For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரர்கள் இன்று பெரிய சிக்கலில் மாட்ட வாய்ப்பிருக்காம்... கவனமா இருந்தா தப்பிக்கலாம்...

|

பிரச்சனை இல்லாத வாழ்க்கை யாருக்கு தான் உள்ளது? வருகின்றன பிரச்சனையை எதிர்கொண்டார் தான் அதனை கடந்து செல்ல முடியும். அந்த வகையில், நாள்தோறும் ஏற்படக்கூடிய நல்லது கெட்டதுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கேற்க அவற்றை சுலபமாக கையாளலாம் அல்லவா? அதற்காக தான் ராசிபலன் உதவுகிறது. சரி உங்கள் ராசிக்கு இன்றைய தினம் என்ன பலன் என்று இப்போது பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைய தினம் உங்களது பலம் மேலும் அதிகரிக்கக்கூடும். நம்பிக்கை மற்றும நேர்மறையான எண்ணங்களுக்கு சொந்தக்காரரான நீங்கள், எந்தவொரு கடினமான வேலையையும் சுலபமாக முடித்து விடுவீர்கள். அலுவலகத்தில் கூடுதல் பணி சுமை கொடுக்கப்பட்டாலும், அவற்றை சரியான நேரத்தில் முடித்து விடுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு, சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். வெளிநாட்டு வர்த்தகம் சற்று சவாலாக அமையக்கூடும். பண பிரச்சனைகளில் அவசரத்தை கையாளாமல் இருந்தால் அமைதியான சூழல நிலவும். பெற்றோரின் பாசமும், ஆசிர்வாதமும் பெறுவீர்கள். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:40 மணி முதல் 12:25 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

வேலை தேடுபவர்களுக்கு இன்று கவலையும், மனஅழுத்தமும் அதிகரிக்கக்கூடும். பொறுமையை கையாளும் பட்சத்தில் பிரச்சனை விரைந்து தீரும். வணிகர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரிய ஆர்டர் கை நழுவ வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். சமீபத்திய முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தை தராது. அவரச முடிவுகள் எடுப்பதை கைவிடுவது நன்மை பயக்கும். குடும்பத்தாரோடு நேரம் செலவிட முடியவில்லையே என்ற வருத்தம் ஆட்கொள்ளும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

மிதுனம்

மிதுனம்

ஆவணங்கள் கையாளும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். தவறும் பட்சத்தில் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். செய்யும் வேலையில் முழு ஈடுபாடு காட்ட வேண்டிய நாள். உயர் அதிகாரிகளிடம் ஒதுபோதும் பொய் உரைக்காமல் இருந்தால் தேவையற்ற தொல்லைகளில் சிக்காமல் இருக்கலாம். வணிகர்களுக்கு புது ஆர்டர்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கடின உழைப்பு மற்றும் நேர்மை, உரிய பலனை விரைவில் கொடுக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மனஅழுத்தம் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் இளையவர்களோடு மனகசப்பு ஏற்படக்கூடும். அதிகப்படியான கவலையை ஒதுக்கினால், உடல்நிலை மோசமடைவதை தடுத்திடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1:55 மணி முதல் இரவு 7:00 மணி வரை

கடகம்

கடகம்

மனது சரியில்லை என்றால் ஆல வழிபாட்டை மேற்கொள்வது அமைதி தரும். வணிகர்கள் பணம் சார்ந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். இன்றைய தினம் எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகப்படியான பணி சுமையால் மனஅழுத்தம் உண்டாகக்கூடும். மனஅழுத்தத்தை வெளிகாட்டாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை துணையின் பேச்சு விரக்தியை ஏற்படுத்தக்கூடும். கவனமாக நடந்த கொள்ள வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:20 மணி முதல் மாலை 4:00 மணி வரை

சிம்மம்

சிம்மம்

வேலை பளுவால் உண்டான மனஅழுத்தம் மறையக் கூடிய நாள். புதியதொரு நன்னாளை உண்டாக்குவதற்கான நல்ல வாய்ப்பு. இதனை முழுமையான பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணையின் கனிவான பேச்சுக்கள் வாழ்வில் இனிமையையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். வணிகர்கள் இன்று மிகவும் பரபரப்பாக இருக்கப் போகிறீர்கள். தொழிலை மேம்படுத்த கடுமையாக உழைப்பீர்கள். விடாமுயற்சி கைமேல் பலனை கொடுக்கும். பொருளாதார நிலை சீராக இருந்தாலும், சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

கன்னி

கன்னி

நீண்ட நாட்களாக பாடாய் படுத்தி வந்த தொழில் மற்றும் குடும்ப பிரச்சனைகள் நீங்குவதற்கான வாய்ப்புள்ளது. உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் தேவையற்ற மனகசப்பை நீக்கிடலாம். இந்த பிரச்சனை உங்களது வாழ்க்கைக்கு பெரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வியாபாரிகள் நல்லதொரு லாபத்தை எதிர்பார்க்கலாம். மாற்று வேலை குறித்த யோசனையை கொஞ்ச நாளைக்கு தள்ளிப் போடுங்கள். பொருளாதார நிலைக்கு தகுந்தவாறு செலவு செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

