Just In
- 47 min ago
இந்த ராசிக்காரர்கள் செக்ஸ் ஆல்கஹால் புகைபிடிப்பது போன்ற பழக்கத்திற்கு அடிமையா இருப்பார்களாம்.. !
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (28.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- 15 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 16 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
Don't Miss
- News
ராணுவ ரகசியங்களை வாட்ஸ்-அப்பில் பேசிய விவகாரம்...அர்னாப் கோஸ்வாமி மீது போலீசில் புகார்!
- Automobiles
சில பொன்னேவில்லே பைக்குகளின் விற்பனையை நிறுத்தி கொண்டது ட்ரையம்ப்!! இந்தியாவில் இனி இவை கிடைக்காது
- Sports
கடைசி ஒரு பால்.. வெற்றிபெற 5 ரன் தேவை.. இளம் வீரர் செய்த "அசால்ட்டு" சம்பவம்.. வைரல் வீடியோ!
- Movies
'நம் காதல் மட்டும்..' தனது காதலர் பிறந்த நாளுக்கு நடிகை பிரியா பவானி சங்கரின் டச்சிங் போஸ்ட்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீலாது நபி ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு தெரியுமா?
நபிகள் நாயகத்திற்காகவும் அவருடைய போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் ஒரு நாள் மீலாது நபி/மிலாடி நபி. இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தின் 12 ஆம் நாள் நபிகள் நாயகம் மெக்காவில் பிறந்தார். நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னர் அவருடைய தந்தை இறந்துவிட்டார். தாயும் நபிகளின் 6 ஆம் அகவையில் காலமானார். பின்னர் முகமது அவர்களின் தாத்தா அவரை வளர்த்து வந்தார்.
அவரும் அடுத்த சில ஆண்டுகளில் காலமானதால் சிறிய தகப்பனார் முகமது நபியை அரவணைத்து வந்தார். சிறு வயதிலியேயே மற்றவர்களிடம் நம்பிக்கையை விதைத்தவர் நபிகள் நாயகம். வாழ்வில் ஒழுக்கம் மற்றும் உண்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நபிகள் நாயகத்தை கடவுளாக நினைத்து வணங்கினர்.
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாது நபி என்று கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் நாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. 29 அக்டோபர் மாலை முதல் மறுநாள் வரை இந்த விழாவை கொண்டாடலாம்.

நபிகள் நாயகம் என்பவர் யார்?
முகமது அவர்கள் இஸ்லாமிய மதத்தின் கடைசி தீர்க்கதரிசி மற்றும் நபிகள் ஆவார். இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இறைவன் முகமது நபிகள் வழியாக வெளிப்படுத்தினார் என்று நம்பப்படுகிறது. நபிகள் அதனை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு வெளிப்படுத்தினார். எல்லா தீர்க்கதரிசிகளிலும் மிகவும் சிறந்தவராக முகமது நபிகள் போற்றப்படுகிறார். வாழ்க்கை முழுவதிலும் அவர் உண்மை மற்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார்.

ஷியா சமூகத்தினர் கூறும் வேறுபட்ட வரலாறு:
இருப்பினும் இந்த விழாவிற்கான கொண்டாட்டத்தில் சுன்னி சமூகத்தினர் மற்றும் ஷியா சமூகத்தினர் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. முகமது நபிகள் தனக்கு அடுத்தபடியாக ஹஸ்ரத் அலியை இந்த நாளில் தேர்ந்தெடுத்தார் என்று ஷியா சமூகத்தினர் நம்புகின்றனர்.

சமய வழிபாட்டு பாடல்கள் பாடப்படும்:
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இறை வழிபாட்டு பாடல்கள் பாடி முகமது நபிகளுக்கு அர்ப்பணிப்பார்கள். இந்த பாடல்களை பாடுவதும் கேட்பதும் மனித குலத்திற்கு நன்மையை விளைவிக்கும். ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்காலத்தில் நன்மையையும் இறந்த பிறகு ஆசீர்வாதத்தையும் கொடுக்கும். இந்த நாள் முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்படும்.

நன்கொடைகளுக்கு அதிக முக்கியத்துவம்:
ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு விழாவிலும் நன்கொடைகள் அதிக முக்கியத்துவம் பெறும். அது போலவே இஸ்லாமிய மதத்திலும் நன்கொடைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஏழைகளுக்கு தானம் தருவது ஒரு நடைமுறையாக இங்கு கருதப்படுகிறது. உணவு மற்றும் இனிப்புகளை தேவை உள்ளவர்களுக்கு இந்நாளில் வழங்குவது மரபு. வீடுகளை அலங்கரித்து நபிகள் நாயகத்தின் எழுச்சியூட்டும் கதைகளை கூறும் ஊர்வலங்களும் நடைபெறும்.

ஊக்கம் தரும் வாழ்க்கை:
இந்த நாளில் பலவித கொண்டாடட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு உண்டு. வாழ்க்கை முழுவதும் ஒழுக்கத்தை கடைப்பிடித்த நபிகள் அவர்களின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. மக்கள் இதே குணங்களை தனக்குள் வளர்த்துக் கொள்வதால் அவர்களுடைய வாழ்வும் சிறப்பானதாக மாறும்.