For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசுவினி - ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் நல்ல காரியங்கள் செய்ய ஏற்றது எது?

ஜோதிட சாஸ்திரத்தில் மிகமிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. வேத ஜோதிடத்தின்படி 12

|

ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். நாம் செய்யக்கூடிய நல்ல காரியங்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் செய்ய ஆரம்பித்தால் அதுவே வெற்றியைத் தேடித்தரும். அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம். நல்ல செயல்களை செய்யத் தொடங்கலாம். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. வேத ஜோதிடத்தின்படி 12 ராசிகளிலும் அசுவினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி குணாதிசயங்கள் இருக்கும். சில நட்சத்திரங்களில் நல்ல காரியங்கள் செய்யலாம். சில நட்சத்திரங்கள் நல்ல காரியங்களுக்கு ஏற்றவை அல்ல. விஷம் வைக்கவும், திருடவும் கூட நட்சத்திரம் பார்க்கும் காலம் வந்து விட்டது.

தலையற்ற, உடலற்ற, காலற்ற நட்சத்திரங்கள் என சில நட்சத்திரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தலையற்ற நட்சத்திரங்கள், கார்த்திகை, உத்ரம், உத்ராடம் இவற்றிற்கு முதல் பாதம் ஒரு ராசியிலும் மீதம் மூன்று பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும். உடலற்ற நட்சத்திரங்கள் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் இவற்றிற்கு முதல் இரண்டு பாதங்கள் ஒரு ராசியிலும், அடுத்த 2 பாதங்கள் அடுத்த ராசியிலும் இருக்கும். காலற்ற நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களுக்கு முதல் 3 பாதங்கள் ஒரு ராசியிலும், கடைசி பாதம் மட்டும் அடுத்த ராசியிலும் இருக்கும். இந்த நட்சத்திரங்களில் சில காரியங்கள் செய்யலாம், சில காரியங்கள் செய்யக்கூடாது. குறிப்பாக மனை முகூர்த்தம் வைக்கக்கூடாது. தூரதேசப் பயணங்கள் செல்லக்கூடாது.

27 Nakshatras of Hindu Astrology

காலற்ற உடலற்ற தலையற்ற நாட்களில் புணர்ச்சி செய்தலும் மனை முகூர்த்தம் செய்தலும் யாத்திரையும் கூடாது. இந்நாள்களில் மாதர் தம்மை கூடினால் மலடாவார். மனை மாளிகை கோலினால் அது பாழாகும். யாத்திரை செய்தால் உடல் நலக்கேடு உண்டாகும். முழுமையாக நான்கு பாதங்களும் உள்ள நட்சத்திரங்கள்தான் நல்ல காரியங்கள் செய்ய ஏற்றவை, அதிலும் நட்சத்திர அதிதேவதை பார்த்து அதன் இயல்புக்கு ஏற்றபடி சுப காரியங்களுக்கு நட்சத்திரங்களை தேர்தெடுக்க வேண்டும். பரணி நட்சத்திரம் முழுமையான நட்சத்திரமாக இருந்தாலும் அந்த நட்சத்திரன் அதிதேவதை எமன் என்பதால் சுப காரியங்களுக்கு விலக்க வேண்டும். 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தில் என்ன காரியங்கள் செய்யலாம் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்வினி

அஸ்வினி

பூ முடித்தல், கர்ப்பதானம் செய்தல், அன்னப்பிராசனம், நாமகரணம், உபநயனம், குதிரை வாங்குதல், வித்தியாப்பியாசம், வேத ஆரம்பம், கோடியுடுத்தல், ஆபரணம் பூணுதல், வாகனம் வாங்குதல், பட்டாபிஷேகம் செய்தல், சித்திரம் எழுதுதல், இரத்தினம் இழைத்தல், பொன்னேர் கட்டுதல், விதை விதைத்தல், நந்தவனம் வைத்தல், யாகம் செய்தல், யாத்திரை செய்தல், கிரகப்பிரவேசம், புதுபெண்ணழைத்தல், சவுளம், முளை தெளித்தல், கரும்பு நடுதல், ரோக சாந்தி செய்தல், அபிஷேகம் செய்தல், யுத்தம் செய்தல், சூதக மனை புகுதல், தொட்டிலிலிடுதல், சிரார்த்தம் செய்தல், தேர் உண்டாக்குதல், தேர் முடித்தல், புதியது உண்ணுதல், மருந்துண்ணுதல், மாத்திரையிடுதல், பிரசவ மனை புகுதல் ஆகிய காரியங்களை செய்யலாம்

