For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

12 ராசிக்காரங்களும் வீட்டிற்குள்ளேயே இருந்தா ஆரோக்கியமாக இருக்கலாம்...

|

இன்றைய தினம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்களா? சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள் இது உங்களின் வெற்றிகரமான நாளாக அமையும். 12 ராசிக்காரர்களும் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பது உங்க ஆரோக்கியத்தினை அதிகமாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இன்றைக்கு உங்களுக்கு பணம் விரையமாக வரும். இன்றைக்கு பண விரயத்தை தவிர்க்க செலவுகளை கட்டுக்குள் வைப்பது நல்லது. பயணம் இனிதாகவும் பொழுது போக்காகவும் அமையும். வாகனத்தில் மித வேகத்தை கடைபிடிக்கவும். புதிய வேலையை தொடங்க அருமையான நாள். சிறு தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாள். உங்கள் புதிய முயற்சிகள் எவ்வித தடங்களும் இல்லாமல் வெற்றிகரமாக முடியும். இல்லற வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் நாள். மனைவியின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பேச்சில் நிதான போக்கை கடைபிடித்தால் பெரிய அளவில் சண்டை வராமல் தவிர்க்கலாம். வேலை விசயமாக வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ராசியான நிறம் : மஞ்சள்

ராசியான எண் : 6

ராசியான நேரம் : காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்றைக்கு உங்களுக்கு பண வருமானம் வரும். வீட்டில் வேலை செய்பவர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அக்கம் பக்கத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். இது உங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும். பெற்றோர் ஆலோசனையை கேட்டு நடந்தால் அதிக பயன் கிடைக்கும். இல்லற வாழ்க்கை இனிமையாக கழியும். வாழ்க்கை துணைவி உங்களை புரிந்து நடந்து கொள்வார். மனைவியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நடப்பது நல்லது. போதை வஸ்துக்களை தவிர்ப்பது நன்மை விளைவிக்கும்.

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான எண் : 5

ராசியான நேரம் : காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை

மிதுனம்

மிதுனம்

அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். உங்களின் வருமானம் பெருகும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். பணவரவு சீராக இருக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கனிந்துள்ளது. உங்கள் மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. அவருடன் அதிக நேரத்தை செலவிடுவது அவருக்கு கூடுதல் தெம்பை அளிக்கும். இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடிய நாளாக இருக்கும். ஆனாலும், அவசரப்படாமல் உங்கள் முடிவுகளை கவனமாக எடுங்கள்.

ராசியான நிறம் : மஞ்சள்

ராசியான எண் : 9

ராசியான நேரம் : காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

கடகம்

கடகம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதமான நிலை ஏற்படலாம். இன்றைக்கு உங்கள் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துவேண்டியது அவசியம். முறையான உணவுப் பழக்கத்தோடு சிறிது ஓய்வு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டால் உடலும் மனதும் அமைதியுறும். இல்லத்தரசியுடன் உறவு சுமூகமாக இருக்கும். வேலை விசயமாக திடீர் வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை சுமாராகவே இருக்கக்கூடும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம். இதனால் இழப்புகள் ஏற்படலாம். கவனமாக இருந்தால் பண இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். வீட்ல வேலை செய்யிறவங்க எல்லாம் குடும்பத்தில் அமைதி நிலவ வாக்குவாதத்தை தவிர்க்கவும். உங்கள் நடத்தையில் சந்தேகம் கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணை சண்டையிடக்கூடும். எச்சரிக்கை தேவை.

ராசியான நிறம் : ரோஸ்

ராசியான எண் : 6

ராசியான நேரம் : காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை

சிம்மம்

சிம்மம்

இன்றைக்கு உங்களுக்கு நேரம் சரியில்லை. இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இன்றைக்கு உங்களின் கட்டுக்கடங்காத கோபத்தால், மற்றவர்கள் மத்தியில் உங்களின் மதிப்பை இழக்க நேரிடலாம். பேசும் வார்த்தையில் நிதானப் போக்கை கடைபிடிக்காவிட்டால், உங்கள் நற்பெயரை இழக்க நேரிடும். எச்சரிக்கையாக இருக்கவும். தேவையற்ற விஷயங்களுக்கு நேரத்தை செலவிடுவதை தவிர்க்க பாருங்கள். நிதி நிலைமையில் முன்னேற்றம் காணப்படும். இதனால் நிலுவையில் உள்ள கடன்களில் சிலவற்றை திருப்பி செலுத்த முடியும். மாலைப் பொழுதில் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது மன அழுத்தத்தை போக்கும். இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் நாள்.

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான எண் : 8

ராசியான நேரம் : காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

கன்னி

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி நிலவும். உங்கள் நிதி நிலைமை மந்தகதியிலேயே இருந்து வருவது உங்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்துவிட்டு, உங்க்ளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்ல பலனைத் தரும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நல்ல முடிவுகள் கிடைக்கும். உங்கள் வேலையில் இடையூறு ஏற்பட்டால், அதை திறமையாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் நாள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். இது உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டு. எதிர்பாராத பணவரவு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

ராசியான நிறம் : நீலம்

ராசியான எண் : 10

ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.

