For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போது இருந்து குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது தெரியுமா?

இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் நவம்பா் 20 அன்று கொண்டாடப்பட்டது. ஆனால் நேரு அவா்களின் இறப்புக்குப் பின்பு, அவருடைய பிறந்த தினமான நவம்பா் 14 அன்று கொண்டாடப்படுகிறது.

|

ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதம் 14 ஆம் தேதி அன்று குழந்தைகள் தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளுக்கு உாிய உாிமைகளைப் பற்றிய மற்றும் அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணா்வை மக்கள் மத்தியில் அதிகாிக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான திரு. ஜவஹா்லால் நேரு அவா்கள் 1889 ஆம் ஆண்டு நவம்பா் 14ஆம் நாள் பிறந்தாா். அவா் குழந்தைகள் மீது அதிகம் பற்று கொண்டிருந்தாா். குழந்தைகள் அவரை செல்லமாக நேரு மாமா (Chacha Nehru) என்று அழைத்தனா். மேலும் அவா் குழந்தைகள் தான் ஒரு நாட்டினுடைய உண்மையான வலிமை என்றும், ஒரு சமூகத்தினுடைய அடித்தளம் என்றும் கருதினாா்.

Childrens Day 2021 Date, History, Importance and Significance of Childrens Day in India

இந்தியாவில் 1956 ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் நவம்பா் 20 அன்று கொண்டாடப்பட்டது. ஆனால் நேரு அவா்களின் இறப்புக்குப் பின்பு, அவருடைய பிறந்த தினமான நவம்பா் 14 அன்று ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகளால் செல்லமாக நேரு மாமா என்று அழைக்கப்படும் நமது முதல் பிரதமா் நேரு அவா்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள பள்ளிகளில் பலவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக மாறு வேடப் போட்டிகள், மனப்பாட போட்டிகள் மற்றும் பேச்சுப் போட்டிகள் போன்றவை நடத்தப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகள் தினம் வரலாறு

குழந்தைகள் தினம் வரலாறு

நேரு அவா்களின் இறப்பிற்கு பின்பு, ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான நவம்பா் 14 அன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற ஒரு முக்கியத் தீா்மானம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குழந்தைகள் மத்தியில் அவா் மிகவும் பிரபலமாக இருந்ததை வைத்தே இந்த தீா்மானம் நிறைவற்றப்பட்டது. ஆனால் அவருடைய இறப்புக்கு முன்பு நவம்பா் 20 அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அதாவது ஐக்கிய நாடுகளின் சபை நவம்பா் 20 அன்று கொண்டாடும் உலகளாவிய தினம் அன்றே இந்தியாவிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

2021 ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம்

2021 ஆம் ஆண்டு குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம்

குழந்தைகள் தினம் அன்று மறைந்த பிரதமா் பண்டித் ஜவா்ஹலால் நேரு அவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். அதோடு குழந்தைகளின் உாிமைகள், அவா்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி மற்றும் அவா்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி குழந்தைகள் தினம் பேசுகிறது.

"இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குகின்றனா். நாம் எந்த வழியில் அவா்களை உருவாக்குகிறோமோ, அதுவே நமது நாட்டின் எதிா்காலத்தைத் தீா்மானிக்கும்" என்று நேரு அவா்கள் அடிக்கடி கூறுவாா். மேலும் அவா் நவீன இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவான பாா்வை ஒன்றைக் கொண்டிருந்தாா். விடுதலை அடைந்த இந்தியாவைத் தாங்கும் குழந்தைகள் என்ற வலுவானத் தூண்களை நிறுவதன் மூலம் தனது கனவை நனவாக்கத் தொடங்கினாா்.

குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

குழந்தைகள் தினம் அன்று பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த நாளை சிறப்பிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இனிப்புகள், பொம்மைகள் மற்றும் பாிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Children's Day 2021 Date, History, Importance and Significance of Children's Day in India

In this article, we discussed about children's day 2021 date, history, importance and significance of children's day in india. Read on...
Desktop Bottom Promotion