MOST READ: எப்பவும் தனிமையாவே இருக்கீங்களா?... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க

பரணி

பரணி

மூலிகை பிடுங்குதல், மூலிகை உண்ணுதல், நீரில் படகு, பரிசல், கப்பல் விடுதல், யாத்திரையில் திதி செய்தல், அடுப்பு வைத்தல், வயல் பார்த்தல், கதிரறுத்தல், படர் பயிரிடுதல், நெல் விதைத்தல், கத்திரி நடுதல், பொன் வாங்கல், சிரார்த்தம் செய்தல், ரணம் அறுத்தல், காரமிடுதல், அட்டை விடுதல், சூடு போடுதல், யுத்தம் செய்தல், விஷ மருந்து செய்தல், விஷ மந்திர உபதேசம் பெறுதல், சூளைக்கு நெருப்பிடல் ஆகிய காரியங்களை செய்யலாம்

கிருத்திகை

கிருத்திகை

சுரங்கம் போடுதல், கிணறு வெட்டுதல், ஹோம ஆரம்பம் செய்தல், சமையல் செய்தல், மரம் வெட்டுதல், கடன் தீர்த்தல், வாகன் விற்க, பனை மரம் நடுதல், ஆடு வாங்குதல், மனை விற்றல், தீக்ஷை கொடுத்தல், யோக சாதனைகளில் ஈடுபடுதல், மருந்து செய்தல், மருந்து உண்ணுதல், அவுசத வாகடம் படிக்க, மந்திர உபதேசம் பெறுதல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

 ரோகிணி

ரோகிணி

பூ முடித்தல், ருது சாந்தி செய்தல், சீமந்தம் செய்தல், விஷ்ணுபலி, நாமகரணம், விருந்துண்ணல், உபநயனம், வித்தியாப்பியாசம், ஆலயம் கட்டுதல், விவாகம் செய்தல், ஆடை ஆபரணம் அணிதல், முடி சூட்டல், பல்லக்கு ஏறுதல், கிரக பிரவேசம் செய்தல், கும்பாபிசேகம் செய்தல், யாகம் செய்தல், நவக்கிரக சாந்தி செய்தல், வியாபாரம் தொடங்குதல், தானியங்கள் மருசலிலிடுதல், கிணறு வெட்டுதல், வாசல்கால் நாட்டுதல், புத்தகம் பிரசுரம் செய்தல், புதுப்பெண்ணை அழைத்தல், காது குத்தல், புத்திர தரிசனம் செய்தல், சவுளம், உழவு செய்தல், கதிரறுத்தல், கோடியுடுத்தல், கொடிக்கால் வைத்தல், நெல் நாற்று விடல், அபிஷேகம் செய்தல், யுத்தம் செய்தல், தொட்டிலிலிடுதல், சதாபிஷேகம் செய்தல், விதைவிதைத்தல், நந்த வனம் வைத்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

மிருகசீரிடம்

மிருகசீரிடம்

சீமந்தம் செய்தல், விஷ்ணுபலி, சூதக மனை புகுதல், நாமகரணம், ஜாதகம் எழுதுதல், பல் விளக்குதல், அன்னப்பிராசனம், காதுகுத்துதல், முடிசூட்டுதல், வாகனம் ஏறுதல், ஆயுதம் பிடித்தல், விவாகம் செய்தல், உபநயனம், வித்யாரம்பம், ஆபரணம் பூணுதல், வாகனம் வாங்குதல், பொன்னேர் கட்டுதல், விதை விதைத்தல், யாத்திரை செய்தல், புதுப்பெண்ணை அழைத்தல், புத்திர தரிசனம் செய்தல், சௌளம், புதியன கொள்ளுதல், நெல் விதைத்தல், மாட்டுக்கொட்டகை போடுதல், மருந்துண்ணுதல், அபிஷேகம் செய்தல், யுத்தம் செய்தல், தொட்டிலிலிடுதல், சிரார்த்தம் செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

MOST READ: குருவின் ராஜயோகம் உங்க ராசிக்கு இருக்கா?... தெரிஞ்சிக்கங்க...

