For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?

சனிபகவானை வணங்க ஏற்ற நாள் சனிக்கிழமைதான். சனிக்கிழமை தோறும் சனிபகவானின் கோவிலுக்கு சென்று எள் விளக்கு ஏற்றி வழிபடுவது அவரின் கோபப்பார்வையிலிருந்து பாதுகாக்கும். சனிக்கிழமை விரதம் இருப்பதும் கூட நல்லது

|

சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு மாறப்போகிறார். ராசி மற்றும் நட்சத்திர அடிப்படையில் சனி பெயர்ச்சி விரைவில் நிகழப்போகிறது. இந்த சனிப்பெயர்ச்சியால் உலக அளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலரும் பலன் சொல்லி வருகின்றனர். சனி பகவான் நேர்மையானவர், நீதிபதியை போன்றவர். நேர்மையற்றவர்களையும், பிறன் மனை நோக்குபவர்களையும், ஊழல்வாதிகளையும் சனிபகவான் உண்டு இல்லை என்று செய்து விடுவார். இந்த சனி பெயர்ச்சியால் உலகத்தில் நடக்கப் போகும் முக்கிய சம்பவங்களையும் சனியின் கோபப்பார்வைக்கு யாரெல்லாம் பாதிப்பிற்கு ஆளாவார்கள் என்றும் பார்க்கலாம்.

Beware Sanidev Will Anger For These Work

சனி தனது ஆட்சி வீடான மகரத்திற்கு செல்கிறார். இது கால புருஷனின் 10ம் வீடு.10ம் பாவம் என்பது ஒருவரின் தொழில்,கர்ம ஸ்தானமாக சொல்ல படுகிறது. நான்கு கேந்திர ஸ்தானங்களிலும் மிகவும் வலுவான கேந்திரம் 10ம் பாவமே.நாம் அனைவரும் அறிந்த விஷயம் என்னவென்றால் கேந்திரங்களில் பாப கிரகங்கள் வலுப்பெறும்.அதுவும் சனி போன்ற கிரகம் ஆட்சியும் பெற போவது குறிப்பிடத்தக்கது.

MOST READ: 2020-இல் இந்த ராசிக்காரங்க தான் அதிக பணப்பிரச்சனையை சந்திப்பாங்களாம்... தெரியுமா?

சனிபகவான் சூரியதேவனின் மகன். இவர் தனது தாய் சாயாதேவியின் கர்ப்பத்தில் இருக்கும் போதே சூரியனின் வெப்பத்தால் கருப்பாக மாறியவர். சனிபகவானின் தாயான சாயா தேவி தீவிர சிவபக்தை ஆவார். அவரை போன்றே சனிபகவானும் கர்ப்பத்திலிருந்தே சிவபக்தனாகவே வளர்ந்தார். அவர் பக்தியை மெச்சி தவறு செய்யும் மனிதர்களுக்கு வாழும்போதே தண்டனை கொடுக்க வேண்டிய பொறுப்பை அவருக்கு வழங்கினார் சிவபெருமான்.

MOST READ: நினைத்தது நிறைவேற, செல்வம் சேர 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டியவை!

தனுசுவில் இருந்த சனி ஆன்மீக துறையில் இருந்த பலருக்கும் மனஉளைச்சல் கொடுத்து சென்றார். மகரம் செல்லும் போது அவரது கவனம் அனைத்தும் பொருளாதாரம் மற்றும் தொழில் துறை சார்ந்தே இருக்கும். சனி பகவான் அவருக்கு மிகவும் பிடித்த நில ராசியான மகரத்திற்கு செல்வது விசேஷமான அமைப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சனி பெயர்ச்சியால் என்ன நடக்கும்

சனி பெயர்ச்சியால் என்ன நடக்கும்

இந்த சனி பெயர்ச்சியின் மூலம் தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பெட்ரோல், டீசல் மற்றும் பிற எண்ணெய் சார்ந்த பொருட்களின் விலை ஏற்றம் காணும். அதேபோல் எள், கடுகு, உளுந்து போன்ற பொருட்களின் விலையும் உயர்வோடு காணப்படும். கட்டுமான பொருட்களின் விலையும் உயரும். ஆசிரியர், மாணவர்கள் உறவில் விரிசல் ஏற்படக்கூடும். எழுத்தாளர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் இந்த ஆண்டு சரியான கால கட்டம் இல்லை என்றே கூறலாம்.

