Just In
- 7 hrs ago
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- 11 hrs ago
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- 23 hrs ago
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- 24 hrs ago
வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்
Don't Miss
- Movies
ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. கொடுக்கப்போறது யார் தெரியுமா?
- Sports
இவ்ளோ மோசமான பிட்ச்சா? போட்டியே வேண்டாம்.. புகழ்பெற்ற மைதானத்தில் நடந்த பரபர சம்பவம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- News
மண்டைக்கு ஏறிய கோபம்.. கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றி கொன்ற மனைவி.. கைது!
- Technology
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இராமாயண போருக்கு காரணமாக இருந்த சூர்ப்பனகைக்கு இராவணனின் மரணத்திற்கு பின் என்ன ஆனது தெரியுமா?
இராமாயண போருக்கு காரணமாக இருந்தது இராவணனின் ஆணவமும், பெண்ணாசையாகவும் இருந்தாலும் அவை அனைத்திற்கும் ஆரம்ப புள்ளியாக இருந்தது இராவணனின் சகோதரி சூர்ப்பனகைதான். சூர்ப்பனகை இராமன் மீது கொண்ட ஆசையும் அதனால் அவளுக்கு ஏற்பட்ட அவமானமுமே இராமாயண போரின் தொடக்கமாக இருந்தது.
சூர்ப்பனகைக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக பழிவாங்க இராவணன் சீதையை கவர்ந்து சென்றதும், அதன் பின் இராமன் ஆஞ்சநேயரின் துணைகொண்டு இராவணனுடன் போரிட்டு அவனை கொன்று சீதையை மீட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் போருக்கு மூலகாரணமாக இருந்த சூர்ப்பனகைக்கு இராவணனின் மரணத்திற்கு பிறகு என்ன நேர்ந்தது என்பது நாம் பலரும் அறியாத ஒன்று. இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

சூர்ப்பனகையின் ஏமாற்றம்
இராமாயண போர் முடிந்து இராமன் இராவணனை வதைத்து அசோகவனத்தில் சிறைவைக்க பட்டிருந்த சீதையை மீட்டார். இராவணனின் மறைவு சூர்ப்பனகைக்கு துக்கத்தை ஏற்படுத்தினாலும், சீதையை பழிவாங்காதது அவளுக்கு சீதை மீது தீராப்பகையையும், ஆத்திரத்தையும் உண்டாக்கியது.

சீதையின் அயோத்தி வருகை
சீதை இராவணனிடம் இருந்து மீட்கப்பட்டு அயோத்தி அழைத்து வரப்பட்டார். அயோத்தியில் சீதையின் கற்பு மீது சந்தேகம் எழ இராமன் சீதையை தீக்குளிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தர்மபத்தினியான சீதையும் அதனை செய்து தன்னுடைய கற்பொழுக்கத்தை இந்த உலகத்திற்கு நிரூபித்தார். பின்னர் சீதை கருவுற்றிருந்த நிலையில் வனத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. வனத்திற்குள் சென்ற் சீதை தனக்கென ஒரு குடில் அமைத்து அங்கு வாழ தொடங்கினார்.

சூர்ப்பனகையின் வஞ்சம்
சீதை இராமரால் பரிசோதிக்கப்பட்டதும், பின்னர் அரண்மனையை விட்டு வெளியேறி வனத்திற்குள் வாழ்வதும் சூர்ப்பனகைக்கு தெரியவந்தது. சீதையை பழிவாங்க இதுதான் சரியான சமயம் என நினைத்த சூர்ப்பனகை தனக்கு நேர்ந்த நிராகரிப்பிற்க்கும், இலட்ச்சுமணநாள் தன் மூக்கு அறுபட்டதற்கும் பழிவாங்கும் பொருட்டு சீதையை வனத்திற்குள் சந்திக்க சென்றாள்.

