For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய தினம் இந்த ராசிக்காரர்கள் சற்று உஷாராக இருக்க வேண்டியது அவசியம்...

|

ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் மிகவும் முக்கியமானது. விடியும் ஒவ்வொரு நாளும் நமக்கு நல்லதாகவே நடக்க வேண்டும் என்று தின் அனைவருமே நினைப்போம். அந்த வகையில், பெரும்பாலானோர் ஒவ்வொரு நாளை தொடங்குவதற்கு முன்பும் ராசிபலன் பார்த்துவிட்டு தான் தொடங்குவர்.

ராசி பலன் பார்ப்பதன் மூலம் அன்றைய தினத்தில் நிகழவிருப்பவை குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப அந்த நாளை சிறப்பாக அமைத்துக் கொள்ள உதவும். சரி வாருங்கள், இன்றைக்கு உங்கள் ராசிக்கு என்னென்ன பலன் என்பதை தெரிந்து கொள்வோம்... இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

தொழில் புரிவோருக்கு முதலீட்டிற்கான வாய்ப்புகள் தேடி வரக்கூடும். ஆனால், அவை குறித்து முடிவை சற்று புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டியது அவசியம். பணி புரிவோருக்கு, அவர்களது வேலையில், மடிக்கணினி அல்லது கணினி மூலம் சில தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இருப்பினும், பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிட்டும் என்பதால் மன குழப்பத்தை தவிர்த்திடவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து காணப்படும். குடும்பத்தாரோடு நேரம் செலவிடுவதற்கான சிறந்த நாள். வாழ்க்கைத் துணையுடனான அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 மணி முதல் மதியம் 12 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

உங்களது செல்வ நிலை உயருவதற்கான நேரம் வந்துவிட்டது. கிடைக்கும் செல்வத்தை முறையாக பயன்படுத்துவதன் மூலம், சரியான லாபத்தை பார்த்திடலாம். எந்தவொரு இக்கட்டான சூழலையும் சுமூகமாக கையாளும் உங்களது திறனுக்கு அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களது வேலையால் மகிழ்ச்சி காண்பர். அகங்காரம் எனப்படும் உணர்வுகளை சற்று விலக்கி வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். வாழ்க்கை துணையிடம் கனிவாக நடந்துக் கொள்ளுங்கள். சிறு விஷங்களுக்கு கூட கோபப்படக்கூடிய உங்களது குணம் உறவை பலவீனமடைய செய்துவிடும். எனவே, கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மனஅழுத்தத்தை குறைப்பதன் மூலம் உடல்நிலை மோசமடையாமல் காத்திடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 6

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை

மிதுனம்

மிதுனம்

நீண்ட காலமாக தள்ளிப்போட்ட வேலையை உடனடியாக முடிக்க முயற்சிக்கவும். உயர் அதிகாரிகளின் கடுமையான அணுகுமுறை தொந்தரவாக அமைந்தாலும், எந்தவொரு சூழலிலும் பொறுமையை கையாள வேண்டியது அவசியம். செய்யும் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பிறர் மனம் புண்படும்படி யாரையும் கிண்டல் செய்யாமல் இருப்பது நல்லது. பெற்றோரின் ஆதரவுடனும், ஆசிர்வாதத்துடனும் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். முறையான சேமிப்பு, எதிர்கால திட்டத்தில் இடையூறு ஏற்படாமல் தடுத்திடும். உடல் நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை

கடகம்

கடகம்

மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டிய நாள். தேவையில்லாமல் சிந்தனை பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். நிலுவை பணிகளை உடனே முடித்து விடுங்கள். சோம்பறி தனத்திற்கு இடம் கொடுத்தால் வேலை கடினமாகிவிடும். செய்யும் வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டியது நாள் இது. குடும்ப உறவுகள் வலு பெறும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு, இன்று பிரச்சனை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை

சிம்மம்

சிம்மம்

வியாபாரம் செய்வோருக்கு, வேலை மெதுவாக நடப்பதை கண்டு சிறு மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம். பண நெருக்கடிக்கு ஆளாகினாலும், விரைந்து அதிலிருந்து மீண்டு வந்து பிரச்சனையை சரி செய்து விடுவீர்கள். வெளி கோபத்தை வீட்டிர் காண்பிக்காமல் இருப்பதன் மூலம், வீட்டில் சண்டைகளை தவிர்த்திடலாம். எதிர்மறை எண்ணங்களை விலக்கிடுங்கள். உங்களது தேவையற்ற கோபம், குடுபத்தாரின் விமர்சனத்திற்கு ஆளாக்கிவிடும். குடும்பத்தாரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான வழிகளை தேடுங்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பிரிவு நேராமல் தடுத்திடலாம். மாலை வேளையில் நண்பர்கள் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை

