For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குருவின் ராஜயோகம் உங்க ராசிக்கு இருக்கா?... தெரிஞ்சிக்கங்க...

உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

By Mahibala
|

Recommended Video

Guru Peyarchi 2019

ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. 12 கோள்களின் நகர்வையும் தங்களுடைய எதிர்காலத்தைச் சொல்பவை என மக்கள் நம்புகின்றனர். அதிலும் சிலருக்கு தினசரி காலையில் ராசிபலனைப் பார்த்தபின் தான் அன்றைய நாளையே தொடங்குவார்கள். ஜோதிடம் என்பது இந்து மதத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

horoscope

இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உங்களுடைய சிந்தனையின் போக்குகளில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வியாபாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பொருளுாதாரச் சிக்கல்கள் குறைய புது வழி பிறக்கும். மனதில் தொழில் அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

MOST READ: உங்க ஜாதகத்தில் ராகு கேது எப்படி இருக்கிறது - பலன் தரும் பரிகாரங்கள்

ரிஷபம்

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுடைய செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை திட்டமிட்டபடி முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தப்பபட்ட பயணங்கள் யாவும் லாபகரமாகவே முடியும். வெளியூர் பயணங்களினால் புதிய நபர்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

சமூக சேவையில் ஆர்வம் இருப்பவர்கள் கொஞ்சம் கவனமாகச் செயல்படுங்கள். வேலை தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல செய்திக்ள வரும். தேவையில்லாத எண்ண ஓட்டங்களால் மனதில் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகும்.பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்

கடகம்

வழக்கத்தைப் போல ஆடம்பரச் செலவுகள் செய்யாமல் குறைத்துக் கொண்டால் நல்ல லாபம் உண்டாகும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ளும்போது கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். அதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டு இருப்பீர்கள். வெளியில் எடுத்துச் செல்லும் ஆவணங்கள் மற்றும் உடைமைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

உடல் ஆரோக்கியப் பிரச்சினைகள் நீங்கி, மனம் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலமாக லாபம் உண்டாகும். உங்களுக்குக் கிடைக்கும் கௌரவப் பதவிகளால் அடுத்தவர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கன்னி

கன்னி

வீட்டில் உள்ளவர்களுடைய தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களிடம் கொஞ்சம் கூடுதல் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உங்களுடைய திறமைக்கு ஏற்றபடி முன்னேற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். உறவினர்களின் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மயில் நீலநிறமும் இருக்கும்.

இதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா?... இந்த அறிகுறி இருக்குமாம்...

துலாம்

துலாம்

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். அதனா்ல வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மனதுக்குள் நினைத்த காரியங்களை நிறைவேற்றித் தருவீர்கள். தொழில் சம்பந்தமாக பங்குதாரர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்திடுங்கள். பழைய நீண்ட நாள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். வீடு மற்றும் மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் லாபம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சோம்பல் அதிகரிக்கும். வேலைகளில் மந்தத்தன்மை நிலவும். வீட்டில் உள்ளவர்களிடம் வீம்பு பிடிக்காமல் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களின் வாயிலாக உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்களுடைய எதிர்காலம் தொடர்பாக, புதிய இலக்குகளை நிர்ணயம் செய்ய முயற்சி செய்வீர்கள். பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான புதிய வாய்ப்புகள் பெருக ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு

தனுசு

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக, நீங்கள் எதிர்பார்த்த கிடைக்கும். அதனால் மனம் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழல்கள் நிலவும். உத்தியோகத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களுக்கு உங்களுடைய மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். அதேபோல் செய்கின்ற வேலைகளிலும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்

மகரம்

வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய உழைப்புக்கேற்ற பலன் கிடைக்க கொஞ்சம் கால தாமதமாகும். வாகனங்களின் மூலம் சுப விரயச் செலவுகள் உண்டாகும். எதிர் பாலினத்தவர்களிடம் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவு உண்டாகும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமுமு் இருக்கும்.

கும்பம்

கும்பம்

பரம்பரை சொத்துக்கள் தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும். உறவினர்களுடைய வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் பெருகும். வீட்டில் பிள்ளைகளுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கூடுதல் கவனத்தடன் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6-ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

உடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா?... இதெல்லாம்தான்...

மீனம்

மீனம்

தொழில் சம்பந்தமாக எடுக்கும் புதிய முயற்சிகள் கைகூடி வரும். படிப்பு விஷயம் தொடர்பாக வெளியூா் பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். உங்களுடைய நண்பர்களின் உதவியால் உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களுடைய அறிமுகத்தினால் ஆதாயங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Horoscope For 10th october 2019 Thurssday

Each horoscope article on the Boldsky astrology section will cover all aspects of your life, right from career, personal life, finances, health to even travel and education. While the daily horoscopes will provide you with all the information you need to know ahead of your day. It will also help you take busin 10th october 2019 thurssday.
Story first published: Wednesday, October 9, 2019, 18:19 [IST]
Desktop Bottom Promotion