For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிரிய போருக்குப்பின் அந்த மக்கள் என்ன சாப்பிடறாங்க? இந்த பத்திரிகையாளர் சொல்றத கேளுங்க

|

போரினால் அழிந்துபோன ஒரு நாட்டில், உணவு, கலாச்சாரத்துடனான காதல் பெரும்பாலும் இதமான ஒரு உணர்வைத் தருகிறது. ஒரு நாட்டின் கலாச்சாரம் என்பது அந்த நாட்டில் வாழும் ஒருவரின் கல்வி அல்லது பட்டத்துடன் எந்த தொடர்பும் கொள்வதில்லை, அந்த நாட்டின் மக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான் கலாச்சாரம். இது உணவிற்கும் பொருந்தும்.

சிரியர்களைப் பொறுத்தவரை, உணவு என்பது ஒரு தேவைக்கும் மேலானது, அது நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போரில் இழந்த அவர்களின் வளமான பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது. சிரியா போருக்குப் பின் அந்த மக்களுடைய பாரம்பரியம் மற்றும் உணவுப் பழக்கம் பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

சிரியா போர்

சிரியர்களைப் பொறுத்தவரை, உணவு என்பது ஒரு தேவைக்கும் மேலானது, அது நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போரில் இழந்த அவர்களின் வளமான பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது. நீங்கள் சிரிய உணவு வகைகளைப் பற்றி விரிவாக பார்க்கும்போது, அது பல இடம்பெயர்வு, வெற்றிகள் மற்றும் வர்த்தகங்களின் ஒருங்கிணைப்பு என்பதை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு உணவிற்கும் ஒரு தனிப்பட்ட கதை உண்டு. அந்த விதத்தில், சிரிய உணவு என்பது பல்வேறு கலாச்சாரக் கலவை ஒரே தட்டில் இடம்பெறுவது போன்ற ஒரு உணர்வைத் தரும்.

MOST READ: டயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா?

ஜெனன் மௌசா

தொலைகாட்சி பத்திரிகையாளர் ஜெனன் மௌசா, வடக்கு சிரியாவில் ஒரு மாதத்திற்கு மேலாக தங்கி இருந்தார். அங்கு அவர் குர்திஷ் மற்றும் அரேபியன் உணவு வகைகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் சிரிய மக்களின் அன்பான விருந்தோம்பல் பற்றியும் அவர்களின் உணவு வகைகளைப் பற்றியும் தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

டுவிட்டுகள்

முதல் இரண்டு ட்வீட்டுகள் வாசிக்கப்பட்டன, இவரின் மூன்றாவது இடுகையில் சிரியாவின் இரண்டு பிரபலமான உணவு வகைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மலௌக்கியே மற்றும் அரிசி ஃபத்தா.

மற்றொரு அழைப்பில், உள்ளூர்வாசிகள் உணவை சாப்பிட ஸ்பூன் பயன்படுத்துவதில்லை என்றும் கைகளால் தான் உணவை உண்ணுவதாகவும் குறிப்பிடுகிறார். அவர் தன்னுடைய மற்றொரு பதிவில் தான் சந்தித்த ஒரு சிரிய குடும்பம் பற்றியும் அவர்கள் இவரை வரவேற்று அந்த நகரின் சிறந்த உணவான டோல்மா கொடுத்து உபசரித்ததைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

கிபே ஸ்பெஷல் உணவு

மேலும் அவர் கிபேவைப் பற்றி குறிப்பிடுகிறார். நறுக்கிய வெங்காயத்துடன் பல்குர், விழுதாக அரைக்கப்பட்ட மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, அல்லது செம்மறி ஆட்டிறைச்சி அல்லது ஒட்டக இறைச்சி ஆகியவற்றுடன் சேர்த்து மத்திய கிழக்கு மசாலாப் பொருட்கள் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படுகிறது இந்த உணவு வகை.

அந்த நாட்டில் அவர் சுவைத்த வாயில் நீர் ஊறும் உணவின் காரணமாக தனது சொந்த எடையைப் பற்றிய கவலையை வெளிப்படுத்திய அவர் தனது எட்டாவது பதிவில், "வீட்டிற்கு திரும்பிச் சென்று ஒரு எடை மெஷினில் நிற்க நான் எவ்வளவு பயப்படுகிறேன் என்பதை இப்போது நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள்" என்று எழுதியிருக்கிறார்.

MOST READ: காதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கெடுமையே!

மக்களின் உபசரிப்பு

மேலும், சிரியாவில் மிகவும் நட்பான மக்களுடனான தனது அழகான அனுபவத்தையும் அவர்களின் இதயத்தை குளிர்விக்கும் சைகைகளையும் நினைவு கூர்ந்த ஜென்னா, "போர் நாட்டுக்கு நிறைய தீங்கு செய்துள்ளது, ஆனால் அது மக்களின் விருந்தோம்பல் மற்றும் நட்பைப் பாதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். "பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காமல் இவை அனைத்தும் ஒரு விருந்தினரான எனக்கு கிடைத்துள்ளது" என்று தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

War-torn Syria’s Superlative Culinary Tradition Goes Viral, Thanks to Journalist Jenan Moussa

In a country that is ravaged by war, the love affair with food, culture is often considered a lighter fare. But, culture has nothing to do with one's education or degree and it is just how people live it. The same applies to food.