சூர்ப்பனகையின் மகிழ்ச்சி
சீதையை சந்திக்க வனத்திற்கு சென்ற சூர்ப்பனகை அங்கு சீதை கணவனால் கைவிடப்பட்டு வனத்திற்குள் வசிப்பதை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியுற்றாள். தன் மகிழ்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு சீதையை தன் வார்த்தைகளால் காயப்படுத்தவும் முடிவு செய்தாள். சீதையிடம் தான் பட்ட அவமானங்களையும், வேதனைகளையும் கூறி இப்பொழுது நீயும் அதே நிலையில்தான் இருக்கிறாய் என்று கூறி மகிழ்ந்தாள்.
MOST READ: இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பிரிந்து விடுவார்களாம் தெரியுமா?

சீதையின் எதிர்வினை
பொறுமையே உருவான சீதை சூர்ப்பனகையின் கடுஞ்சொற்களுக்கு புன்னகையையே பதிலாக தந்தார். மேலும் சூர்ப்பனகைக்கு பசியாற பழங்கங்களையும் தந்தார். இந்த பழங்கள் இராவணனின் மனைவி மண்டோதரி தோட்டத்தில் இருக்கும் பழங்கள் போல சுவையாக இருக்கும் என்று கூறினார்.

சூர்ப்பனகையின் ஏமாற்றம்
சீதையின் புன்னனகயும், கனிவும் சூர்ப்பனகையை எரிச்சலூட்டியது. சீதை தன் நிலையை எண்ணி வருத்தத்தில் அழுவார் அவரின் வலியை கண்டு தான் மகிழ்ச்சி கொள்ளலாம் என்று எண்ணி கொண்டிருந்த சூர்ப்பனகைக்கு ஏமாற்றமே கிடைத்தது. சீதை தன்னுடைய விதியை ஏற்றுக்கொண்டதுடன் சூர்ப்பனகையிடம் " எவ்வளவு நாள் நான் விரும்புபவர்கள் என்னுடனேயே இருந்து என்னை விரும்பவார்கள் என்று எதிர்பார்க்க முடியும் " என்று கூறினார்.

சூர்ப்பனகையின் ஆதங்கம்
சீதையின் அமைதியான பேச்சை கேட்ட சூர்ப்பனகையின் சீற்றம் மேலும் அதிகரித்தது. தனக்கு நேர்ந்த அநீதிகளுக்கு தனக்கு நியாயம் வேண்டுமென்று சூர்ப்பனகை கேட்டாள். அதற்கு அவர்களுக்கு ஏற்கனவே தண்டனை கிடைத்து விட்டது என சீதை கூறினார்.

சீதையின் சமாதானம்
சீதை சூர்ப்பனகையிடம் " தன்னை அவமதித்த தசரத குமாரர்கள் எப்பொழுதோ அவர்கள் வாழ்க்கையில் அமைதியை இழந்து விட்டனர் " என்று கூறினார். சீதை சூர்ப்பனகையிடம் அனைத்தையும் கடந்து செல்லும்படி கூறினார். நடந்ததை மாற்ற முடியாது ஆனால் உன்னால் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று கூறினார்.
MOST READ: சிவபெருமானிடம் இருந்து வரம் வாங்க முனிவர்கள் கடைபிடித்த வழிபாட்டு முறைகள் இதுதான்...!

சீதையின் அறிவுரை
மேலும் சூர்ப்பனகை தனக்கான நரகத்தை தானே உருவாக்கி கொண்டதாக கூறினார். மேலும் இப்படியே தொடர்ந்தால் இராவணனின் நிலைதான் உனக்கும் ஏற்படும் என்றும் கூறினார். தன் சகோதரர்கள் இறந்த போதும், இராஜ்ஜியம் அழிந்த போதும் கூட மனம் மாறவில்லை என்றால் உன்னுடைய மாண்பை பற்றி நீயே நினைத்து பார் என்று அறிவுறுத்தி அவளை வழியனுப்பி வைத்தார்.