For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறந்தவர்களின் படத்தை இந்த இடத்தில் மாட்டுவது உங்கள் வீட்டில் திடீர் மரணத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தை பொறுத்தவரை வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும் என்பதற்கு ஒரு விதிமுறை உள்ளது. அது இறந்தவர்களின் படங்களுக்கும் பொருந்தும்.

|

நமது முன்னோர்கள் மற்றும் இறந்தவர்களின் படங்களை வீட்டில் மாட்டி வைப்பது என்பது அனைவரின் வீட்டிலும் நடக்கும் ஒரு செயலாகும். இறந்தவரின் படங்களை வீட்டில் மாட்டி வைத்தால் நமது வீட்டிற்கு எந்த தீயசக்தியும் வராது என்பது நம்பிக்கையாகும்.

Vastu Shastra: Where to hang pictures of your ancestors ?

வாஸ்து சாஸ்திரத்தை பொறுத்தவரை வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும் என்பதற்கு ஒரு விதிமுறை உள்ளது. அது இறந்தவர்களின் படங்களுக்கும் பொருந்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி இறந்தவர்களின் படங்களை வீட்டில் எங்கே வைக்கலாம், எங்கே வைக்கக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூஜையறை

பூஜையறை

இறந்த உறவினர்கள் அல்லது நண்பர்களின் படத்தை ஒருபோதும் பூஜையறையில் வைக்கக்கூடாது. இவ்வாறு வைப்பது உங்கள் வீட்டில் பல துர்சம்பவங்கள் நடக்க காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.

வடகிழக்கு திசை

வடகிழக்கு திசை

உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் இறந்தவர்களின் படங்களை நீங்கள் தாராளமாக மாட்டிக்கொள்ளலாம். ஆனால் அந்த மூலையில் பூஜையறையோ அல்லது கடவுளின் படமோ இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும்.

வடக்கு மூலை

வடக்கு மூலை

நீங்கள் உங்கள் முன்னோர்கள் அல்லது இறந்தவர்களின் படத்தை எங்கு வைத்தாலும் அது வீட்டின் வடக்கு திசையில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும். அதற்கு எதிரில் இருக்கும் உங்களுக்கு அருகில் உள்ள சுவரில் படத்தை மாட்டிவைக்கலாம்.

MOST READ:உங்கள் பிறந்த தேதியின் படி எந்த வயதில் உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா?

தென்மேற்கு

தென்மேற்கு

உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையில் இறந்தவர்களின் படங்களை ஒருபோதும் மாட்டக்கூடாது. இவ்வாறு செய்வது உங்கள் வீட்டில் பல்வேறு வாக்குவாதங்களுக்கும், சண்டைகளுக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து கூட ஏற்படலாம்.

வீட்டின் மையத்தில்

வீட்டின் மையத்தில்

உங்கள் வீட்டின் மையத்திலோ அல்லது வரவேற்பறையிலோ உங்கள் இறந்த முன்னோர்களின் படத்தை வைக்கக்கூடாது. இது உங்கள் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகளை பரவச்செய்யும். இதனால் வீட்டில் திடீர் மரணங்கள் கூட ஏற்படலாம். உங்கள் படுக்கையறையின் வாஸ்து எப்படி இருக்க வேண்டுமென்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

அறையின் வண்ணம்

அறையின் வண்ணம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் படுக்கையறைக்கு ஏற்ற நிறம் எதுவெனில் மெல்லிய ரோஜா, நீலம் மற்றும் பச்சை ஆகும். சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தை படுக்கையறையில் தவிர்க்க வேண்டும். எக்காரணம் கொண்டும் படுக்கையறைக்கு சிவப்பு நிறத்தை தேர்ந்தெடுக்கக்கூடாது.

கண்ணாடிகள்

கண்ணாடிகள்

பொதுவாக உங்கள் படுக்கையறையில் கண்ணாடி வைக்காமல் இருப்பதே நல்லது, குறிப்பாக படுக்கைக்கு நேரெதிரே வைக்கக்கூடாது. பிரதிபலிப்பு தூக்க பிரச்சினைகளை உண்டாக்கும், இருப்பினும் கண்ணாடி மாட்ட விரும்பினால் தூங்குவதற்கு முன்னர் அதனை மூடி விட்டு தூங்குங்கள்.

MOST READ:ரமலான் நோன்பிருக்கும் சர்க்கரை நோயாளிகள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

படுக்கை

படுக்கை

உங்கள் படுக்கையை எப்பொழுதும் அறையின் மையத்தில் போடாதீர்கள். எப்பொழுதும் ஏதாவது ஒரு மூலையில் போடுவதே நல்லது. சுவரிலிருந்து 4 அங்குலம் இடைவெளி விட்டு கட்டிலை போடுவது நல்லது. எப்போதும் அறையின் மையம் இடைஞ்சல் இல்லாமல் இருப்பதே நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Shastra: Where to hang pictures of your ancestors ?

According to Vastu Shastra never hang your ancestors pictures in these places.
Story first published: Wednesday, May 15, 2019, 17:50 [IST]
Desktop Bottom Promotion