Latest Updates
-
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்..
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பணம் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டப் போகுது...
இன்றைக்கு சம்பள பணம் கைக்கு வருமா? பணம் வராவிட்டாலும் செலவும் வராமல் இருக்கவேண்டுமே? என்று நினைக்கும் போதே விரைய செலவு வீடு தேடி வருகிறது. மருத்து செலவும் மல்லுக்கட்டுகிறது.
இன்றைக்கு சம்பள பணம் கைக்கு வருமா? பணம் வராவிட்டாலும் செலவும் வராமல் இருக்கவேண்டுமே? என்று நினைக்கும் போதே விரைய செலவு வீடு தேடி வருகிறது. மருத்து செலவும் மல்லுக்கட்டுகிறது. இன்றைய தினம் நமக்கு எப்படி இருக்குமோ என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கு விடை தருகிறது இன்றைய ராசி பலன். சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அருளினால் சங்கடம் தீருமா என்று பார்க்கலாம்.

மேஷம்
இன்னிக்கு பிசினஸ்ல இருந்த பிரச்சினைகள் நீங்கி லாபம் அதிகம் கிடைக்கும். உத்தியோகம் தேடுறவங்களுக்கு நல்ல செய்தி காதுக்கு வரும். சொந்தக்காரங்க மூலமா உதவி கிடைக்கும். குடும்பத்துல இருக்குறவங்க எல்லோரும் ஒத்துமையா இருப்பாங்க. நீங்க எதிர்பாக்காம நல்ல செய்தி தேடி வந்து உங்களை குஷிப்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 9
ராசியான நேரம் : காலை 10:00 முதல் மாலை 4:00 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு பிள்ளைங்க ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாங்க. உத்தியோகத்துல இருந்து வந்த போட்டி பொறாமை மறையும். சொந்தமா பிசினஸ் பண்றவங்களுக்கு லாபம் பெருகிடும். குடும்பத்துலயும் அமைதியான சூழ்நிலையே இருக்கும். கோவில், குளம்னு போயிட்டு வந்தா மனசுல இருக்குற பாரம் குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண் : 19
ராசியான நேரம் : நண்பகல் 12:15 முதல் மாலை 6:20 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு வேலையில பிரச்சினை வரும். உத்தியோகத்துல சீனியர் அதிகாரிகளை கொஞ்சம் அனுசரிச்சி போறது நல்லது. பிசினஸ் பண்றவங்களுக்கு இன்னிக்கு வியாபாரம் கொஞ்சம் மந்தமா தான் இருக்கும். சொந்தக்காரங்க வர்றதுனால வீட்டுல சந்தோஷம் பெருகிடும். அதோட தண்டச்செலவுங்களும் எகிறிடும். தியானம், யோகான்னு செஞ்சி மனசை அமைதியா வச்சிக்கோங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 20
சாதகமான நேரம் : காலை 8:00 முதல் மாலை 3:15 மணிவரை

கடகம்
இன்னிக்கு சந்திராஷ்டமம் நடக்குறதால, நீங்க ரொம்பவே மனக்குழப்பத்துல இருப்பீங்க. அதனால மந்தவங்க கிட்ட அநாவசியமா கோபப்படுற சூழ்நிலை ஏற்படலாம், கவனமா நிதானமா நடந்துக்கோங்க. தெரியாத ஆளுங்களுக்கு கிட்ட கடன் வாங்குறதோ கடன் கொடுக்குறதையோ அவாய்ட் பண்றது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : பிங்க்
அதிர்ஷ்ட எண் : 33
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 6:00 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு பிசினஸ்ல இருந்துவந்த பிரச்சனைங்க ஓரளவுக்கு குறைய வாய்ப்பிருக்கு. பிள்ளைங்க மூலமா சுப செய்திங்க உங்க காதுக்கு வந்துடும். உத்தியோகம் பாக்குறவங்க சில பேத்துக்கு எதிர்பாத்த ட்ரான்ஸ்ஃபர் வரலாம். கொரோனா பீதி இருக்குற இந்த சமயத்துல யோசிச்சி முடிவெடுக்குறது நல்லது. சொந்தக்காரங்க வழியில நல்லது நடந்துடும். கணவன் மனைவிக்குள்ளாற அந்நியோன்யம் கூடிடும். அதனாலயே இன்னிக்கு நீங்க ரொம்பவே தெம்பா இருப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:30 மணிவரை