துலாம்

துலாம்

வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது மிகவும் முக்கியமான நேரமாகும். உங்கள் உழைப்பின் மீது கவனம் செலுத்த வேண்டிய காலம். அவசர அவசரமாக எந்தவொரு வேலையையும் செய்யாதிருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் ஏற்படக்கூடிய சிக்கலை, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வரவேண்டும். வணிகர்களுக்கு இந்த நாள் சற்று சவால் நிறைந்தது. சுலபமான வேலைகளின் கூட நிறைய தடங்கல்களை சந்திக்க நேரலாம். குடுமப வாழ்க்கையில், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். சாதகமற்ற சூழலில் கூட குடும்ப உறுப்பினர்களின் முழு ஆரதவு கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:15 முதல் 3:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

திருமண வாழ்க்கைக்கு இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வேண்டிய நாள் இன்று. உங்கள் காதலியின் அனைத்து குறைகளையும் நீக்க முயற்சிப்பீர்கள். உறவு வலுவாக இருக்கும். நீங்கள் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மரியாதை மேலும் அதிகரிக்கும். நீண்ட காலமாக, தொந்தரவாக இருந்துவந்த கடனில் இருந்து இன்று விடுபடலாம். மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 7

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:00 முதல் 4:20 மணி வரை

தனுசு

தனுசு

உடல்நிலை சற்று மோசமாவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய நாள். உண்ணும் உணவு மற்றும பருகும் பானத்தை சிறப்பு கவனம் செலுத்துங்கள். காரசாரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், அவை தீங்கு விளைவிக்கக்கூடும். சேமிப்பு கரையும் அளவிற்கு செலவு ஏற்படலாம். சூழ்நிலையை சரியாக கையாள தவறினால் பெரும் நிதி நெருக்கடியை சந்திக்கக்கூடும். உங்களது மனநிலையை இழந்தால், செயல்கள் மோசமானதாக மாறக்கூடும். உங்களது தவறான அணுகுமுறை அன்புக்குரியவர்களை வருத்தமடைய செய்திடும். அமைதியான முறையில் பிரச்சனைகள் தீர்க்க முயற்சியுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 5:15 மணி வரை

மகரம்

மகரம்

உயர் அதிகாரிகளிடம் நீங்கள் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்படலாம். உங்களது பலத்தை நம்பும் பட்சத்தில் வெற்றி நிச்சயம். சீரான வர்த்தகம், மன நிம்மதி என வணிகர்களுக்கு இன்றைய தினம் நல்லதாகவே அமையும். இருப்பினும், இன்றைய தினம் எந்தவொரு பெரிய வேலையிலும் ஈடுபட வேண்டாம். செலவுகள் அதிகரிக்கக்கூடிய நாள். நண்பர்களுக்கு கடன் கொடுத்து உதவுவீர்கள். குடும்ப தகராறுகள் தவிர்ப்பது நல்லது. புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டிய நாள். பெரியவர்கள் மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 17

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:00 மணி முதல் 10:20 மணி வரை

கும்பம்

கும்பம்

பண வரவின் அடிப்படையில் இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாரமான நாள். பண நெருக்கடி காரணமாக நின்றுபோன காரியங்கள் நிறைவடைய வாய்ப்பு அதிகமுள்ளது. வேலை பார்ப்பவர்கள், தங்களது உயர் அதிகாரிகளின் முன்னிலையில் மரியாதையுடன் நடந்து கொள்வது நல்லது. நீங்கள் செய்யும் வேலையில் திருப்தி அடையாவிட்டால், செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள். தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை, மகிழ்ச்சியாக இருக்கும். உறவுகள் பலம் பெறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் பிற்பகல் 2:55 மணி வரை

மீனம்

மீனம்

இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். பிறரது நிதி தேவைக்கு உதவலாம். இத்தகைய உன்னதமான வேலையைச் செய்வதன் மூலம் சமூகத்தில் உங்கள் மரியாதையை அதிகரிக்கச் செய்யும். மன அமைதியை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் நடத்தை உங்களை பொறுத்தவரை சரியாக இருக்காது. இன்றைய தினம் அமைதியாக இருப்பது நல்லது. அலுவகத்தில் வேலை பளு அதிகரிக்கக்கூடும. வணிகர்கள் இன்று ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:35 மணி முதல் 10:20 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 28th November 2020 Saturday In Tamil

Check out the daily horoscope for 28th November 2020 Saturday in Tamil. Read on.
Story first published: Saturday, November 28, 2020, 5:00 [IST]