Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
ஷாருக்கான் கிட்ட இருக்கற விலையுயர்ந்த 10 பொருள்கள் என்னென்னனு தெரியுமா?...
ஷாருக்கான் பயன்படுத்திய 10 விலையுயர்ந்த பொருட்கள் பற்றி தான் இந்த கட்டுரையில் உங்களிடம் பட்டியலிட்டு கொடுக்கிறோம். அதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஷாருக்கான் தான் என்பது உலகம் முழுவதும் தெரியும். ஷாருக்கானை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

யாரிடமும் பெரிதாக ஈகோ காட்டாமல் எளிமையாக, எப்போதும் சிரித்த முகத்துடன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரு நடிகர். அவருடைய சொத்து மதிப்பு கிட்டதட்ட 5100 கோடி என்று சொல்லப்படுகிறது. அதில் அவர் வைத்திருக்கும் காஸ்ட்லியான பொருள்கள் என்ன என்று பார்க்கலாம்.

விலையுயர்ந்த பொருள்கள்
பொதுவாக எல்லா பிரபலங்களிடமும் விலையுயர்ந்த பொருள்களை வாங்கிச் சேகரிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி சில பொருள்களை வாங்கும் பழக்கம் ஷாருக்கிடமும் உண்டு. அப்படி ஷாருக் தனக்கு சொந்தமாகவே வாங்கி வைத்திருக்கும் 10 விலையுயர்ந்த பொருள்களையும் அவற்றின் விலையையும் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

வேனிட்டி வேன் (Vanity van)
தனக்கு தனக்கென்று சொந்தமாக ஒரு வேனிட்டி வேன் ஒன்றை வைத்திருக்கிறார் ஷாருக். இந்த கேரவன் எல்லா சகல வசதிகளையும் உள்ளே கொண்டிருக்கிறது. அதன் விலை 3.5 கோடி ரூபாய்.

துபாய் வில்லா (Dubai Villa)
நிறைய பிரபலங்கள் துபாயில் தங்களுக்கென தனியே பிராப்பர்டிக்கள் வாங்கி வைத்திருப்பதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோலத் தான் ஷாருக்கானும் துபாயில் தனக்கென சொந்தமாக ஒரு பிரமாண்டமான வில்லாவை வாங்கியிருக்கிறார். இந்த வில்லாவினுடைய விலை 24 கோடி ரூபாய்.

தர்கா
தன்னுடைய சொந்த செலவில் 200 கோடி ரூபாய் மதிப்பில் சமயத் தொழுகை நடத்தக்கூடிய மனாத் என்று சொல்லப்படும் தர்காவை வைத்திருக்கிறார் ஷாருக்.

கார் கலெக்ஷன்கள்
ஷாருக்கிடம் விலையுயர்ந்த கார் கலெக்ஷன்கள் இருக்கின்றன. 9.50 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் (Rolls Royce Phantom) கார் வைத்திருக்கிறார்.
பகாட்டி வெய்ரன் (Bugatti Veyron) என்னும் 12 கோடி மதிப்புடைய கார் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
பெனிட்லி காண்டினெண்டல் ஜிடி (Bentley Conteinental GT) கார் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு கிட்டதட்ட 3.58 கோடி ரூபாய்.
பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) fhH கார் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு 98.8 லட்சம்.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் 1.97 கோடி மதிப்புடைய காரும் வைத்திருக்கிறார்.
50 லட்சம் மதிப்புள்ள ஆடி ஏ6 (Audi A6) கார் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
2.62 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8)
இத்தனை விலையுயர்ந்த கார்களை ஷாருக்கான் வைத்திருக்கிறார். ஒரு ஆள் இத்தனை லக்சுரி கார் வெச்சு என்னதான் பண்ணுவாரோ.

ஹார்லி டேவிட்சன் பைக்
ஹார்லி டேவிட்சன் பைக் (Harley Davidson) ஒன்றையும் வைத்திருக்கிறார். இதன் மதிப்பு கிட்டதட்ட 13 லட்ச ரூபாய்.

டேக் ஹியூயர் கெரேரா (Tag Heuer Carrera)
13.5 லட்சம் மதிப்பு கொண்ட வாட்ச் ஒன்றையும் வைத்திருக்கிறார். என்னது வெறும் வாட்ச் மட்டும் 13 லட்சமானு வாயைப் பிளக்காதீங்க. அவருக்கு அதெல்லாம் சாதாரணம்.

லண்டன் வீடு
லண்டனிலும் ஷாருக்கானுக்கு ஒரு வீடு இருக்கிறது. அந்த பிரமாண்ட வீட்டின் மதிப்பு 172 கோடி ரூபாயாம்.

ஜெட் விமானம்
சொந்தமாக ஷாருக்கான் ஒரு ஜெட் விமானமும் வைத்திருக்கிறார். அதன் மதிப்பு கிட்டதட்ட 3.72 கோடி ரூபாய்.
ரெட் சில்லீஸ் எண்டர்டெய்ன்மெண்ட்
ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் என்னும் ஒரு நிறுவனமும் வைத்திருக்கிறார். இதனுடய விலைமதிப்பு 500 கோடி ரூபாய்.

கேகேஆர் டீம் (KKR TEAM)
இது வேற ஒன்னும் இல்லங்க. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் டீம் தான். இந்த டீமின் மொத்த ஏல மதிப்பு 739 கோடி ரூபாய்.
இவ்வளவு விலையுயர்ந்த பொருள்களை வைத்திருக்கிறார். என்ன யோசிக்கிறீங்க. இது ஏதாவது ஒன்ன நம்மகிட்ட கொடுத்தாலே போதும் நம்ம லைஃபையே செட்டில் பண்ணிடலாம்னு தானே.



Click it and Unblock the Notifications