திருவாதிரை

திருவாதிரை

காது குத்துதல், யுத்தம் செய்தல், சூளையில் நெருப்பிடுதல், மந்திரம் ஜெபித்தல், ஆயுதம் பிடித்தல், அஸ்திர அப்பியாசம் செய்தல், உழவுமாடு வாங்குதல், கதிரறுத்தல், களஞ்சியம் சேர்த்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

புனர்பூசம்

புனர்பூசம்

சீமந்தம் செய்தல், விஷ்ணு பலியிடுதல், சூதக மனை புகுதல், நாமகரணம் செய்தல், ஜாதகம் எழுதுதல், பல் விளக்குதல், அன்னப்பிராசனம், காதுகுத்துதல், முடிசூட்டுதல், வாகனம் ஏறுதல், பூமுடித்தல், அதிகாரம் பெறுதல், வாஸ்து சாந்தி செய்தல், கிரகப்பிரவேசம் செய்தல், யாத்திரை செய்தல், வியாபாரம் தொடங்குதல், பந்தல்கால் நடுதல், விவாகம் செய்தல், கோடியுடுத்தல், புதுப்பெண்ணை அழைத்தல், உபநயனம் செய்தல், புத்திர தரிசனம் செய்தல், சௌளம், உழவு செய்தல், களஞ்சியம் சேர்த்தல், ஆபரணம் பூணுதல், மருந்துண்ணுதல், அபிஷேகம் செய்தல், யுத்தம் செய்தல், தொட்டிலிலிடுதல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

பூசம்

பூசம்

பூ முடித்தல், ருது சாந்தி செய்தல், சீமந்தம் செய்தல், நாமகரணம், முடிவாங்குதல், விருந்துண்ணல், புதியதுண்ணல், அன்னப்பிராசனம், வித்தியாரம்பம், பசுவாங்குதல், விவசாயம் செய்தல், கிழக்கு திசை நோக்கி யாத்திரை செய்தல், ஆலோசனை சபையை கூட்டுதல், சிம்மாசனம் ஏறுதல், வாஸ்து சாந்தி செய்தல், குரு உபதேசம் பெறுதல், கரும்பு நடுதல், விரதம் ஆரம்பித்தல், நடனம் ஆடுதல், சங்கீதம் பாடுதல், புதுப்பெண்ணை அழைத்தல், சிரார்த்தம் செய்தல், காதுகுத்துதல், உபநயனம் செய்தல், புத்திர தரிசனம் செய்தல், வயல் பார்த்தல், உழவு செய்தல், களஞ்சியம் சேர்த்தல், கோடியுடுத்தல், அபிஷேகம் செய்தல், மருந்துண்ணல், பும்சவனம் செய்தல், தேர் கட்டுதல், தேர் முடித்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

ஆயில்யம்

ஆயில்யம்

ஜெபம் செய்தல், நவக்கிரக சாந்தி செய்தல், ஆயுதம் வாங்குதல், ஆயுதம் பிடித்தல், கிணறு வெட்டுதல், சுரங்கம் போடுதல், பாம்பாட்டுதல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

மகம்

மகம்

விவாகம் செய்தல், மந்திர பிரயோகம் செய்தல், பசு வாங்குதல், வயல் பார்த்தல், விதைவிதைத்தல், கதிரறுத்தல், களஞ்சியம் சேர்த்தல், மருந்துண்ணல், யுத்தம் செய்தல், சதாபிசேகம் செய்தல், விஷ மருந்து செய்தல், ரணமறுத்தல், காரமிடல், அட்டைவிடல், சூடுபோடுதல், விஷமந்திர உபதேசம் பெறுதல், சிரார்த்தம் செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

MOST READ: உலக மனநல தினம் 2019: மனநல பாதிப்புக்குக் காரணமான கிரகங்கள் - பரிகாரங்கள்

பூரம்

பூரம்

சித்திரம் எழுதுதல், ஆயுதப்பிரயோகம் செய்தல், நவக்கிரக சாந்தி செய்தல், ரணமறுத்தல், காரமிடல், அட்டை விடுதல், சூடுபோடுதல், விஷ மருந்து செய்தல், விஷ மந்திரம் படித்தல், விஷ மந்திரம் உபதேசம் பெறுதல், சிரார்த்தம் செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