கன்னி

கன்னி

முதலீடு விஷயத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பது நல்லது. அவசர முடிவு அவஸ்தையும் முடியும். வேலை செய்யும் இடத்தில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். சாதூர்யமான செயலால் அதனை சுலபமாக கடந்து வந்திட முடியும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டுமென்றால், முதலில் உங்களது மனஅமைதி அவசியம். வாழ்க்கை துணையுடனான நெருக்கும் அதிகரிக்கும். ஆரோக்கியமான நன்றாக இருந்தாலும், அதிகமாக ஓடுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நேரம்: அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை

துலாம்

துலாம்

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களது நண்பரை சந்திக்கக்கூடும். அவருடன் நேரம் செலவிடுவதன் மூலம் மன அமைதி கிட்டும். வீட்டு சூழலை பொறுத்தவரை, சற்று மனஅழுத்தம் நிறைந்ததாக காணப்படும். பேசும் பேச்சில் நிதானம் தேவை. வேலை பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வர்த்தகவர்கள் சற்று பரபரப்பான நாளாக இருக்கும். தொழில் தொடர்பாக அதிகம் அலைய நேரிடலாம். வியாபாரம் தொடர்பாக கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம். சுகாதாரம் பேணுவதன் மூலம் நோய்தொற்று ஏற்படாமல் தவிர்த்திடலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட மதிப்பெண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் 6:30 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பீர்கள். இன்று அன்புக்குரியவர்களிடையே அதிக நேரம் செலவிட விரும்புவீர்கள். கடந்த சில நாட்களாக இருந்து வந்த வேலை சுமை மற்றும் வீட்டு பிரச்சனைகளால் வருத்தப்பட்டீர்கள். ஆனால் இன்றைய தினம் சிறப்பானதாக அமையும். வாழ்க்கை துணையுடனான நெருக்கம் அதிகரித்து, உறவு வலு பெறும். வியாபாரத்தில் திடீர் பிரச்சனை முளைக்கும். பொருளாதார நிலையை மேம்படுத்துவதன் மூலம் அதனை சரிசெய்திடலாம். ஆரோக்கியம் சாதகமானதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:30 மணி முதல் இரவு 11 மணி வரை

தனுசு

தனுசு

இன்று அதிர்ஷ்டம் கொஞ்சம் கை கொடுத்தாலும், விஷயங்கள் சாதகமாக இருக்காது. மன கலக்கத்தால் பதற்றமாக காணப்படுவீர்கள். இல்லற வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக தேவையற்ற பிரச்சனைகள் தலை தூக்கலாம். குடும்ப பிரச்சனைக்கு முற்றிப்புள்ளி வைக்க நினைத்தால், உங்களது மனநிலையை சாந்தப்படுத்தி, அன்புடனும், பணிவுடனும் நடந்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிய காலமிது. தொழில் துறையில், ஏற்றஇறக்கங்கள் காணப்படும். கடும் உழைப்பாளியாக இருந்தாலும், வேலை அழுத்தம் தொந்தரவை தரக்கூடும். தொழில் மற்றும் இல்லற வாழ்க்கையால் மனஅழுத்தம் அதிகரிக்கக்கூடிய நாளாக இது உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2:45 மணி முதல் 9:30 மணி வரை

மகரம்

மகரம்

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து காணப்படும். வாழ்க்கை துணையுடன் சிறந்த புரிதல் ஏற்படும். வாழ்க்கையில் காணப்பட்ட சிறிது ஏற்ற இறக்கமான சூழ்நிலை ஏற்படுத்திய வருத்தம் மறைவதற்கான நேரம் வந்துவிட்டது. கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள். அன்புக்குரியர்களுடன் நேரம் செலவிடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றிடலாம். உடன் பணிபுரிவோருக்கு ஏதேனும் தீங்கு நினைத்தால், அது மீண்டும் உங்களுக்கே வந்து சேரும். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9:15 மணி வரை

கும்பம்

கும்பம்

நீண்ட காலமாக இழுபறியில் இருந்த வழக்கு நல்ல படியாக முடிவிற்கு வரும். பண வரவு நன்றாக இருக்கும். நிதி தொடர்பான விவகாரத்தில் சற்று முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் எடுப்பது சிறந்தது. கோபத்தை குறைப்பதன் மூலம் முன்பு போல வாழ்க்கையில் அன்பையும் உற்சாகத்தையும் வரவழைக்க முடியும். நண்பர்களை சந்திக்க நேரிடலாம். வேடிக்கையாக கூறிய வார்த்தைகளை கோபமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். செய்யும் வேலையில் சற்று பரபரப்பாக காணப்படுவீர்கள். விருப்பத்துடன் ஒன்றை செய்ய தொடங்கும் போது, மிக எளிதாக அந்த காரியத்தை செய்து முடிக்க முடியும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: காலை 7: 15 மணி முதல் மதியம் 2: 05 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 27th November 2020 Friday In Tamil

Check out the daily horoscope for 27th November 2020 Friday in Tamil. Read on.
Story first published: Friday, November 27, 2020, 5:00 [IST]