடிங்க...

இதன் எலும்பே பெரியது

இதன் எலும்பே பெரியது

விஞ்ஞானிகள் அந்த கிளி படிமத்தின் இரண்டு கால் எலும்பை ஆராய்ச்சி செய்த போது டைபியோட்ரஸி அடிப்படையில் இரண்டு எலும்புகள் ஒரே பறவையின் எலும்புகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கிளி தான் பறவைகளிலயே மிகப்பெரிய பறவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறகு அவர்கள் இந்த படிம எலும்புகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பறவைகளின் எலும்புகளுடனும், அதே மாதிரி ஸ்மித்சோனியம் நேஷனல் அருங்காட்சியக பறவைகள் எலும்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது.

எலும்புகளின் கண்டுபிடிப்பு

எலும்புகளின் கண்டுபிடிப்பு

அடிலெய்டில் உள்ள பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் ஒரு ஆராய்ச்சி திட்டத்தின் போது இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ட்ரெவர் வொர்தி, என்ற புதைபடிவ ஆராய்ச்சி மாணவன் ஒருவர் இதைக் கண்டுபிடித்து உள்ளார். அதன் பின் ஆராய்ச்சியாளர்கள் குழு அனைவரும் ஒன்று சேர்ந்து அதை மறு ஆய்வு செய்யத் தொடங்கினர்.

MOST READ: இவர் ஜெட் வேகத்தில் செல்லும் ஹோவர்பேர்டை கண்டுபிடிச்சிருக்காரு... எவ்ளோ வேகம் தெரியுமா?

பறக்க முடியாத பறவை

பறக்க முடியாத பறவை

இந்த எலும்புக் கூடுகளின் வடிவமைப்பு மற்றும் கனத்தை கொண்டு பார்க்கும் போது இந்த பறவையால் பறந்திருக்க முடியாது. தரையில் கிடப்பதை இது உண்டு வாழ்ந்து வந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின் இணை ஆசிரியரும், பல்லுயிரியலாளருமான மைக்கேல் ஆர்ச்சர், இருவரும் நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகையிடம் இது குறித்து பேட்டி கொடுத்த போது இந்த பறவை மற்ற சிறு கிளிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்திருக்கலாம் அதனால் தான் இதற்கு "ஸ்குவாக்ஸில்லா" என்ற புனைப்பெயரும் வந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த படிமம் 19 மில்லியன் ஆண்டுகளை கடந்து இருக்கும் என்று ஆச்சர்யமூட்டும் தகவல்களை அவர்கள் தந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fossils Of A 19 Million-Year-Old Cannibal Parrot 'Squawkzilla' Found In New Zealand

The fossils of 'squawkzilla', labelled as Heracles inexpectatus, was discovered by scientists recently. A collection of its fossils in a lab storage was rediscovered by the scientists
Story first published: Friday, August 16, 2019, 15:12 [IST]
Desktop Bottom Promotion