உத்திரம்

உத்திரம்

பூமுடித்தல், கர்ப்பதானம் செய்தல், சீமந்தம் செய்தல், உபநயனம் செய்தல், விவாகம் செய்தல், புதுப்பெண்ணை அழைத்தல், தேவ பிரதிஷ்டை செய்தல், கிரக பிரதிஷ்டை செய்தல், ருது சாந்தி செய்தல், நாமக்கரணம் செய்தல், புத்திர தரிசனம் செய்தல், காதுகுத்துதல், சவுளம் செய்தல், கோடியுடுத்தல், உழவு செய்தல், கதிரறுத்தல், புதியதுண்ணல், விதைவிதைத்தல், ரோக சாந்தி செய்தல், சூதகமனை புகுதல், தொட்டிலிலிடுதல், யுத்தம் செய்தல், அபிஷேகம் செய்தல், சதாபிஷேகம் செய்தல், நந்தவனம் வைத்தல், சோலை அமைத்தல், பிரசவ மனை புகுதல், தெற்கு திசை நோக்கி யாத்திரை போதல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

அஸ்தம்

அஸ்தம்

ருது சாந்தி செய்தல், கற்ப தானம் செய்தல், காதுகுத்துதல், வித்யாரம்பம் செய்தல், பொன்னேர் பூட்டுதல், விதை விதைத்தல், விவாகம் செய்தல், புதுப்பெண்ணை அழைத்தல், கிரகாரம்பம் செய்தல், கிரகப்பிரவேசம் செய்தல், ராஜ தரிசனம் செய்தல், புத்திர தரிசனம் செய்தல், தெற்கு திசை நோக்கி யாத்திரை போதல், வியாபாரம் தொடங்குதல், கும்பாபிஷேகம் செய்தல், கிணறு வெட்டுதல், நந்தவனம் அமைத்தல், மந்திரம் ஜெபித்தல், உபநயனம் செய்தல், சீமந்தம் செய்தல், நாமக்கரணம் செய்தல், சவுளம் செய்தல், பசு வாங்குதல், கதிரறுத்தல், கோடியுடுத்தல், ஆபரணம் பூணுதல், அபிஷேகம் செய்தல், யுத்தம் செய்தல், சூதக மனை புகுதல், தொட்டிலிலிடுதல், சதாபிஷேகம் செய்தல், புதியதுண்ணல், மருந்துண்ணல், தேர்கட்டுதல், தேர் முடித்தல், சமுத்திர யாத்திரை செய்தல், சிரார்த்தம் செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

சித்திரை

சித்திரை

பூமுடித்தல், கற்ப தானம் செய்தல், நாமகரணம் செய்தல், முடி வாங்குதல், காது குத்துதல், கோடி வாங்குதல், கோடியுடுத்தல், தொட்டிலிலிடுதல், ஆபரணம் பூணுதல், வித்யாரம்பம் செய்தல், குதிரை வாங்குதல், தீட்சை கொடுத்தல், வைராக்கியம் பெறுதல், நடனமாடுதல், சங்கீதம் பாடுதல், மருந்து செய்தல், புதுப்பெண்ணை அழைத்தல், உபநயனம் செய்தல், அன்னப்பிராசனம், வயல் பார்த்தல், புதியதுண்ணல், தேவாராதனை செய்தல், அபிஷேகம் செய்தல், யுத்தம் செய்தல், சூதக மனை புகுதல், மந்திரம் ஜெபித்தல், உபதேசம் பெறுதல், சிரார்த்தம் செய்தல், சவுளம் செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

சுவாதி

சுவாதி

பூ முடித்தல், சூதக மனை புகுதல், கற்ப தானம் செய்தல், விவாகம் செய்தல், புதுப்பெண்ணை அழைத்தல், தொட்டிலிலிடுதல், புத்திர தரிசனம் செய்தல், முடி வாங்குதல், நாமகரணம் செய்தல், அன்னப்பிராசனம், காதுகுத்துதல், உபநயனம் செய்தல், வித்யாரம்பம் செய்தல், ஜோதிடம் படித்தல், சம்கீதம் பாடுதல், சிரார்த்தம் செய்தல், நடனமாடுதல், கிரகப்பிரவேசம் செய்தல், வியாபாரம் தொடங்குதல், விவசாயம் செய்தல், வாகனம் வாங்குதல், கோடியுடுத்தல், மாடு வாங்குதல், ருது சாந்தி செய்தல், புத்தகம் வாங்குதல், பிரசுரம் செய்தல், வயல் பார்த்தல், நந்தவனம் அமைத்தல், விதை விதைத்தல், களஞ்சியம் சேர்த்தல், அபிஷேகம் செய்தல், நதி, கிணறு, குளம் வெட்டுதல், வரப்பு போடுதல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