இன்றைக்கு உங்கள் குடும்பத்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படாமல் இருக்க, உங்கள் ஈகோவை விட்டுவிட்டு நிதானமாக பேசவும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் தந்தையிடம் இருந்து பண உதவியை எதிர்பார்க்கலாம். உங்க உடல் நலனில் அக்கறை செலுத்துவேண்டியது அவசியம்.

ராசியான நிறம் : பச்சை

ராசியான எண் : 7

ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைக்கு உங்க பிள்ளைகளால் நன்மை நடைபெறும். இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறிய தொகை செலவிட வேண்டியிருக்கும். நீங்க எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை. பணியிடத்தில் நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார வசதி வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால், நன்கு யோசித்து நல்ல முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை எழக்கூடும். இப்போதய சூழ்நிலையில் அனைவர் மீதும் அன்பு செலுத்துங்கள். இல்லத்தரசியுடனான உறவில் நெருக்கம் அதிகரிக்கும். உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

ராசியான நிறம் : மஞ்சள்

ராசியான எண் : 5

ராசியான நேரம் : காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை

தனுசு

தனுசு

உங்க அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகமின்றி காணப்படுவீர்கள். நண்பர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் வேலைபளு சற்று குறையும். அவ்வப்போது ரெஸ்ட் எடுங்க உங்க பாக்கெட்டில் இருக்கும் பணம் மருத்துவ செலவுக்கு போகாமல் பத்திரமாக இருக்கும். இன்றைக்கு நீங்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியம். இல்லற வாழ்க்கையில் அன்பும் அமைதியும் அதிகரித்து காணப்படும் நாள். உங்கள் மனைவுயுடன் நிம்மதியாக பொழுதைக் கழிப்பீர்கள். காதலர்களுக்கு இனிமையான நாள். இருவருக்கும் இடையில் இருந்து வந்த அனைத்து சிக்கல்களும் தீர்ந்து, மகிழ்ச்சி பொங்கும்.

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான எண் : 7

ராசியான நேரம் : மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

இன்று உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டில் வேலை செய்பவர்களுக்கு சுற்றுச்சூழல் சுகமாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். இன்றைக்கு நீங்கள் கவனமாக இருக்கவேண்டிய நாள். அதே சமயத்தில் இது உங்களின் எதிர்கால திட்டத்திற்கு இடையூறாக இருக்கும் என்பதால் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்கவும். இல்லற வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக சில பிரச்சனைகள் எழக்கூடும். அவற்றை கவனமாக கையாண்டு பிரச்சனையில் இருந்து மீள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணவு விசயத்தில் கவனமாக இருங்க.

ராசியான நிறம் : நீலம்

ராசியான எண் : 8

ராசியான நேரம் : இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை

கும்பம்

கும்பம்

இன்றைக்கு உங்களுக்கு பணவரவு வரும். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். சில சின்னஞ்சிறிய பிரச்சனைகள் கூட உங்களின் மனைவியை எரிச்சலடையச் செய்யலாம். இதனால் இருவரின் உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடும். எனவே கவனமாக இருக்கவும். காதலர்களுக்கு இனிமையான நாளாக அமையும். காதலரிடம் இருந்து அருமையான விலையுயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றை பெற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழக்கூடும். உங்களக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்ற உத்தரவு போன்றவை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். பொருளாதார நிலைமை வழக்கம்போலவே இருந்து வரும். வீண் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லுங்கள். இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

ராசியான நிறம் : சிவப்பு

ராசியான எண் : 9

ராசியான நேரம் : பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை

 மீனம்

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும் என்றாலும் சூழ்நிலை சரியில்லை தவிர்த்து விடுங்கள். இன்றைக்கு நீங்கள் உங்கள் காதலியின் எண்ணங்களிலேயே மிதந்து கொண்டிருப்பீர்கள். குடும்பத்தில் மனைவியின் உதவியுடன் முக்கிய பணியை முடிப்பீர்கள். இதனால் உங்கள் மனம் அமைதியடைவதோடு குடும்பத்திலும் மகிழ்ச்சி பிறக்கும். எதிர்பாராத பணவரவால் உங்கள் நிதி நிலைமை மேம்படும். நிலுவையில் உள்ள கடனை பைசல் செய்ய முடியும். குழந்தைகள் மூலம் எதிர்பாராத பிரச்சனைகள் எழலாம். எனவே குழந்தையின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகும். வெளியில் சுற்றுவதை விட வீட்டிலேயே இருங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ராசியான நிறம் : பிங்க்

ராசியான எண் : 5

ராசியான நேரம் : இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daily Horoscope For 24th March 2020 Tuesday In Tamil

Check out the daily horoscope for 24th march 2020 tuesday in tamil. Read on...
Story first published: Tuesday, March 24, 2020, 6:00 [IST]