For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு கோபம் அதிகமாக வருமாம்...

சனிக்கிழமை இன்று பிப்ரவரி 22ஆம் நாள் சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம்.

|

சனிக்கிழமை இன்று பிப்ரவரி 22ஆம் நாள் சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் கவனமாக இருப்பது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சந்திரன் பத்தாம் வீட்டிலும் சூரியன் லாப ஸ்தானத்திலும் சஞ்சாரிக்கின்றனர். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகமாகும். கடன் பிரச்சினை குறையும். இன்று குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12:45 முதல் மாலை 6:00 மணிவரை

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் ஒன்பதாம் வீட்டிலும் சூரியன் பத்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார். வியாபாரத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். இன்று எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் உண்டாகும். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : வயலட்

அதிர்ஷ்ட எண் : 11

அதிர்ஷ்ட நேரம் : காலை 9: 00மணி முதல் பகல் 11:00 மணிவரை

மிதுனம்

மிதுனம்

சந்திரன் எட்டாம் வீட்டிலும் சூரியன் ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் நிதானம் தேவை. பொறுமையோடு இருந்தால் பொக்கிஷங்கள் தேடி வரும்.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 3: 00மணி முதல் மாலை 6:00 மணிவரை

கடகம்

கடகம்

சந்திரன் ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்திலும் சூரியன் எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். மற்றவர்களுக்கு உதவும் வகையில் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வேலையில் பணிச்சுமை குறையும். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மனதில் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 : 00மணி முதல் மாலை 5:00 மணிவரை

சிம்மம்

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சூரியன் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரமான உணவுகளையும் அதிக சூடான உணவுகளையும் சாப்பிட வேண்டாம். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நேரம் : காலை 06 : 00மணி முதல் காலை 11 :00 மணிவரை

கன்னி

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பொருளாதார நிலைமை சுமாராக இருக்கும். பொறுமையும் நிதானமும் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

துலாம்

துலாம்

சந்திரன் உங்க ராசிக்கு நான்காம் வீட்டில் சனியோடு சேர்ந்திக்கிறார். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். பொருளாதார நிலைமை நன்றாக இருந்தாலும் செலவுகளும் தேடி வரும். பணத்தை சேமிக்க பழகுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : நண்பகல் 12 : 00மணி முதல் பிற்பகல் 3 :30 மணிவரை

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். முயற்சி ஸ்தானத்தில் சனியோடு இருப்பதால் இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வேலையில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப வரும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவு தாராளமாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். அலுவலகத்தில் காரசாரமான விவாதங்கள் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நேரம் : காலை 10: 45 மணி முதல் பிற்பகல் 1 :30 மணிவரை

தனுசு

தனுசு

சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிலும் சூரியன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள் வெற்றி தானாக வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். குல தெய்வ வழிபாடு நன்மை தரும்

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நேரம் : இரவு 11 : 00மணி முதல் அதிகாலை 3 :00 மணிவரை

மகரம்

மகரம்

சந்திரன் உங்க ராசிக்குள் உள்ள சனியோடு இணைந்திருக்கிறார். சூரியன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் தன வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டிற்குத் தேவையா ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2 : 00மணி முதல் மாலை 5:00 மணிவரை

கும்பம்

கும்பம்

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். பிள்ளைகள் மீது அக்கறை காட்டுங்கள். கையிருப்பு பணத்தை கவனமாக கையாளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நேரம் : மாலை 5 : 20 மணி முதல் இரவு 9 :00 மணிவரை

மீனம்

மீனம்

சந்திரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிர்பார்த்த லாபம் கிட்டும். வெளியூரில் வேலை கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். பணவரவு அதிகமாக இருக்கும். வீட்டிற்கு உறவினர்கள் வருகை அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 18

அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.30 மணி முதல் இரவு 9 :00 மணிவரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 22nd February 2020 Saturday In Tamil

Check out the daily horoscope for 22nd february 2020 saturday. Read on...
Story first published: Saturday, February 22, 2020, 1:26 [IST]
Desktop Bottom Promotion