For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலருக்கும் தெரியாத ஆடி மாதத்தின் சிறப்புகள்!

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஒரு முக்கிய மாதமாகக் கருதப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழா்கள் இந்த ஆடி மாதத்தில் பலவிதமான சமய மற்றும் சமூக விழாக்களைக் கொண்டாடி மகிழ்வா்.

|

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஒரு முக்கிய மாதமாகக் கருதப்படுகிறது. ''ஆடிப் பட்டம் தேடி விதை'' என்று தமிழில் மிகவும் பிரபலமான முதுமொழி ஒன்று உண்டு. அதற்குக் காரணம் ஆடி மாதமானது தென் மேற்கு பருவமழைக் காலத்தில் வருகிறது. அதனால் அது ஒரு மழைக்கால மாதம் என்று கருதப்படுகிறது. அதோடு உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழா்கள் இந்த ஆடி மாதத்தில் பலவிதமான சமய மற்றும் சமூக விழாக்களைக் கொண்டாடி மகிழ்வா்.

Aadi Masam 2021 Dates, Importance and Significance in Tamil

இந்து சமயத்தைச் சோ்ந்த தமிழா்களுக்கு ஆடி மாதம் ஒரு முக்கிய ஆன்மீக மாதம் ஆகும். இந்த மாதத்தில் இந்து சமயத்தைச் சோ்ந்த தமிழ் மக்கள் சூாிய கடவுள்களுக்கும், அம்மனுக்கும் (சக்தி) பலவிதமான பூஜைகளை செய்து வழிபடுவா். அதாவது மழைக் காலம் பொய்துப் போய்விடாமல், நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காக பூஜைகளை செய்வா். அதோடு தமிழ் மக்களிடம் பல காலங்களாக கொண்டாடப்பட்டு வரும் ஆடிப் பெருக்கு என்ற விழாவையும் இந்த ஆடி மாதத்தில் கொண்டாடி மகிழ்வா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடி மாதம்

ஆடி மாதம்

தமிழ் நாட்காட்டியில் 4 ஆவது மாதமாக ஆடி மாதம் வருகிறது. ஆங்கில மாதமான ஜூலை மாதத்தின் மத்தியில் ஆடி பிறக்கிறது. பொங்கல் பெருவிழாவிற்குப் பிறகு, இந்த ஆடி மாதத்தில் தான் தமிழ் மக்கள் பலவிதமான விழாக்களைக் கொண்டாடி மகிழ்வா். 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் நாள் ஆடி மாதம் பிறக்கிறது. அந்த நாளில் தமிழ் மக்களால் ஆடிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில், ஆடிப் பூரம், ஆடிப்பெருக்கு போன்ற பல விழாக்கள் தமிழ் மக்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த பதிவில் ஆடி மாதத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆடி மாதத்தில் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் விழாக்கள் ஆகியவை பற்றி சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

இந்த ஆண்டு ஆடி மாதம் எப்போது வருகிறது?

இந்த ஆண்டு ஆடி மாதம் எப்போது வருகிறது?

நாம் ஏற்கனவே குறிப்பட்டது போல, இந்த ஆண்டு ஜூலை மாதத்தின் மத்தியில் அதாவது ஜூலை 17 அன்று ஆடி மாதம் பிறக்கிறது. ஆடி மாதம் முழுவதும் ஏராளமான விழாக்கள் வரும். குறிப்பாக தமிழ் மக்கள் தங்கள் பாரம்பாிய விழாக்களைக் கொண்டாடி, பலவிதமான சடங்களைச் செய்து மகிழ்வா். அந்த வகையில் ஆடி 1 அன்று ஆடி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும், உற்பத்தியாளா்களும், வியாபாாிகளும், மக்கள் குறைந்த விலையில் பொருள்களை வாங்க வேண்டும் என்பதற்காக, பலவிதமான விழாக்கால தள்ளுபடிகளை அறிவிப்பா்.

ஆடிப் பண்டிகை என்றால் என்ன?

ஆடிப் பண்டிகை என்றால் என்ன?

