For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொடூரமாக கொல்லப்பட்ட உலகத்தின் முக்கியமான தலைவர்கள்... உலக வரலாற்றின் கருப்பு பக்கங்கள்...!

தலைவராக இருப்பது என்பது எப்போதுமே ஆபத்தான ஒன்றுதான். பொதுவாக தலைவர்களுக்கு பல மடங்கு பாதுகாப்பு இருக்கும், ஆனால் அத்தனை அடுக்கு பாதுகாப்பையும் மீறி பல தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

|

தீவிரவாதம் என்பது இப்போது மட்டுமல்ல உலகம் தோன்றிய காலம் முதலே இருந்துதான் வருகிறது. தனது முரணான கொள்கைகளுக்காக வன்முறையில் இறங்குவது தொடங்கி பணத்திற்காக கொலை செய்வது வரை அனைத்துமே தீவிரவாதத்தைத்தான் சேரும். உலகம் தோன்றிய காலம் முதலே பல உலகத் தலைவர்கள் தீவிரவாதத்தால் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

Famous World Leaders Who Were Assassinated

தலைவராக இருப்பது என்பது எப்போதுமே ஆபத்தான ஒன்றுதான். பொதுவாக தலைவர்களுக்கு பல மடங்கு பாதுகாப்பு இருக்கும், ஆனால் அத்தனை அடுக்கு பாதுகாப்பையும் மீறி பல தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பதிவில் படுகொலை செய்யப்பட்ட உலகின் முக்கியமான தலைவர்கள் யார் அவர்களின் கொலைகளுக்கு பின்னால் இருந்த காரணம் என்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆபிரஹாம் லிங்கன்

ஆபிரஹாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் 16 வது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார், மார்ச் 4, 1861 முதல் ஏப்ரல் 15, 1865 வரை பணியாற்றினார். அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அவர் ஆட்சிக்கு வந்தார். அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கு பின்னர் வழிவகுத்த சிறந்த தார்மீக, அரசியல் மற்றும் அரசியலமைப்பு முடிவுகளை எடுத்த பெருமைக்குரியவராவார். கறுப்பின அமெரிக்கர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ஆதரிக்கும் அவரது உரையை கேட்ட பிறகு லிங்கனைக் கொல்ல ஜான் பூத் திட்டமிட்டார். ஏப்ரல் 15, 1865 அன்று அவர் வாஷிங்டனில் உள்ள ஃபோர்டு தியேட்டரில் ஒரு நாடகத்தில் கலந்துகொண்டிருந்தபோது லிங்கனை சுட்டுக் கொன்றார், அப்போது அவரின் மனைவி மேரி டோட் லிங்கன் அவருக்கு அருகில் இருந்தார்.

மார்ட்டின் லூதர் கிங்

மார்ட்டின் லூதர் கிங்

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர். ஆகஸ்ட் 28, 1963 அன்று அவர் "எனக்கு ஒரு கனவு" என்ற பிரபலமான உரையை நிகழ்த்தினார். இது சிவில் உரிமைகள் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான பொறுப்பு மற்றும் 1961 ஆம் ஆண்டு சிவில் உரிமைகள் சட்டத்தை இயற்ற வழிவகுத்தது. ஏப்ரல் 4, 1968-ல் டென்னஸியல் இருந்த மெம்பிஸில் ஹோட்டலில் மார்ட்டின் ஜேம்ஸ் ரேவால் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு முன்னர், கிங்கிற்கு பல மரண அச்சுறுத்தல்கள் வந்தன.

ஜான் எஃப். கென்னடி

ஜான் எஃப். கென்னடி

ஜான் எஃப். கென்னடி 1961 முதல் 1963 வரை அமெரிக்காவின் 35 வது ஜனாதிபதியாக இருந்தார். அவர் பனிப்போரின் போது பதவி வகித்தார் மற்றும் சோவியத் யூனியனுடனான நாட்டின் உறவைப் காப்பதில் தனது பதவிக் காலத்தின் பெரும்பகுதியைக் கழித்தார். நவம்பர் 22, 1963 அன்று, மதியம் 12:30 மணிக்கு, டல்லாஸில் ஜான் எஃப் கென்னடி கொலை செய்யப்பட்டார். பின்னர் லீ ஹார்வி ஓஸ்வால்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கும் முன்னரே ஜாக் ரூபியால் கொல்லப்பட்டார்.

MOST READ:22 வயதில் தன் உயிரை கொடுத்து தன் பயணிகளை காப்பாற்றிய இந்தியாவின் உண்மையான சிங்கப்பெண் யார் தெரியுமா?

கிங் பைசல்

கிங் பைசல்

பைசல் மன்னர் 1964 முதல் 1975 வரை சவுதி அரேபியாவின் மன்னராக இருந்தார். நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் கொள்கை மூலம் நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றியதற்காக இவர் இன்றும் நினைவுகூறப்படுகிறார். இவர் தனக்கு எதிராக செய்யப்பட்ட பல சதித்திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்தார். பைசலை அவரது சகோதரரின் மகனான பைசல் பின் முசைட் சுட்டார் அதன்பின் சிகிச்சை அளிக்கும்போது சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 டெடன் கிமாதி

டெடன் கிமாதி

1950 களில் கென்யாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடிய ஒரு இயக்கமான Mau Mau-வின் தலைவராக டெடன் கிமதி இருந்தார். இவர் பிரிட்டிஷ் சிறையிலிருந்து வெளியேறிய உடனேயே 1953 இல் கென்யா பாதுகாப்பு கவுன்சிலை உருவாக்கினார். நீண்டகால தேடுதலுக்கு பின்னர் இயன் ஹென்டர்சன் இவரை கைது செய்தார், நீதிபதி ஓ கார்னர் இவருக்கு மரண தண்டனை விதித்தார். பிப்ரவரி 18, 1957 அன்று கிமதி தூக்கிலிடப்பட்டார்.

