For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நாட்களில் முடிவெட்டுவது பல ஆபத்துகளை உண்டாக்குமாம்...எந்த நாளில் வெட்டுவது அதிர்ஷ்டம் தெரியுமா?

நகங்கள் மற்றும் முடி வெட்டுவது நமது தனிப்பட்ட சுகாதாரத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரங்களில் முடி மற்றும் நகங்களை வெட்டுவது நமது குடும்பங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது.

|

நகங்கள் மற்றும் முடி வெட்டுவது நமது தனிப்பட்ட சுகாதாரத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரங்களில் முடி மற்றும் நகங்களை வெட்டுவது நமது குடும்பங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு செய்வது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

Best Days to Cut Hair According to Astrology in Tamil

விஷேச நாட்களில் முடி வெட்டுவது முற்றிலும் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். அதேமாதிரி மாலை நேரங்களில் நகம் வெட்டுவதும் பெரும்பாலான இல்லங்களில் தவிர்க்கப்படும் ஒன்றாகும். ஏனெனில் சில கடவுள்களை அவமதிப்பதாக நமது சமூகத்தில் நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாரத்தின் நாட்களுக்கான விதிகள்

வாரத்தின் நாட்களுக்கான விதிகள்

இந்து மதத்தில், வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் வெவ்வேறு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு நாளுக்கும் ஆளும் தெய்வமும் ஆளும் கிரகமும் உண்டு. எனவே, ஒவ்வொரு நாளும் செய்யப்படும் செயல்கள் தெய்வங்களை திருப்திப்படுத்தும் மற்றும் கிரகங்களை அமைதிப்படுத்தும் விதத்தில் செய்யப்பட வேண்டும். இந்த விதியைப் பின்பற்றவில்லை என்றால் கடவுள் மற்றும் கிரகங்களின் கோபத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும்.

எப்போது வெட்டலாம்? எப்போது வெட்டக்கூடாது?

எப்போது வெட்டலாம்? எப்போது வெட்டக்கூடாது?

இந்து மதத்தில், ஒருவரின் அன்றாட வாழ்க்கை தொடர்பான விதிகள் பல மரபுகள் மற்றும் சடங்குகளைப் பின்பற்றுகின்றன. அத்தகைய ஒரு முக்கியமான விதி முடி, நகங்களை வெட்டுதல் மற்றும் தாடியை ஷேவிங் செய்வது போன்றவற்றுடன் தொடர்புடையது. இது போன்ற செயல்களில் எது மங்களகரமானது மற்றும் அசுபமானது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வாரத்தில் சில நாட்கள் முடி, நகங்கள் மற்றும் தாடியை வெட்டுவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது, சில நாட்களில் அவை அசுபமாக இருக்கும். அவை என்னென்ன நாட்கள் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

திங்கட்கிழமை

திங்கட்கிழமை

திங்கட்கிழமை இந்து மதத்தில் சந்திரனுடன் தொடர்புடையது. சந்திரன் மனித ஆன்மாவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த நாளில் நகங்கள் அல்லது முடிகளை வெட்டுவது மிகவும் சாதகமற்றது, ஏனெனில் இது தனிநபரின் மன ஆரோக்கியத்திலும் குழந்தையின் ஆரோக்கியத்திலும் கூட ஆழமான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

MOST READ: நீங்க தினமும் குளிக்காவிட்டாலும் இந்த 3 உறுப்புகளை கண்டிப்பாக சுத்தம் செய்யணும்...இல்லனா ஆபத்துதான்!

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க்கிழமை அனுமனுக்கான நாளாகும் மேலும் இந்த நாள் செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த நாளில் முடி வெட்டுவது அல்லது தாடியை ஷேவ் செய்வது மிகவும் அசுபமானது. ஏனென்றால், இத்தகைய செயல்பாடுகள் ஒருவரின் ஆயுளைக் குறைப்பதோடு தொடர்புடையது.

புதன் கிழமை

புதன் கிழமை

புதன் கிழமை பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான நாளாகும். முடி மற்றும் நகங்களை வெட்டுவதற்கு இது ஒரு நல்ல நாள். அவ்வாறு செய்வதன் மூலம், வீடும் அதன் குடிமக்களும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்துடன் வெற்றியையும் முன்னேற்றத்தையும் பெறுகிறார்கள். மேலும் அந்த வீட்டில் லட்சுமி தேவி நீண்ட காலம் குடிகொள்வார்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமை

வியாழக்கிழமை என்பது விஷ்ணுபகவானுக்கான நாளாகும். இந்த நாளில், ஒருவர் தங்கள் நகங்களையோ அல்லது முடியையோ வெட்ட நேர்ந்தால், அது லட்சுமிதேவியை அவமதிப்பதாக கருதப்படுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திப்பார்கள்.

MOST READ: இந்த 6 ராசிக்காரங்களுக்கு நிறைய குழந்தை பிறக்கும் அதிர்ஷ்டம் இருக்காம்... இவங்க ஆசையும் அதுதானாம்...!

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை துர்காதேவிக்கான நாளாகும். இந்த நாள் அழகின் கிரகமான சுக்கிரனுடன் தொடர்புடையது என்பதால் இது ஆச்சரியமல்ல. எனவே, இந்த நாளில் முடி மற்றும் நகங்களை வெட்டுவது நல்லது. அவ்வாறு செய்வதன் மூலம், அது வெற்றி, பணம் மற்றும் புகழ் ஆகியவற்றை நீங்கள் உங்கள் வாழ்க்கைக்குள் அழைத்து வரலாம்.

சனிக்கிழமை

சனிக்கிழமை

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். இந்த நாளில் முடி அல்லது நகங்களை வெட்டுவது சாதகமற்றதாகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது. இது விபத்தினால் ஏற்படும் அகால அல்லது திடீர் மரணத்தைக் குறிக்கிறது.

MOST READ: ஆண்களே உடலுறவிற்கு முன் இந்த உணவுகளை தெரியாமகூட சாப்பிட்ராதீங்க...இல்லனா மொத்தமும் கெட்டுப்போயிரும்!

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிறு என்பது சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். இந்த நாளில் முடி அல்லது நகங்களை வெட்டுவது சாதகமற்றதாக கருதப்படுகிறது. இதிகாசமான மகாபாரதத்தில், இந்த நாள் சூரியனுடன் தொடர்புடையது என்பதால், இந்த நாளில் முடி மற்றும் நகங்களை வெட்டுவது செல்வம், மன ஆரோக்கியம் மற்றும் தர்மத்தின் அழிவைக் குறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Days to Cut Hair According to Astrology in Tamil

Read to find out which days are the best days to cut hair by astrology.
Desktop Bottom Promotion