For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஃபேவரட் கவர்ச்சிக்கன்னிகளுக்கு வயசானா எப்படி இருப்பாங்கனு தெரியணுமா? இத பாருங்க...

பேஸ் ஆப் சேலஞ்ச் மூலம் உங்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகைகள் வயதானபின் எப்படி இருப்பார்கள் என்று தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

|

சமூக ஊடகங்களில் தற்போது பிரபலங்களின் முதுமை தோற்ற புகைப்படங்கள் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. தங்கள் மனங்கவர்ந்த திரையுலக பிரபலங்கள் வயதானால் இப்படிதான் இருப்பார்கள் என்று ரசிகர்கள் போட்டிபோட்டு புகைப்படங்களை பதிவேற்றம் செய்து #faceapp என்று ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்து வருகிறார்கள்.

Faceapp Challenge

பேஸ் ஆப் சேலஞ்ச் மூலம் உங்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகைகள் வயதானபின் எப்படி இருப்பார்கள் என்று தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபேஸ்அப்

ஃபேஸ்அப்

முப்பது ஆண்டுகள் கடந்த பின்னர் நீங்கள் எப்படி இருப்பீர்கள்? என்று பார்க்க உங்களுக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஒரே ஒரு கிளிக் செய்தால், நீங்கள் முதுமையில் இப்படித்தான் இருப்பீர்கள் என்று ஃபேஸ்அப் செயலி காட்டிவிடும். இந்தச் செயலி முதன்முதலாக 2017ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவம் தற்போது அறிமுகமாகி சமூக ஊடக பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எல்லா தரப்பினரும் வேடிக்கையாக இதை பயன்படுத்தி வருகின்றனர்.

MOST READ: யாரு இந்த கவர்ச்சியான பிகர்னு தெரியுதா? உத்துப்பாருங்க... அட அவங்களே தான்ப்பா...

கிரிக்கெட் வீரர்களின் முதுமை

ரிக்கெட் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கிரிக்கெட் வீரர்களின் முதுமை தோற்ற புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்க நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் பகிர்ந்த அமெரிக்க திரையுல பிரபலம் மோர்கன் ஃப்ரீமேனின் புகைப்படத்தை ஆயிரக்கணக்கானோர் 'லைக்' செய்துள்ளனர்.

"என் பத்தாவது வயதிலிருந்து இதுவரை அவருக்கு வயது கூடவேயில்லை"

"முதுமையின் ராஜா. எந்த appஆலும் அவரை தொட இயலாது"

"சிலர் ஒருபோதும் முதுமையடைவதேயில்லை"

என்பது போன்ற வேடிக்கையான பின்னூட்டங்களும் குவிந்துள்ளன.

ரசிகர்களின் கைவரிசை

தங்கள் முதுமை தோற்றம் என்று பார்ப்பதை விட தங்களுக்கு அதிகம் பிடித்த திரை பிரபலங்கள் முதுமையில் எப்படி தோற்றமளிப்பார்கள் என்று காணவே ரசிகர்கள் விரும்புகின்றனர். ஷாரூக்ஹான், தீபிகா படுகோனே, ரண்வீர் சிங் ஆகியோரின் தோற்றம் முப்பது ஆண்டுகள் கழித்து எப்படி இருக்கும் என்று ஃபேஸ்அப் மூலம் மாற்றி சமூக ஊடகங்களில் உலாவ விட்டுள்ளனர். ஹாலிவுட் பிரபலங்கள் ஜேனாஸ் சகோதரர்கள், வானே வாட், டிரேக், சாம் ஸ்மித், ஸ்கூட்டர் பிரான், இக்கி அஸாலியா, கெவின் ஹார்ட் மற்றும் நிக் பேட்மன் ஆகியோரின் முதுமை தோற்ற படங்களும் வைரலாக பரவி வருகின்றன.

MOST READ: பீர் குடித்துக் கொண்டே செத்துபோன இளைஞர்... என்னாச்சுனு நீங்களே பாருங்க...

செயற்கை நுண்ணறிவு

ஃபேஸ்அப் என்று மொபைல் போன் செயலி, புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் மாற்றம் செய்கிறது. இதனால் மாற்றப்படும் புகைப்படங்கள் நம்பத்தகுந்த தோற்றத்தில் இருப்பதால் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 'முப்பது ஆண்டுகளுக்கு பிறகு' '3000 ஆண்டில் நீங்கள்' 'அதிரடி வேகம் 50' என்று பொருள்படும் தலைப்புகளோடு புகைப்படங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்தச் செயலி ஒரு புகைப்படத்தை மூன்று விதங்களில் மாற்றும். ஆனாலும், முதுமை (ஓல்ட்) என்ற தெரிவே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Celebrities Take a Flight to the Future with the Faceapp Challenge

Wrinkly pictures of young celebrities are doing rounds on social media over the past week. Fans are immensely enjoying this new-found craze of their favourite stars, who are posting photos of their aged selves with the hashtag #faceapp.
Story first published: Friday, July 26, 2019, 17:23 [IST]
Desktop Bottom Promotion