சனி பகவானை கோபப்படுத்தாதீங்க

சனி பகவானை கோபப்படுத்தாதீங்க

வாழ்க்கையில் கஷ்டம் நேரும்போதெல்லாம் அவற்றின் காரணமாக நம் அனைவருக்கும் நினைவில் வருபவர் சனிபகவான். ஏனெனில் நவகிரகங்களில் மிகவும் முக்கிய கிரகமான சனிபகவானே நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு காரணமாவர். ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் ஏழரை சனியாகவோ, அஷ்டமத்து சனியாகவோ அமர்ந்து விட்டால் சில ஆண்டுகளுக்கு அவர்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவே இருக்கும்.

சிவ பக்தர் சனிபகவான்

சிவ பக்தர் சனிபகவான்

சனிபகவான் எவ்வளவு கெடுப்பவரோ அதே அளவு கொடுப்பவர். அவரை சரியான முறையில் வழிபட்டால் அவர் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. இங்கே அவரை எவ்வாறு வணங்கினால் நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். அடிக்கடி நமச்சிவாயா என்று சொல்லுங்க சனிபகவான் எந்த பாதிப்பும் செய்ய மாட்டார். சிவனை வழிபடுவதே சனிபகவானின் கோபப்பார்வையிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

கோபப்படுத்தும் நிறங்கள்

கோபப்படுத்தும் நிறங்கள்

சனிபகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு என்று எல்லோருக்கும் தெரியும். கருப்பு நிற துணியை வைத்து வழிபடுவதை சனிபகவான் மிகவும் விரும்புவார். சனிக்கிழமை அன்று யாருக்காவது நீங்கள் சிவப்பு நிற துணியை தானமாகக் கொடுக்க வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்கு சமூகத்தில் பெரிய அவமானத்தை ஏற்படுத்தக்கூடும். சனிக்கிழைமைகளில் வெள்ளை துணியை பரிசளிப்பது உங்களுக்கு திருமணம் தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்கும். கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்படும்.

தாமிர பாத்திரம் வேண்டாம்

தாமிர பாத்திரம் வேண்டாம்

தாமிரம் சூரிய பகவானுக்கு உகந்தது. சனிபகவானுக்கு உகந்தது இரும்பு பாத்திரம். எனவே தாமிர பாத்திரங்களை யாருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டாம். இது சனிபகவானின் கோபத்தை அதிகரிக்க கூடிய ஒன்றாகும். இதனால் தானம் கொடுப்பவருக்கும் அதை வாங்குபவருக்கும் நஷ்டம் மற்றும் உடல்நிலை கோளாறு ஏற்படலாம். அதே போல கத்தரிக்கோலை கொடுக்காதீங்க அதுவும் சிக்கலாகி விடும்.

சனிக்கிழமை வழிபாடு

சனிக்கிழமை வழிபாடு

சனி தசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்குப் போய் விளக்கு போடுங்க. காகத்திற்கு தயிர் கலந்த எள் சாதம் வையுங்க. காகம் சனியின் வாகனம், நம் முன்னோர்கள் காகங்கள் வடிவத்தில் நம்மை பார்க்க வருகின்றனர். எனவே முன்னோர்கள் வழிபட்டால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார்.

சனிக்கு பிடிக்காத விசயங்கள்

சனிக்கு பிடிக்காத விசயங்கள்

சுத்தம் இல்லாத வீடுகள், அழுக்கான ஆடை அணிபவர்கள், பிறன்மனை நோக்கும் ஆண்கள், அடுத்தவர்கள் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் வஞ்சக எண்ணம் கொண்டவர்களைக் கண்டாலே சனிபகவானுக்குப் பிடிக்காது. சனியை சாந்தப்படுத்தும் வகையில் வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Beware Sanidev Will Anger For These Work

Shani is the son of Suryadev and Chayya.Shani is one of the most powerful and the most feared of all Gods he is highly revered, however, his anger is one that can destroy your entire world. He is one of the most revered Gods and is still a mystery to many.
Story first published: Saturday, December 14, 2019, 17:38 [IST]
Desktop Bottom Promotion