For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அர்ச்சனைக்கு தேங்காய், வாழைப்பழம் மட்டும் பயன்படுத்துவதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கோவில்களில் உள்ள கடவுள்கள் மாறுபட்டாலும் அனைத்து கோவில்களிலும் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் கடவுளுக்கு தேங்காய் மற்றும் வாழைப்பழம் வைத்து வழிபடுவது.

|

மதங்களையும், ஆலயங்களையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. மதநம்பிக்கைகளை விதைத்து அதை பாதுகாக்கும் இடமாக ஆலயங்கள் இருக்கிறது. அனைத்து மதத்தினருக்கும் அவர்களின் தெய்வங்கள் வாழும் இடம் கோவில்தான். இந்தியாவை பொறுத்தவரையில் பெரும்பான்மையான மக்கள் இந்து மதத்தை சேந்தவராக இருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள இந்து மத கடவுள்களின் எண்ணிக்கையையும், கோவில்களின் எண்ணிக்கையையும் கணக்கிடவே முடியாது.

Why Only Coconuts and Bananas are Offered in Temples, Pujas?

கோவில்களில் உள்ள கடவுள்கள் மாறுபட்டாலும் அனைத்து கோவில்களிலும் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் கடவுளுக்கு தேங்காய் மற்றும் வாழைப்பழம் வைத்து வழிபடுவது. இந்த சந்தேகம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கலாம், ஆனால் அதற்கு பதில்தான் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. நீண்ட கால இந்த சந்தேகத்திற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் மற்றும் வாழைப்பழம்

தேங்காய் மற்றும் வாழைப்பழம்

தேங்காய் மற்றும் வாழைப்பழம் இரண்டும் இயற்கையின் உன்னதமான படைப்புகளாக கருதப்படுகிறது. கலப்படம் இல்லாத இயற்கை சார்ந்த பொருட்களாக இது இன்றும் மதிக்கப்படுகிறது. பெரும்பாலான இயற்கை பொருட்கள் விதைகளை உடையதாக இருக்கிறது, அவை மீண்டும் ஒரு செடியை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஆனால் தேங்காயும், வாழைப்பழமும் அப்படியல்ல. இது மட்டுமின்றி வேறு சில ஆன்மீக காரணங்களும் இதற்கு உள்ளது.

தேங்காயின் சாராம்சம்

தேங்காயின் சாராம்சம்

தேங்காயின் பயன்கள் நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. தேங்காயை சாப்பிட விரும்பினால் அதனை உடைத்துதான் ஆக வேண்டும். அதை சாப்பிட்ட பிறகு அதன் வெளிப்புறத்தை தூக்கி எறிந்து விடுவீர்கள். அதை தவிர உங்களால் வேறு எதுவும் செய்ய இயலாது. அதை வைத்து உங்களால் மற்றொரு மரத்தை உருவாக்க இயலாது. நீங்கள் மரத்தை உருவாக்க விரும்பினால் ஒரு முழுத்தேங்காயால் மட்டுமே முடியும்.

வாழைப்பழத்தின் சாராம்சம்

வாழைப்பழத்தின் சாராம்சம்

வாழைப்பழத்தை சாப்பிடும் போது பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை வீசிவிடுவீர்கள். அது தவிர உங்களால் அதை வைத்து எதையும் செய்ய இயலாது. வாழைமரத்திற்கு தேவையான பொருட்களை கொடுக்கும்போது அது மற்றொரு மரத்தை தானாக உருவாக்குகிறது.

MOST READ: ஆண்களுக்கு விறைப்பு பிரச்சினையும், ஆண்மைகுறைவும் ஏற்பட இந்த குறைபடுதான் காரணம் தெரியுமா?

