Just In
- 2 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 2 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 6 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- 11 hrs ago
இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா?
Don't Miss
- Movies
லவ் யூ ஸோ மச் ... மாலத்தீவில் ஆர்யா - சாயிஷா ரொமான்ஸ்!
- Sports
அண்ணே! ஆடினது போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. சீனியர் வீரருக்கு கல்தா.. சோலியை முடித்த ராகுல்!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம்களை பயன்படுத்த முடியாது..!
- News
நாளை அரையாண்டு தேர்வு: முன்கூட்டியே வெளியான கேள்வித்தாள்... கல்வித்துறை விசாரணை
- Automobiles
2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...
- Technology
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- Education
விண்ணப்பித்துவிட்டீர்களா? ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த அறிகுறிகளில் ஒன்று இருந்தாலும் உங்கள் ஆன்மா தனித்துவம் வாய்ந்த அரிதான ஆன்மாவாம் தெரியுமா?
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மா இருக்கிறது. ஆன்மா உடலை விட்டு பிரியும் நிகழ்வே மரணம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அறிவியல்ரீதியாகவும் சரி, ஆன்மீகரீதியாகவும் சரி ஆன்மா உடலை விட்டு விட்டு பிரியுமே தவிர பூமியை விட்டு செல்லாது, தன் பயணத்தை வேறு உரு உடலில் இருந்து தொடங்கும்.
இந்த சுழற்சிதான் பூமியின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. ஆன்மாக்களில் மொத்தம் ஆறு வகை உள்ளது. அதில் வயதான ஆன்மா என்னும் அனுபவம் நிறைந்த ஆன்மா மிகவும் வலிமையானது. உங்களுக்குள் இருப்பது அப்படிப்பட்ட ஆன்மா எனில் நீங்கள் மிகவும் தனித்துவமானவர்களாக இருப்பீர்கள். இந்த தனித்துவம் முந்தைய ஜென்மங்களின் அனுபவங்களில் இருந்து பெற்றதாக இருக்கும். உங்கள் ஆன்மா அனுபவம் வாய்ந்த ஆன்மாவா என்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் அனுபவம் வாய்ந்த ஆன்மாவிற்கான அறிகுறிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

ஆழமாக சிந்திப்பீர்கள்
சுய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் தவிர உங்கள் சிந்தனை வேறு எதையும் பற்றி இருக்காது. உங்களின் உணர்ச்சிகளை நீங்கள் எப்பொழுதும் சுயமதிப்பீடு செய்து கொண்டே இருப்பீர்கள், மனித மனநிலையை மேலும் மேலும் புரிந்து கொண்டு உங்களை சிறந்தவராக மாற்றிக்கொள்ள அதிகம் முயலுவீர்கள்.

தனிமையை விரும்புபவர்கள்
இந்த வகையான ஆன்மா உள்ளவர்கள் பொதுவாக மற்றவர்கள் செய்யும் செயலை செய்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். புதிய நண்பர்களை சேர்த்து கொள்வதோ அல்லது மற்றவர்களுடன் நெருங்கி பழகுவதோ இவர்களுக்கு பிடிக்காது. இதனால் இவர்கள் பெரும்பாலும் தனிமையில்தான் இருப்பார்கள். மற்றவர்கள் தங்களின் ஆற்றலை உறிஞ்சுவதாக இவர்கள் நினைப்பார்கள்.

ஏன் என்று கேட்கமாட்டார்கள்
ஒரு பிரச்சினை எழும்போது நீங்கள் அதனை முழுமையாக ஆராய்ந்து அதற்கான தீர்வை தேட முயலுவார்கள். எதுவும் செய்யாமல் உட்கார்ந்து ஏன் எதுவும் நடக்கவில்லை என்று புலம்பி கொண்டிருக்கமாட்டார்கள். செயலில் இறங்கி காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். இது அனுபவம் வாய்ந்த ஆன்மாவிற்கான முக்கியமான அறிகுறியாகும்.

ஆன்மீக நாட்டம்
உங்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கிறதா? ஏனெனில் இந்த வகை ஆன்மாக்கள் அன்பு மற்றும் அமைதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் நேரத்தை உபயோகமாக செலவழிக்கும் ஒரு வழியாக அவர்கள் இதைத்தான் நினைப்பார்கள்.

அமைதியானவர்கள்
எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் எப்படி அமைதியாக இருக்க வேண்டும், ஏ[எப்படி உங்களை கூலாக வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்தால் உங்கள் ஆன்மா இந்தவகை அரிதான ஆன்மாவாக இருக்க வாய்ப்புள்ளது. கோபமா, பதட்டமோ எந்த காரியத்தையும் சாதிக்க உதவாது என்று உங்களுக்கு நன்கு தெரியும்.

கற்றுக்கொள்ளும் ஆர்வம்
உங்கள் ஆன்மா அனுபவம் வாய்ந்த ஆன்மாவா என்பதை கண்டறியும் ஒரு எளிய வழி உங்களின் கற்றுக்கொள்ளும் ஆர்வம்தான். ஏனெனில் இந்தவகை ஆன்மா இருப்பவர்கள் தங்களை பற்றியும் உலகத்தை பற்றியும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். கற்றுக்கொள்வதும், சுயமுன்னேற்றமும் உங்களை யார் என நீங்கள் புரிந்து கொள்ளவும், இந்த உலகத்திற்கு நிரூபிக்கவும் உதவும். பக்குவம் அடைய சிறந்த வழி கற்றுக்கொள்வதுதான் என்பதில் இவர்களுக்கு நம்பிக்கை இருக்கும்.

இலக்கிய ஆர்வம்
பழைய இலக்கியங்களை வாசிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம் ஆனால் அவர்களின் வெளிப்பாடுகளை உண்மையாக அனைவரும் பாராட்டமாட்டார்கள். இலக்கியங்களை உண்மையாக நேசித்து அதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஆன்மா மிகவும் தனித்துவமானது.

மரணத்தை பற்றிய பயம்
இந்த ஆன்மாக்களுக்கு தாங்கள் இறக்கப்போகிறோம் என்பது நன்கு தெரியும். வாழ்க்கையின் சுழற்சியை அவர்கள் நன்கு அறிவார்கள். இதை நினைத்து பயப்படுவதற்கு பதிலாக இவர்கள் அதனை எதிர்த்து நிற்பார்கள். சாகப்போகிறோம் என்பது அவர்களை கனவுகளை விரைவாக அடைய வேண்டும் தூண்டுகோலாக இருக்கும்.

மனஅழுத்தம்
முட்டாள்தனமான மக்கள், தேவையில்லாத நாடகங்கள், வேடிக்கையான சூழ்நிலைகள் மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கலாம் ஆனால் இவை வாழ்க்கையில் தேவையில்லாத குழப்பங்களையும், மனஅழுத்தத்தையும் உண்டாக்கும். உங்கள் ஆன்மா அனுபவம் வாய்ந்த ஆன்மாவாக இருந்தால் நிச்சயம் இவற்றிலிருந்து விலகிதான் இருக்கும்.

புதிய நபர்கள்
வாழ்க்கையை பற்றிய வேறு கண்ணோட்டம் உள்ளவர்களை உண்மையிலேயே உங்களுக்கு சந்திக்கும் ஆர்வம் இருந்தால் உங்கள் ஆன்மா கண்டிப்பாக அனுபவம் வாய்ந்த ஆன்மாவாகத்தான் இருக்கும்.