Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காதல் கணவனை கை பிடிக்கணுமா? இந்த பரிகாரங்களை பண்ணுங்க...
திருமணத்தடைகள் நீங்கவும், மனதிற்கு பிடித்தவரை கணவனாக அமையமும் சுயம்வர பார்வதி தேவி மந்திரம் சொல்லி வழிபடலாம். திருமணம் நடைபெறுவதில் ஏற்பட்ட தடைகள் நீங்குவதோடு வீட்டில் கெட்டி மேளச் சத்தம் கேட்கும்.
கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். அந்த கல்யாணம் எல்லோருக்கும் எளிதில் நடைபெற்று விடாது. ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போனாலே ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லி திருமணம் கைகூடி வருவது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். திருமண தடை நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று யோசித்து கோவில் கோவிலாக ஏறி இறங்குவார்கள். சுயம்வர பார்வதி தேவியை மனதார நினைத்து மூலமந்திரம் சொல்லி வணங்கினால் திருமண தடை நீங்குவதோடு பெண்களின் மனதிற்கு பிடித்த நபர் கணவனாக வருவார்.

திருமணம் மட்டுமின்றி, தம்பதி ஒற்றுமை, விவாகரத்து ஆகாமல் தடுக்கவும், குழந்தை பாக்கியதிற்கும் ஸ்வயம்வர பார்வதி மூல மந்திரம் சிறப்பான பலன் அளிக்கும். பௌர்ணமி நாட்களில் நடைபெறும் சுயம்வர பார்வதி தேவி யாகத்தில் பங்கேற்கலாம்.
அது தவிர சிவ ஆலயங்களிலும் விஷ்ணு ஆலயங்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை கண்ணார கண்டு தரிசனம் செய்தாலே போதும் திருக்கல்யாணம் கூடி வரும்.

கல்யாண வரம் தரும் மந்திரம்
ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஷ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆகர்ஷ ஆகர்ஷாய நமஹ:
என்ற சுயம்வர பார்வதி மந்திரத்தை துர்வாச முனிவர் அருளியுள்ளார். பரமசிவனை திருமணம் செய்ய பார்வதி அருளிய மந்திரம். காதலிப்பவர்களுக்கும் திருமணம் நடைபெறுவதில் தடைகள் இருந்தால் இந்த மந்திரத்தை சொல்லி வழிபட காதல் கைகூடி திருமணத்தில் முடியும்.

கணவன் மனைவி நெருக்கம்
திருமணம் நடைபெற்று சில மாதங்களிலேயே சிலருக்கு பிரிவு வரும். அதுவும் ஏதாவது ஒரு தோஷத்தினால்தான் வரும். திருமணமான சில நாட்களில் பிரிந்த தம்பதிகள் கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்காமல் சுயம்வர பார்வதி மந்திரத்தை தினசரியும் படிக்கலாம் கணவன் மனைவி இடையே மனதளவில் ஒற்றுமை அதிகரிக்கும். பிரிவினை நீங்கி நெருக்கம் அதிகமாகும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கிரக தோஷங்கள்
ஆண் பெண் கிரகங்களில் உள்ள தோஷங்கள் திருமண தடையை மட்டுமல்லாது திருமணத்திற்கு பின்னரும் கணவன் மனைவி இணைய விடாமல் தடுக்கும். தடை நீங்கி இனிமையான இல்லறம் அமைய ஒரு முக்கியமான ஜோதிட பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்வதன் மூலம் தசாபுத்தி சரியில்லாமல் இருந்தால் கூட தடைகள் நீங்கி திருமணம் கை கூடி வரும் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

ராகு கால பூஜை
செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமைதான் இந்த பரிகாரம் செய்ய ஏற்ற தினம். வீட்டில் விளக்கேற்றி வைத்து ஐந்து வெற்றிலை ஐந்து மஞ்சள் துண்டு ஐந்து பாக்கு வணங்கவேண்டும். சுயம்வர பார்வதி மந்திரம் சொல்லி வணங்கி ராகு காலத்தில் அருகில் இருக்கும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக தர வேண்டும். சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கொள்ளலாம். இதனால் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.

அருள் தரும் அம்மன்
இப்போது கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வீட்டிலேயே இந்த பரிகார பூஜையை செய்யலாம். கோவில்கள் திறந்த பின்னர் வெள்ளி, செவ்வாய் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் முன்னால் வெற்றிலை மஞ்சள் பரிகாரம் செய்து வழிபடலாம். மனம் போல மாங்கல்யம் கிடைக்க துர்க்கை அம்மனும், பார்வதி அன்னையும் அருள்புரிவார்கள்.



Click it and Unblock the Notifications