பேட்ரிஸ் லுமும்பா

பேட்ரிஸ் லுமும்பா

பேட்ரிஸ் லுமும்பா மூவ்மென்ட் தேசிய காங்கோலைஸ் கட்சியின் நிறுவனர் ஆவார். அவர் காங்கோவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரானார். லுமும்பா காங்கோவுக்காகவும், அரசாங்க ஆப்பிரிக்கமயமாக்கலுக்காகவும் வாதிட்டார். பெலிகன்களுக்கு எதிராக மீண்டும் போராடும் முயற்சியில், லுமும்பா ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா ஆகிய இருவரிடமும் பெல்ஜிய ஆதரவு படைகளை தோற்கடிக்க உதவி கோரினார். இரண்டு தரப்பிலிருந்தும் அவருக்கு உதவி மறுக்கப்பட்டது. பின்னர் அவர் சோவியத் யூனியனுக்குச் சென்றார். இதன் காரணமாகவே, செப்டம்பர் 14, 1960 அன்று, கர்னல் ஜோசப் மொபுட்டு ஒரு சதித்திட்டத்தை நடத்தினார், அதன்படி லுமும்பா சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு, ஜனவரி 17, 1961 இல் துப்பாக்கிச்சூடு மூலம் அவர் கொலை செய்யப்பட்டார்.

MOST READ:இந்த ராசிக்காரங்க பண்றதெல்லாமே பொய் சத்தியம்தானாம்.. தெரியாம கூட இவங்கள நம்பிராதீங்க...!

தாமஸ் சங்கரா

தாமஸ் சங்கரா

தாமஸ் சங்கரா 1983 முதல் 1987 வரை புர்கினா பாசோவின் தலைவராக இருந்தார். 1983 ஆம் ஆண்டில் ஒரு பிரபலமான சதி மூலம் அவர் ஆட்சியைப் பிடித்தார். சங்கரா ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்கான பல திட்டங்களைத் தொடங்கினார். அவரது சகாவான பிளேஸ் காம்போரால் நடத்தப்பட்ட சதித்திட்டத்தில் ஒரு ஆயுதக் குழுவால் அவர் கொலை செய்யப்பட்டார்.

மேரி ஃபிராங்கோயிஸ் சதி கார்னோட்

மேரி ஃபிராங்கோயிஸ் சதி கார்னோட்

மேரி பிரான்சுவா சாதி கார்னோட் டிசம்பர் 1887 முதல் 1894 வரை பிரான்சின் ஜனாதிபதியாக இருந்தார். ஜூன் 24, 1894 அன்று, லியோனில் உரை நிகழ்த்தும்போது, கார்னோட் கல்லீரலில் சாண்டே ஜெரோனிமோ கேசெரியோவால் குத்தப்பட்டார். அதன்பின் அவர் ஜூன் 25, 1894 இல் இறந்தார். கேசெரியோ அதற்கு பின்னர் தூக்கிலிடப்பட்டார்.

 மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தியின் மரணம் இன்றும் இந்திய வரலாற்றில் அகற்ற முடியாத கரையாக உள்ளது. 1920 இல், அவர் காங்கிரஸின் தலைமையை ஏற்றுக்கொண்டு இந்திய சுதந்திரத்திற்கு அழுத்தம் கொடுத்தார். ஜனவரி 30, 1948 அன்று மாலை 5:17 மணிக்கு கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திய நாதுராம் கோட்சே காந்தியை மார்பில் மூன்று முறை சுட்டார், அந்த இடத்திலேயே காந்தி இறந்தார். இந்திய வரலாற்றின் மிகப்பெரும் படுகொலையாக இன்றுவரை இதுதான் இருக்கிறது.

MOST READ:இந்திய வரலாற்றின் முக்கிய காதல் கதையான ஜோதா-அக்பரில் ஜோதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா?

ஆல்டோ மோரோ

ஆல்டோ மோரோ

ஆல்டோ மோரோ இத்தாலிய அரசியல்வாதியாகவும், 1963 முதல் 1968 வரையிலும், 1974 முதல் 1976 வரையிலும் 38 வது நாட்டின் பிரதமராக இருந்தார். பல்வேறு பதவிகளை வகித்த பின்னர், 1963-1968 மற்றும் 1974-1976 ஆம் ஆண்டுகளில் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். ரெட் பிரிகேட்ஸ் மோரோவைக் கடத்திச் சென்று இரண்டு மாதங்கள் சிறைபிடித்து வைத்திருந்தார். இத்தாலிய அரசாங்கம் ரெட் பிரிகேட்ஸ் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது. மே 9, 1978 இல் மோரோ பத்து முறை சுடப்பட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Famous World Leaders Who Were Assassinated

Here is the list of famous world leaders who were assassinated.
Desktop Bottom Promotion