Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
சந்திராஷ்டம நாளில் சந்தோஷமா இருக்கணுமா? இந்த பரிகாரம் பண்ணுங்க...
சந்திராஷ்டமம் நாளில் பலருக்கும் மனக்குழப்பம், எரிச்சல் கோபம் ஏற்படும் இந்த நாட்களில் பயப்பட வேண்டாம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனியாக பரிகாரம் செய்தால் சந்தோஷமாக வாழலாம்.
சந்திராஷ்டமம் நாளில் சிலர் வாயை கூட திறக்கமாட்டார் எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்து விடுவார்கள். சிலருக்கு கோபமும் எரிச்சலும் அதிகமாகும். சிலரோ ஒருவித புழுக்கத்துடன் இருப்பார்கள். மனோகாரகன் சந்திரன் எட்டாம் இடத்தில் மறையும் போது மன உளைச்சல் ஏற்படுகிறது. அந்த நாட்களில் அமைதியாக இருந்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் பாதிப்புகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். பிறந்த ராசியில் இருந்து எண்ணிப் பார்க்கும் போது எட்டாவது இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம நேரமாகும்.
நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் முதன்மையானவர்கள். சந்திரன் மனோகாரகன். ராசி கட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுவே ஜென்ம ராசி. இவர் தாய் காரகன், மனதை ஆள்பவர். மனிதர்களின் மனநிலைகள், தினசரி பலன்கள் சந்திரனின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசியில் சஞ்சரிக்கும் போது அவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல், வீண் தகராறு, காரிய தோல்வி ஏற்படும். சந்திராஷ்டம நாட்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடலாம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது.

சந்திராஷ்டமம்
சந்திராஷ்டமம் எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும் போதே சந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும். விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிக்களுக்கு நீச்ச உச்ச, சொந்த வீட்டுக்காராக சந்திரன் இருப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது என்று சொல்வர்.

சந்திரன் சஞ்சாரம்
பிறந்த ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் உலா வரும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. திருமண முகூர்த்தம் தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால், குடும்ப ஒற்றுமை குறையும். சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால், தாம்பத்திய சுகம் குறையும். உடல் நலம் பாதிக்கும்.

மேஷம் விருச்சிகம்
சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் சில பரிகாரங்களை செய்து விட்டு முக்கிய காரியங்களை செய்யத் தொடங்கலாம். மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து விட்டு சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.

ரிஷபம் துலாம்
ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம். துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மிதுனம் கன்னி
மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து விட்டு பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம். கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து விட்டு பின்னர் கண்ணனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

கடகம் சிம்மம்
கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.

தனுசு மீனம்
தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து விட்டு பின்னர் குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம். மீனம் ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம்.

மகரம் கும்பம்
மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம். பரிகாரம் மற்றும் வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் நீங்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும்.



Click it and Unblock the Notifications