விசாகம்

விசாகம்

விதை விதைத்தல், கதிரறுத்தல், புதியதுண்ணல், கோடியுடுத்தல், தொட்டிலிலிடுதல், தீட்சை கொடுத்தல், யோக சாதனைகள் செய்தல், மருந்து செய்தல், மருந்துண்ணுதல், வைத்திய சாஸ்திரம் படித்தல், மந்திர உபதேசம் பெறுதல், மந்திரம் ஜெபித்தல், தேவாராதனை செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

MOST READ: பிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா?... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...

அனுசம்

அனுசம்

சூதக மனை புகுதல், ருது சாந்தி செய்தல், விவாகம் செய்தல், புதுப்பெண்ணை அழைத்தல், புத்திர தரிசனம் செய்தல், காது குத்துதல், தொட்டிலிலிடுதல், நாமகரணம் செய்தல், ஆபரணம் பூணுதல், ஆபரணம் வாங்குதல், கோடியுடுத்தல், உபநயனம் செய்தல், கிரகப்பிரவேசம் செய்தல், வாசல்கால் நடுதல், முகூர்த்தக்கால் நடுதல், அபிஷேகம் செய்தல், வயல் பார்த்தல், விதை விதைத்தல், களஞ்சியம் சேர்த்தல், மருசல் கட்டுதல், வித்யாரம்பம் செய்தல், சங்கீதம் பாடுதல், மந்திர உபதேசம் பெறுதல், தேவாராதனை செய்தல், மேற்கு திசை நோக்கி யாத்திரை செல்தல், கடல் பயணம் செய்தல், சிரார்த்தம் செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

கேட்டை

கேட்டை

பொன்னுருக்குதல், ஆபரண மராமத்து செய்தல், ஆபரணம் அழித்து செய்தல், காளவாய் போடுதல், சூளை வைத்தல், விவகாரம் தொடங்குதல், ஆயுத பயிற்சி தொடங்குதல், யந்திரம் செய்தல், அடிமைகளை நியமித்தல், வேலைக்கு ஆள் வைத்தல், உத்தியோகம் வழங்குதல், கடன் வாங்குதல், வாகனங்களை மாற்றுதல், கிரீடம் சூட்டுதல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

மூலம்

மூலம்

பூமுடித்தல், ருது சாந்தி செய்தல், விவாகம் செய்தல், புதுப்பெண்ணை அழைத்தல், புத்திர தரிசனம் செய்தல், சீமந்தம் செய்தல், நாமகரணம் செய்தல், ஆபரணம் பூணுதல், உபநயனம் செய்தல், காது குத்தல், தொட்டிலிலிடுதல், விருந்துண்ணல், வயல் பார்த்தல், விதை விதைத்தல், கிணறு வெட்டல், நந்தவனம் அமைத்தல், யாகம் செய்தல், தீட்சா ஆரம்பம் , மந்திர உபதேசம் பெறுதல், மந்திரம் ஜெபித்தல், ரோக சாந்தி செய்தல், வித்யாரம்பம் செய்தல், மேற்கு திசை நோக்கி பயணம் செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

பூராடம்

பூராடம்

தீட்சை பெறுதல், யோக சாதனை செய்தல், மந்திர உபதேசம் பெறுதல், மந்திரம் ஜெபித்தல், அவுசத வாகடம் படித்தல், மருந்து செய்தல், மருந்துண்ணல், கரும்பு நடுதல், இரத்தின பரீட்சை செய்தல், நவரத்தினங்கள் வாங்குதல், கிணறு வெட்டுதல், கிணறு மராமத்து செய்தல், கடன் வாங்குதல், கடன் தீர்த்தல், யானை கட்டுதல், கன்று காலி வாங்குதல், சிரார்த்தம் செய்தல், கணக்கு முடித்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