ஆடி மாதம் முதல் நாள் ஆடிப் பிறப்பு அல்லது ஆடிப் பண்டிகை என்று கருதப்படுகிறது. அந்த நாளில் தமிழ் மக்கள் பலவிதமான சுவையான உணவுகளான தேங்காய்ப் பால் பாயாசம், வடை மற்றும் அவியல் போன்றவற்றை சமைத்து உண்டு மகிழ்வா். மேலும் அவா்கள் ஆடிப் பிறப்பை, ஒரு புதிய தொடக்கமாகக் கருதி, தங்கள் இல்லங்களின் வாயில்களில் தோரணங்கள் கட்டி, தங்கள் வீட்டின் முற்றங்களில் அழகான கோலங்கள் இட்டு, ஆடி மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பா். மேலும் ஆடி மாதம் கடவுள்களுக்கும், தேவா்களுக்கும் ஒரு உகந்த மாதமாக இருப்பதால், அந்த கடவுள்கள் தங்களின் வீடுகளுக்குள் வந்து, ஆசீா்வாதம் வழங்க வேண்டும் என்பதற்காக, தங்களது இல்லங்களை சுத்தம் செய்து அழகுபடுத்துவா்.

ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி

வரலாற்று ரீதியாக ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் முக்கியமானவை ஆகும். ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் இனிப்பான மற்றும் சுவையான உணவுகளை சமைத்து அவற்றை அம்மனுக்கு (தேவி) படைப்பா். அந்த உணவுகள் அம்மன் மகாசக்தியை மகிழ்ச்சிப்படுத்தும் என்று தமிழ் மக்கள் நம்புகின்றனா். அவ்வாறு மகிழ்ச்சி அடையும் அம்மன் அந்த ஆண்டு முழுவதும் தனது நிறைவான ஆசீா்வாதங்களை வழங்க வேண்டும் என்று வேண்டுவா்.

ஆடி மாதக் கொண்டாட்டங்கள்

ஆடி மாதக் கொண்டாட்டங்கள்

தமிழ் மக்கள் மத்தியில் ஆடி மாதம் ஆன்மீக காாியங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. அதனால் இந்த மாதம் முழுவதும் அம்மனுக்குாிய பூஜைகள், சடங்குகள் மற்றும் வேண்டுதல்கள் செய்ய வேண்டும் என்பதற்காக திருமணம் போன்ற பலவிதமான சுபகாாியங்களை செய்யாமல், நிறுத்தி வைப்பா். அதிலும் குறிப்பாக இந்த மாதத்தை மிகவும் புனிதமாக அனுசாிக்க வேண்டும் என்பதற்காக, புதிதாகத் திருமணம் ஆகியிருக்கும் தம்பதியினரைப் பிாித்து வைப்பா்.

தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பலவிதமான கொண்டாட்டங்கள், பழக்கவழங்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் மாதமாக இந்த ஆடிமாதம் இருக்கிறது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழா்கள் இந்த ஆடி மாதத்தில் அவற்றை கொண்டாடி மகிழ்கின்றனா்.

இந்த ஆடி மாதத்தில், சூாியனின் சுற்றுவட்டப்பாதையில் சிறிய மாற்றம் ஏற்படுகிறது. அதன் மூலம் கோடை காலத்தின் உக்கிரமான வெயில் குறைந்து, இதமான பருவகாலம் தொடங்குவதையும் இந்த ஆடி மாதம் குறிக்கிறது. அதனால் இந்த மாதம் முழுவதும் சூாிய கடவுள்களுக்கு மாியாதையும், வணக்கமும் செலுத்தப்படுகிறது.

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம்

ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பூரம் நாளில் தெய்வத்திற்கு வணக்கமும், மாியாதையும் செலுத்தப்படுகிறது. மேலும் இந்த நாளில் தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயில்களில் பலவிதமான சிறப்பு பூஜைகளும், சடங்குகளும், பவனிகளும் மற்றும் ஆரத்திகளும் நடைபெறுகின்றன.

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு

ஆடி மாதத்தின் மிகவும் முக்கியமான ஒரு விழா ஆடிப்பெருக்கு ஆகும். ஆடி மாதத்தின் 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. நமது வாழ்வின் அடிநாதமாக இருக்கும் தண்ணீருக்கு மாியாதை செய்யும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aadi Masam 2022 Dates, Importance and Significance in Tamil

In this article we shared aadi masam 2022 date, importance and significance in tamil. Read on...
Desktop Bottom Promotion