கன்னி
இன்னிக்கு பிசினஸ்ல இருந்து வந்த தேக்க நிலை மாறி கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் ஏற்படலாம். அரசு உத்தியோகத்துல இருக்குறவங்க எதிர்பாத்துட்டு இருந்த சலுகை கிடைக்கும். இன்னிக்கு பணவரத்து அமோகமா இருக்குறதுனால நீங்களும் சந்தோஷமா இருப்பீங்க வீடே சுபிட்சமா மாறிடும்.
அதிர்ஷ்ட நிறம் : ஸ்கைப்ளூ
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் மாலை 6:30 மணிவரை

துலாம்
இன்னிக்கு பிசினஸ் சம்பந்தமா நீங்க எடுக்குற முயற்சிங்களுக்கு வெளியாட்கள் கிட்ட இருந்து தடங்க, இடைஞ்சல் உண்டாகலாம், கவனமா நடந்துக்கோங்க. இன்னிக்கு குடும்பத்துல இருக்குறவங்களோட சப்போர்ட் கிடைச்சிடும். சுபகாரிய பேச்சுவார்த்தைங்களும் நல்லவிதமா முடிஞ்சிடும். பிள்ளைங்களோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை காட்டுறது நல்லது. இன்னிக்கு வரவுக்கு மீறுன செலவுங்க வரலாம், எச்சரிக்கையா இருக்க பாருங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 4
சாதகமான நேரம் : காலை 10:00 முதல் இரவு 8:15 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு பிசினஸ் விஷயமா எதிர்பாக்காத செலவுங்க வந்துடும். அதுக்காக வெளியில கடன் வாங்குற சூழ்நிலை ஏற்படலாம். எதுக்கும் கொஞ்சம் சிக்கனத்தோடும். பொறுப்போடும் நடந்துக்கிட்டா கடன் வாங்காம அவாய்ட் பண்ணிடலாம். செந்தக்காரங்களும் இன்னிக்கு உங்களுக்கு ஓரளவு ஒத்தாசையா நடந்துப்பாங்க. உத்தியோகத்துல வேலைச் சுமை இருந்தாலும், இன்னிக்கு சுகமான நாளா அமையும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 6
சாதகமான நேரம் : நண்பகல் 12:00 முதல் இரவு 7:00 மணிவரை

தனுசு
இன்னிக்கு குடும்பத்துல சந்தோஷம் கொடுக்ககூடிய தரமான சம்பவங்கள் நடந்துடும். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்குறதுல ரொம்பவே ஆர்வமா இருப்பீங்க. பிள்ளைங்களும் இன்னிக்கு உங்களை புரிஞ்சி நடந்துக்குவாங்க. பெரிய மனுஷங்களை மீட் பண்றதுனால மனசுக்கு இதமா இருக்கும். எடுக்குற முயற்சிங்களுக்கும் இன்னிக்கு வெற்றி கிடைச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
அதிர்ஷ்ட எண் : 15
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு வீண் அலைச்சலும், உடல் சோர்வும் அதனால மனசுல சலிப்பும் உண்டாகலாம், கவனமா நடந்துக்கோங்க. பெரிய மனுஷங்களோட சப்போர்ட்டுனால பிசினஸ்லயும் இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். உத்தியோகத்துல இருக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி போனா நல்லது நடக்கும். வீட்டுல இருக்குறவங்க சில சமயத்துல குழப்பத்தோட நடந்துக்கலாம். தண்டச்செலவுங்க வந்து கையை கடிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 28
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 11:00 மணிவரை

கும்பம்
இன்னிக்கு தண்டச்செலவுங்க வந்து உங்க பர்ஸை பதம் பாக்கலாம். எச்சரிக்கையா இருங்க. அதனால சிக்கனமா செலவழிக்க பாருங்க. இன்னிக்கு எந்த வேலையை செஞ்சாலும் மனத் திருப்தியோட செய்வீங்க. கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு கவுரவப் பதவிங்க தேடி வரும். குடும்பத்துலயும் சுபகாரியங்க நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கு.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : முற்பகல் 11:30 முதல் மாலை 6:30 மணிவரை

மீனம்
இன்னிக்கு பிசினஸ்ல மந்த நிலை தான் இருக்கும். பூர்விக சொத்து பத்து சம்பந்தமா அலைச்சல் இருந்தாலும், அதனால உங்களுக்கு ஆதாயம் கிடைச்சிடும். ஃப்ரண்ட்ஸுங்க மூலமா நிறைய நல்லது நடக்கலாம். குடும்பத்துல இருக்குற பெரியவங்க கிட்ட சின்ன சின்ன வாக்குவாதம் வர வாய்ப்பிருக்கு. வாய் வார்த்தையை விடாதீங்க. இன்னிக்கு பணவரத்து சுமார் தான்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் : 2
சாதகமான நேரம் : மாலை 5:00 முதல் இரவு 9:30 மணிவரை



Click it and Unblock the Notifications