உத்திராடம்

உத்திராடம்

பூமுடித்தல், ருது சாந்தி செய்தல், கர்ப்ப தானம் செய்தல், விவாகம் செய்தல், புதுப்பெண்ணை அழைத்தல், புத்திர தரிசனம் செய்தல், உபநயனம் செய்தல், சீமந்தம் செய்தல், கோடியுடுத்தல், காதுகுத்தல், தொட்டிலிலிடுதல், பிரசவமனை புகுதல், சூதகமனை புகுதல், சங்கு ஸ்தாபனம் செய்தல், மனை கோலுதல், அபிசேகம் செய்தல், முடிசூட்டுதல், வாகனம் வாங்குதல், கன்று காலி வாங்குதல், வயல் பார்த்தல், விதை விதைத்தல், களஞ்சியம் சேர்த்தல், நந்தவனம் அமைத்தல், சாந்தி பரிகாரம் செய்தல், வித்யாரம்பம் செய்தல், யுத்தம் செய்தல், ஆயுத பயிற்சி செய்தல், மேற்கு திசை நோக்கி யாத்திரை செல்லுதல், சதாபிஷேகம் செய்தல், சவுளம் செய்தல், ருது சாந்தி செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

திருவோணம்

திருவோணம்

கடல் பயணம் செய்தல்,சூதக மனை புகுதல், ருது சாந்தி செய்தல், காதுகுத்தல், நாமகரணம் செய்தல், அன்னபிராசனம், சிரார்த்தம் செய்தல், வயல் பார்த்தல், விதை விதைத்தல், பொன்னேர் பூட்டுதல், எள்ளு விதைத்தல், விஷ்ணு பிரதிஷ்டை செய்தல், கிரகாரம்பம் செய்தல், மந்திர அப்பியாசம் செய்தல், ஹோம சாந்தி செய்தல், சதாபிசேகம் செய்தல், உபநயனம் செய்தல், சீமந்தம் செய்தல், புங்கவசனம், கோடியுடுத்தல், பொன் வாங்குதல், பொன்னுருக்குதல், அபிசேகம் செய்தல், யுத்தம் செய்தல், மருந்துசெய்தல், மருந்துண்ணுதல், கன்று காலி வாங்குதல், வாகனம் ஏறுதல், சவுளம் செய்தல், நதி, கிணறு, குளம் வெட்டுதல், தீர்த்தயாத்திரை செல்லுதல், மேற்கு திசை நோக்கி யாத்திரை செல்லுதல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

MOST READ: ஆண்மை குறைவு நீங்கணுமா? - நவகிரகங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுங்க

அவிட்டம்

அவிட்டம்

மாலையிடல், புதுப்பெண்ணையழைத்தல், முடி வாங்கல், புத்திர தரிசனம் செய்தல், நாம கரணம் செய்தல், காது குத்தல், கோடியுடுத்தல், உபநயனம் செய்தல், ஆபரணம் தரித்தல், விருந்துண்ணல், முடிசூட்டுதல், வாகனமேறுதல், கிரகப்பிரவேசம் செய்தல், அன்னப்பிராசனம் செய்தல், அபிசேகம் செய்தல், வித்யாரம்பம் செய்தல், சங்கீதம் பாடுதல், கன்றுகாலி வாங்குதல், நதி, கிணறு, குளம் வெட்டுதல், நந்தவனம் அமைத்தல், வியாபாரம் தொடங்குதல், வடக்கு திசை நோக்கி யாத்திரை செல்லுதல், கடல் பயணம் செய்தல், சிரார்த்தம் ஸ்ய்தல், சவுளம் செய்தல் ஆகிய காரியங்களை செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

27 Nakshatras of Hindu Astrology : Favourable Stars For Good Work

From the position of Sun and Moon to other planets in various houses are taken into account at the time of birth. Specifically, the Nakshatra in which the Moon is positioned at the time of your birth becomes your Nakshatra.Some Nakshatra favorable for any work of fixed, stability and long term purpose like planting trees, purchasing property, laying the foundations for buildings, construction of home, factory etc.
Story first published: Friday, October 11, 2019, 16:57 [IST]
Desktop Bottom Promotion