Latest Updates
-
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...!
இன்றைய நாள் உங்க ராசிக்கு எப்படி இருக்குனு தெரிஞ்சிக்க வேண்டாமா? இத படிங்க தெரிஞ்சிக்கலாம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள். சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காணமோ என்று கூட நினைக்கலாம்.

அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம். எந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் பாராட்டுக்களும் புகழும் கிடைக்கப்போகின்றன என்று தெரிந்து கொள்வோம். குறிப்பாக இன்று வியாழக்கிழமை என்பதால் சாய்பாபாவின் மாலை நேர பூஜைகளில் கலந்து கொண்டால் மேஷம், துலாம், விருச்சிகம் மற்றும் மகர ராசிக்காரர்கள் இறைவனின் அருளோடு லாபமும் அடைய முடியும்.

மேஷம்
எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும் நாள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் திருப்தியான சூழல்கள் உண்டாகும். நீங்கள் செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பிள்ளைகளுக்குத் திருமண வரன்கள் வந்து சேரும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே எண்ணங்களின் ஒற்றுமையினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
நிலுவையில் இருந்து வந்த பண வரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். புதிய முதலீடுகளில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வேளாண்மை சம்பந்தப்பட்ட தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் நீங்கி, புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். திருமண வரன்கள் கைகூடி வரும். வாகன வசதிகள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்
வீட்டின் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேற்றமான சூழலே காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகிவிடும். பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தருகிற எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

கடகம்
சமூக சேவை புரிகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டாகும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வுகள் மேம்படும். உடன் பிறப்புகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணிகளில் தேவையில்லாத அலைச்சல்களும் அதனால் வீண் விரயங்களும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
இசைக் கலைஞர்களுக்கு உங்களுடைய திறமைக்கேற்ற முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுக்கான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பயணங்களில் இருந்து வந்த தடைகளும் இன்னல்களும் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி
உங்களுடைய வாக்கு வன்மையின் காரணமாக உங்களுக்கு பெரும் லாபம் உண்டாகும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிக்கும். புதிய நபர்களுடைய ஆதரவினால் சுபிட்சம் பெருகும். தந்தையினுடைய உடல் நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீடு மற்றும் மனை விவகாரங்ளில் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
நீங்கள் எதிர்பாராத சில முக்கிய செலவுகளின் மூலமாக நெருக்கடியான சூழல்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையினால் மனச்சோர்வு உண்டாகும் வாய்ப்புண்டு. நண்பர்களிடம் வீணான விதாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சந்திராஷ்டமம் என்பதால் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். பெரிய மகான்களுடைய தரிசனமும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். மனதில் புதிய எண்ணங்கள் உருவாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தையின் பரம்பரை சொத்துக்களில் இருந்து வந்த சின்ன சின்ன சிக்கல்களும் குறைய ஆரம்பிக்கும். செய்கின்ற தொழிலில் பல புதிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

தனுசு
தொழிலில் உங்களுக்கு இருக்கின்ற திறமை மற்றும் நம்பிக்கையினால் உங்களுடைய மதிப்புகள் அதிகரிக்கும். புதிய பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
பொதுக்கூட்டங்களில் நீங்கள் பேசுகின்றபோது உங்களுக்கான ஆதரவுகள் அதிகரிக்கும். வழக்குகளில் இழுபறி நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடைய பாராட்டுக்கள் கிடைக்கும். நீர் சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். அதிக கடன் தொல்லையால் மன வருத்தங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்
பங்குதாரர்களுடைய உதவியினால் தொழிலில் பல புதிய வாய்ப்புகள் உண்டாகும். பொது நல காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கின்ற போது, வீட்டில் உள்ள பெரியோர்களின் முக்கிய ஆலோசனைகளும் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாகனப் பயனங்களில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மீனம்
தாய் வழியிலாக உறவுகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும் வாய்ப்புண்டு. பணிகளில் ஈடுபடுகிறவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் கால தாமதங்கள் உண்டாகலாம். அலைச்சல்கள் உண்டாகும். வேலைப்பளுவும் முக்கிய உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











