Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
ஆடிப்பூரம் முடிஞ்சிடுச்சு... இன்னைக்கு உங்க ராசிக்கு என்னலாம் நடக்கும்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பலருக்கும் ஒரு நாளைத் துவங்குகிற பொழுது, இன்றைக்கு முழுவதும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே தினமும் எழுந்தவுடன் அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குகிறோம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கடன் உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய முடிவுகள் எடுப்பதில் கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பணிகளில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சுப செய்திகளின் வாயிலாக மகிழ்ச்சி பெருகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம்அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்
விவாதங்களின் மூலமாக உங்களுக்கு சூழலை அமைத்துக் கொள்வீர்கள். ஆன்மீகத்தில் உங்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். புதிய நபர்களின் மூலமாக தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும். பெரிய மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் வாயிலாக, சுப விரயச் செலவுகள் உண்டாகும். பணிகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
அரசாங்கத் தரப்பிடமிருந்து நீங்கள் எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். சொந்த ஊருக்கான பயணங்களின் மூலமாக உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

கடகம்
குடும்ப உறுப்பினர்களுடைய ஆதரவினால் பொருளாதார மேன்மைகள் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய தொழில் முயற்சிகளினால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கிறது.

சிம்மம்
பங்குதாரர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வீர்கள். கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலமாக சுப செய்திகள் வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கான யாத்திரையை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

கன்னி
வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள நீங்கள் போடுகின்ற திட்டங்கள் யாவும் நன்மையே உண்டாக்கும். நிர்வாகத்தில் உங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய சூழல்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் செய்ய நினைத்த காரியங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மனை, வீடு சம்பந்தமான விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் இருக்கும்.

துலாம்
உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரியும் சக ஊழியர்களைக் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். புனித யாத்திரைகள் செல்வதற்கான முயற்சிகள் செய்வீர்கள். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நண்பர்களின் மூலமாக புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கப் போகின்ற பண உதவியினால் இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையல்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்து அமைதியுடன் நடந்து கொள்வது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

தனுசு
மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கால தாமதமாகக் கிடைக்கும். செய்கின்ற வேலைகளில் பிறருடைய விமர்சனங்கள் வரும். அதையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். அதேசமயம் செய்கின்ற காரியங்களை பதட்டம் இல்லாமல் நிதானத்துடன் செய்து முடியுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமாகவும் இருக்கும்.

மகரம்
உறவினர்களுக்கு இடையே இருக்கின்ற உறவு நிலைகள் மேம்படும். பணப் புழக்கத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் எடுத்துரைக்கின்ற பேச்சுக்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கும்பம்
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் பெறுவதற்கான முயற்சிகளை செய்வீர்கள். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல்கள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் அமையும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவதற்கான செயல்திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறாக காவி நிறமும் இருக்கும்.

மீனம்
பிரபாலமானவர்களுடைய நட்பு கிடைக்கும். தொழிலில் உங்களுடைய பங்கு தாரர்களுடைன் கொஞ்சம் அமைதியுடன் நடந்து கொள்ளுங்கள். பிறருக்கு உதவும் போதும் கொஞ்சம் அமைதியுடன் இருங்கள். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மனதுக்குள் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையாக அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications