Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
இந்த நாள் யாருக்கு சந்தோஷமான நாள் - இன்றைய ராசிபலனை படிங்க...
நவம்பர் 1 ஆம் தேதி ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ராசியான நிறம், ராசியான எண்களையும் ராசியான நேரத்தையும் பார்க்கலாம்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும். மகிழ்ச்சியாக இருக்குமா? சவால் நிறைந்ததாக இருக்குமா. இதோ இன்றைய ராசிபலனை படிங்க உங்க கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்.

மேஷம்
இன்றைய தினம் உங்க வீட்டில் உள்ள சுற்றுச்சூழல் அமைதியாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீங்க. வீட்டில் உள்ளவங்க ரொம்ப ஆதரவாக இருப்பாங்க. உங்களுக்கு உதவி செய்வாங்க. அம்மா உடைய உடல்நிலை பற்றி கவலைப்படுவீங்க. கவனம் எடுத்துக்கங்க. வேலை செய்யும் இடத்தில் யாரை நம்பியும் பணியை ஒப்படைக்க வேண்டாம். பண வருமானம் அபரிமிதமாக வரும். உங்க காதல் வாழ்க்கையில் சின்ன தடைகள் ஏற்படும். வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் 21
அதிர்ஷ்ட நேரம் : மாலை 6.00 மணி - இரவு 10 மணி

ரிஷபம்
இன்றைக்கு எதிர்பார்த்த பணம் உங்க கைக்கு வரும். வீட்டை அழகுபடுத்த வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை பராமரிப்பு செய்வீர்கள். உங்க குழந்தைகள் குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் மென்மையான போக்கை கையாளுவீர்கள். காதல் வாழ்க்கை ரொமான்ஸ் நிறைந்ததாக இருக்கும். உங்க உறவு இன்பமும் அன்பும் நிறைந்ததாக இருக்கும் அன்பு மழையில் நனைவீர்கள். சந்தோஷ தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க அலட்சியம் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் 14
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.40 மணி - இரவு 09.25 மணி

மிதுனம்
இன்றைய தினம் கணவன் மனைவி இடையே சிறு சிறு பூசல்கள் வரலாம் பேசும் வார்த்தையும் கவனமாக இருங்க. குழந்தைகளிடம் அக்களை காட்டுங்க. பணப்பிரச்சினை உங்க திட்டங்களை சொதப்பலாக்கி விடும். கவலைப்படாதீங்க சிலர் மூலமாக உங்களுக்கு பண உதவி கிடைக்கும். உங்க பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க உடல்நல பிரச்சினை உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி விடும். வேலை செய்யும் இடத்தில் பேச்சுவார்த்தையில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 25
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 1.40 மணி - இரவு 09.25 மணி

கடகம்
இன்றைக்கு உங்களுக்கு சின்னச் சின்ன இடைஞ்சல்கள் வரலாம் பண விசயத்தில் தடைகள் ஏற்படலாம். உங்க வாழ்க்கை துணையோட நீங்க எதிர்காலம் பற்றி திட்டமிடுங்கள். குடும்பத்தில் பெற்றோர்களுடனான உறவில் அற்புதங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். முக்கியமான வேலைகள் உங்களுக்கு கொடுக்கப்படலாம். நேர்மையாகவும் கடுமையாகவும் உழைக்கவும். உங்களுக்கு கண் பிரச்சினைகள் வரலாம் கவனம்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நேரம் : காலை 10.05 மணி - இரவு 10.40 மணி

சிம்மம்
இன்றைய தினம் சிம்ம ராசி மாணவர்களுக்கு ரொம்ப நல்ல நாள். வெற்றிகளை பெறுவீர்கள். பெற்றோர்கள், குருவின் ஆசி கிடைக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உங்களுக்கு அற்புதமாக இருக்கும். சட்டப்பிரச்சினைகளில் உங்களுக்கு லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் உறவு உற்சாகமாக இருக்கும். கணவன் மனைவி உறவு அமைதியாக இருக்கும். தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம். உங்க உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கம்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 12.00 மணி - இரவு 08.00 மணி

கன்னி
இன்றைக்கு உங்களுக்கு பணம் இழப்பு ஏற்படலாம். பண விசயத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வேலை செய்பவர்களுக்கு ரொம்ப பிசியான நாள். பிசினஸ்மேன்கள் பார்ட்னர்களிடம் கவனமாக இருக்கவும். உங்க பிசினஸ் பார்ட்டனர்களிடம் பகைத்துக்கொண்டாலோ பிரிந்தாலே அதிக இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம். குடும்பத்தில் சின்னச் சின்ன டென்சன்கள் ஏற்படலாம் உங்க தரப்பு நியாயத்தை நீங்க தெரிவியுங்கள். நல்ல நேரத்திற்காக காத்திருங்க. மழைக்காலம் என்பதால் சளி தொந்தரவுகள் வரலாம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நேரம் : காலை 9.55 மணி - பிற்பகல் 02.00 மணி

துலாம்
நீங்க வாழ்க்கையில ஜெயிக்கணும் என்றால் கடினமாக உழைக்க வேண்டும். சோம்பேறித்தனத்தை விட்டொழியுங்கள். உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உங்க உயரதிகாரியின் உதவி கிடைக்கும். பிசினஸ்ல நீங்க கவனம் செலுத்தும். உங்க நிதி நிலைமை இன்றைக்கு சாதாரணமாகவே இருக்கும். உங்க குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் சேமிப்பில் அக்களை காட்டுங்க. உங்க குழந்தையின் ஆரோக்கியத்தில் தேவை. உங்களைப் பற்றி வாழ்க்கைத்துணைவர் சரியாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் குடும்பத்தின் சுற்றுப்புற சூழ்நிலை சண்டை சச்சரவாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நேரம் : மாலை 06 மணி - இரவு 10.45 மணி

விருச்சிகம்
இன்றைக்கு உங்களுக்கு முக்கியமான நாள். புதிய வேலைகள் கிடைக்கும். வேலைக்கு இன்டர்வியூவிற்காக போய் வந்தவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்க மன அமைதியை கெடுத்துக்கொள்ள வேண்டாம். உங்க குடும்பத்தில் ஒற்றுமையாக சந்தோஷமாக இருங்க சண்டை போட வேண்டாம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பண விசயத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க ரொம்ப சோர்வாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 32
அதிர்ஷ்ட நேரம் : மாலை 04.30 மணி - இரவு 10.05 மணி

தனுசு
இன்றைய தினம் உங்க வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சந்தோஷமான பரிசுகளை கொடுக்கவும். அன்பான பேச்சும் செயல்களும் குடும்ப உறவுகளில் சந்தோஷத்தை அதிகரிக்கும். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். முதலீடு செய்ய முடிவு செய்வீர்கள் சொத்துக்கள் வாங்குவதில் திட்டமிடுவீர்கள். உங்க நிதி நிலைமை மேம்பட சிலர் உதவி செய்வார்கள். இன்றைக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தெம்பாக இருப்பீங்க. மாலையில் உங்க குடும்பத்தில் நீங்க ஒரு முக்கிய உறவினரை சந்திப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 09
அதிர்ஷ்ட நேரம் : காலை 05.55 மணி - மாலை 12.20 மணி

மகரம்
இன்றைக்கு உங்க ரொமான்டிக் உறவில் சில சங்கடங்கள் ஏற்படும் உங்க பார்ட்னர் கோபப்படலாம். திருமணம் குடும்ப வாழ்க்கையில் இன்றைக்கு சாதாரணமான நாள். கோபப்படலாம். உங்க ஆபிஸ் சுற்றுச்சூழல் சந்தோஷத்தை தரலாம். உடன் வேலை செய்யும் மூத்த அதிகாரியின் உதவி கிடைக்கும்.
பண விசயத்தில் நீங்க கவனமாக இருங்க. மற்றவங்களுக்கு பணத்தை கடன் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. இல்லாட்டி நீங்க கவலைப்படுவீங்க. உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நேரம் : மாலை 02.50 மணி - மாலை 09.18 மணி

கும்பம்
இன்றைக்கு நீங்க எதையும் துணிந்து செயல்படுவீர்கள், வேலையில் முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். வெற்றியோடு லாபமும் அதிகரிக்கும். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஆதரவும் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். வீட்டில் உங்க வாழ்க்கை துணையோட நீங்க அமைதியாக இருங்க. உங்க நிதிநிலைமை நன்றாக இருக்கும். பட்ஜெட்டிற்கு தகுந்தவாறு முடிவெடுங்க. உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மனதளவில் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் 11
அதிர்ஷ்ட நேரம் : அதிகாலை 5.25 மணி - பிற்பகல் 2.15 மணி

மீனம்
இந்த நாள் உங்களுக்கு ரொமான்ஸ் செய்ய நல்ல நாள். உங்க வாழ்க்கை துணையிடம் இருந்து அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். அழகான ஒரு இடத்திற்கு டேட்டிங் செல்ல வாய்ப்பு உள்ளது. சந்தோஷமான செயல்கள் நடைபெறும். குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பணப்பிரச்சினைகள் தீரும். வெளிநாட்டு பிசினஸ் மூலம் வருமானம் வரும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் மனம் அமைதியாக இருக்கும். மொத்தத்தில் இந்த நாள் மன மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் : காவி
அதிர்ஷ்ட எண் 31
அதிர்ஷ்ட நேரம் : பிற்பகல் 2.15 மணி - இரவு 7.20 மணி



Click it and Unblock the Notifications











