For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னத்த சொல்ல... பார்பி டால் பிடிக்குமென்பதால் 55 லட்ச ரூபாய்க்கு பொம்மை வாங்கிய பெண்...

பார்பி டாலுக்காக 80000$ டாலர் பணத்தை செலவளித்துள்ள பெண்ணைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

|

34 வயதான அமெரிக்காவில் வசிக்கும் பெண்மணி ஒருவர் பார்பி டால் மீது தான் கொண்ட மோகத்தால் சுமார் 80000$ டாலர் பணத்தை செலவளித்துள்ளார். அசுசா செக்கமட்டோ என்ற இந்த பெண் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

Barbie Shrine

சுமார் 145 பார்பி பொம்மைகள், 40 ஜோடி பார்பி சூக்கள் மற்றும் 60 பார்பி பைகள் போன்ற பார்பி பொருள்களை சேகரித்து வைத்துள்ளார். மேலும் அசுசா கூறுகையில் அவர் 1000 க்கும் மேற்பட்ட டாலர் பணத்தை பார்பி மாநாடுகளில் கலந்து கொள்ள பார்பி பர்னிச்சர் வாங்க செலவளித்துள்ளாராம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்பி டால்

பார்பி டால்

ஜப்பானை பூர்வீகமாக கொண்ட இவர் நகத்தை அழகுபடுத்தும் தொழில் செய்து வருகிறார். தனது 15 ஆம் வயதில் இவருக்கு பார்பி பொம்மைகள் மீது இவருக்கு ஆர்வம் வந்ததாம். கடந்த 20 வருடங்களாக பார்பி பொம்மைகள் மீது இவருக்கு ஏற்பட்ட ஆர்வம் குறையவே இல்லையாம். பார்பி டால் சம்பந்தபட்ட பொருட்களாக தேடி தேடி வாங்கி சேர்த்துள்ளார்.

MOST READ: எழுதும்போது கை நடுங்குதா? அது ஏன்? என்ன செஞ்சா இந்த பிரச்னை குணமாகும்?

பொம்மைகள்

பொம்மைகள்

தற்போது தனது தலைமுடியை பிங்க் நிறத்தில் கலர் செய்துள்ள இவர் தனது பெயரை கூட அசுசா பார்பி என்று மாற்றியுள்ளார். பார்பி பொம்மைகள் மீது இவர் கொண்ட ஆர்வத்தை பார்த்த பலரும் இவர் தனது உருவத்தை பார்பி பொம்மையாக மாற்றிக் கொள்வார் என கருதினார்கள். ஆனால் அதை மறுத்த இவர் பார்பி சம்பந்தபட்ட பொருட்கள் மீது தான் ஆர்வமே தவிர உருவத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.

80000$ டாலர்

80000$ டாலர்

இதுவரை 80000$ டாலர் மேற்பட்ட பணத்தை பார்பி ஆர்வத்துக்காக செலவளித்த இவர், தனது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் வாங்கிய உடன் ஆன்லைனில் பார்பி சம்பந்தபட்ட பொருட்களை வாங்கி குவிக்கிறார்.

தனது வீட்டையே இவர் ஒரு பார்பி வீடு போன்று மாற்றியுள்ளார். தனது பெட், திரைச்சீலை மற்றும் சுவர் பெயின்ட் உட்பட அனைத்தையும் இவர் பார்பி சம்பந்தமாகவே மாற்றியுள்ளார்.

MOST READ: கஷ்டம் மட்டும்தான் வருதா? உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா?

வீட்டின் பெயிண்ட்

அவர் வீட்டின் பெயிண்ட் டார்க் பிங்க் கலரில் உள்ளது. அதில் பார்பி சம்பந்தபட்ட படங்கள், தீம்கள் கொண்டு அழகுபடுத்தியுள்ளார். அவர் வீட்டிற்கு நுழையும் யாரும் அவர் பயன்படுத்தும் டம்ளரில் இருந்து டவல் போன்ற பொருட்களை பார்க்கும் போது பார்பி டால் மீது அவர் கொண்ட ஆர்வத்தை உணரலாம்.

தனது வீட்டின் ஷோகேசில் பார்பி பொருட்களை காட்சிக்கு வைத்துள்ள இவர் தனது ஆடைகள் கூட பார்பி சம்பந்தமாகவே வாங்கி வைத்துள்ளார். அவரது வார்ட்ரோப் முழுக்க பிங்க் நிற உடைகள், பைகள் மற்றும் ஷுக்களே அதிகம் உள்ளது.

தனது 15 வயதில் ஏற்பட்ட இந்த பார்பி ஆர்வம் அமெரிக்காவில் வாழ்ந்தும் இத்தனை ஆண்டுகளாக கூடுகிறதே தவிர குறையவில்லை என்கிறார் அசுசா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Spends Over $80,000 To Turn Her House Into A Barbie Shrine

A woman claims to be the biggest fan of Barbie doll, as she has spent over $80,000 on her doll obsession even though she is 34 years old. The woman named Azusa Sakamoto, is from Los Angeles.
Desktop Bottom Promotion