கர்வம்

கர்வம்

தேங்காயின் மேல் இருக்கும் வெளிப்புற ஓடுதான் நமக்குள் இருக்கும் கர்வமும், அகங்காரமும் ஆகும். இதை நாம் உடைத்துத்தான் ஆக வேண்டும். எப்போது நாம் நம்மை சுற்றியிருக்கும் கர்வம் என்னும் ஓட்டை உடைக்கிறோமோ அப்போதுதான் நம் மனம் திறந்து அதற்குள் மென்மையான தேங்காய் போன்ற இனிமையான குணம் இருக்கும். அதில் இருக்கும் இனிமையான தண்ணீர் நம் மனதில் இருக்கும் பக்தியை குறிக்கும். அதில் இருக்கும் மூன்று கண்களும் நம்முடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை குறிப்பதாகும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழம் கடவுளுக்கு படைக்கப்படுவதன் அர்த்தம் என்னவெனில் எப்படி இனிமையான பழத்தை சுவையே இல்லாத தொந்தரவை ஏற்படுத்தும் தோலானது மூடியிருக்கிறதோ அதேபோல நமக்கு நன்மைகளை வழங்கக்கூடிய நம்மு இருக்கும் பல நல்ல குணங்களை தேவையே இல்லாத சில தீய குணங்கள் மூடியிருக்கின்றன. அவற்றை துறந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் இனிமையை உணர முடியும். இதை நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்து விட்டார்கள். அதனால்தான் அது இன்றும் நம் வழிபாடு முறையில் உள்ளது.

ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்?

ஏன் கோவிலுக்கு செல்ல வேண்டும்?

கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும் கூறிய நம் முன்னோர்கள் எப்படி செல்ல வேண்டும் என்று கூறாமல் இருப்பார்களா? கோவிலுக்கு செல்வதற்கு பல ஆன்மீக காரணங்கள் இருந்தாலும் நிருபிக்கப்பட்ட பல அறிவியல் காரணங்களும் உள்ளது. கோவில்கள் எந்த அளவில் இருந்தாலும் அவை புனிதமானதாகவே கருதப்படுகிறது. கோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும் என்பதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

MOST READ: நல்லவர் போல நடிச்சு ஏமாத்துறதுல இந்த ராசிக்காரர் பலே கில்லாடி..இவங்ககிட்ட எச்சரிக்கையா இருங்க...

பூமியின் காந்த அலைகள்

பூமியின் காந்த அலைகள்

பொதுவாக கோவில்கள் பூமியின் மின்காந்த அலைகள் கடக்கும் இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. சொல்லப்போனால், கோவில்கள் சக்திகளின் உறைவிடமாக அமைந்துள்ளன. வடக்கு மற்றும் தெற்கு துருவங்களின் வழியாக செல்லும் இந்த காந்த அலைகள் உங்களுக்கு நேர்மறை ஆற்றலை வழங்குகிறது.

கர்ப்பகிரஹம்

கர்ப்பகிரஹம்

கர்ப்பகிரஹம் அது இருக்கும் இடத்தை பொறுத்து அதிக மின்காந்த ஆற்றலை வழங்குகிறது. மூலவர் சிலை கர்ப்பகிரஹத்தின் மையத்தில் இருக்கும், அதுமட்டுமின்றி மூலவரை சுற்றி தாமிர தகடுகளும் அதில் வேதக்குறிப்புகளும் செதுக்கப்பட்டிருக்கும். மூலகிரஹத்தில் இருக்கும் தாமிரம் மின்காந்த அலைகளை அதிகளவில் ஈர்த்து அதை நேர்மறை ஆற்றலாக மாற்றி சுற்றியிருப்பவர்களுக்கு வழங்கும்.

விளக்கேற்றுதல்

விளக்கேற்றுதல்

அனைத்து ஆற்றலின் விளைவும் இங்கு மிகவும் அதிகமாக உள்ளது. விளக்கு வெப்பம் மற்றும் ஒளி ஆற்றலை வெளியிடுகிறது. மணி ஓசைகள் மற்றும் தொடர்ச்சியான மந்திரங்கள் அதிக நல்ல சக்திகளை வெளியிடும். பூக்களின் நறுமணமும், கற்பூரம் கொளுத்துவதும் உங்களுக்குள் பல நல்ல வேதி மாற்றங்களை உண்டாக்கும்.

MOST READ: ஏன் சீனர்கள் வெறும் வயிற்றில் ஒரு துண்டு இஞ்சியை தினமும் சாப்பிடறாங்கனு தெரியுமா..?

தீர்த்தம்

தீர்த்தம்

கடவுளின் சிலைக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் ஏலக்காய், துளசி, சாம்பிராணி போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு அது தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இது உங்களுக்கு ஆற்றலை வழங்குவதோடு, ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. மேலும் இது இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: temples coconut banana
English summary

Why Only Coconuts and Bananas are Offered in Temples, Pujas?

Coconut and Banana are the main two natural things which offered in almost every Hindu temple.
Desktop Bottom Promotion