Latest Updates
-
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்...
இந்த ருத்ராட்சத்தை அணிபவர்கள் சிவனுக்கு இணையாக மதிக்கப்படுவார்களாம் தெரியுமா?
ருத்ராட்சம் என்பதும் இரண்டு சொற்களின் இணைப்பு ஆகும். ருத்ரம் என்பதன் பொருள் சிவன், ஆட்சம் என்பதன் பொருள் கண்கள் என்பதாகும்.
ருத்ராட்சம் அணிவது என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் ருத்ராட்சம் அணிவது சிவபெருமானே நம்முடன் இருப்பது போன்ற பலத்தை தரும். ருத்ராட்சத்திற்கும், சிவபெருமானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ருத்ராட்சம் என்பதும் இரண்டு சொற்களின் இணைப்பு ஆகும். ருத்ரம் என்பதன் பொருள் சிவன், ஆட்சம் என்பதன் பொருள் கண்கள் என்பதாகும்.

ருத்ராட்ச மரம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது என்று புராணங்கள் கூறுகிறது. ஒரு முகம் முதல் மொத்தம் 21 முகம் வகை ருத்ராட்சம் உள்ளது. ஆனால் 1 முதல் 14 முகம் வரை இருக்கும் ருத்ராட்சம் மட்டுமே மனிதர்களால் அணியப்படுகிறது. ஒவ்வொரு முக ருத்ராட்சத்திற்கும் ஒரு அர்த்தமும், சக்தியும் இருக்கிறது. இந்த பதிவில் ருத்ராட்சத்தில் ஒளிந்திருக்கும் பேராற்றல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

உடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு நல்லது
ருத்ராட்சம் உடலில் இருக்கும் ஆற்றலை அதிகரிக்கிறது, இது பல நோய்களுக்கு எதிராக போராடுவதன் மூலம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தின் படி ருத்ராட்சம் நமது உடலின் மூலக்கூறுகளை வலுப்படுத்துகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துவதன் மூலம் உடல் உறுப்புகளை நன்கு செயல்பட வைக்கிறது. இது உடலுக்குள் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் பாக்டீரியாக்களை சுத்தம் செய்கிறது. தலைவலி, இருமல், இரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றை இது சரி செய்கிறது.

ருத்ராட்ச ஜெபமாலை
ஜெபம் செய்வது நமது ஆன்மீக ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. ருத்ராட்ச மாலை ஒருவரின் ஆன்மீக ஆற்றல் மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. ருத்ராட்ச மாலை அணிவது கடந்த ஜென்மத்தில் செய்த பாவங்களை போக்கவும் இந்த ஜென்மத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்கவும் உதவும்.

எதிர்மறை சக்தியை விரட்டும்
இந்தியாவின் பண்டைய புராணங்களின்படி ஒவ்வொரு முக ருத்ராட்சமும் ஒரு கடவுளுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. இந்த ருத்ராட்சத்தில் இருக்கும் நேர்மறை சக்திகள் அது அணிந்திருபவருக்கு ஒரு கவசமாக செயல்பட்டு அவர்களை எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

ருத்ராட்சத்திற்கு மதம் கிடையாது
ருத்ராட்சம் பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடையேயான இணைப்பை உணர்த்துவதாக இருக்கிறது. ருத்ராட்சம் எந்த மதத்தையம் சார்ந்தது அல்ல. அனைத்து மதத்தினரும் அதனை அணியலாம் என்று கூறப்படுகிறது.

ருத்ராட்சத்தின் ஆரோக்கிய நன்மைகள்
ருத்ராட்சம் இரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் மனஅழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கிறது. இதனை தண்ணீரில் நனைத்து இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் அந்த நீரை குடிப்பது வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும். எண்ணெயில் 21 நாட்கள் இதனை ஊறவைத்து அந்த எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் உங்கள் வலி விரைவில் குணமாகும்.

அதிர்ஷ்டம்
ருத்ராட்சம் அதனை அணிதிருப்பவர்களுக்கு செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இதனை அணிவது ஒருவரது தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் அதிகரிக்கும் இதனால் அவர்களின் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். புத்தர், காந்தி, தலாய்லாமா என இதனை அணிந்த மாமனிதர்கள் ஏராளம்.

ருத்ராட்சத்தின் மருத்துவ மற்றும் அறிவியல் மதிப்பு
ருத்ராட்சம் அவற்றின் மின்காந்த பண்புகள் காரணாமாக பல அற்புதமான சக்திகளை கொண்டுள்ளது. இந்த மின்காந்த அலைகள் உங்கள் உடலை ஆன்மீகரீதியாகவும், ஆரோக்கியரீதியாகவும் பாதுகாக்கிறது.

ஒரு முக ருத்ராட்சம்
ஒரு முக ருத்ராட்சத்தில் இருக்கும் மகத்தான சக்தி என்னவெனில் அது இயற்கை சக்திகளின் உறைவிடமாகும். இந்த ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிதாகும். மேலும் இதனை அணிவதற்கும் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதனை அணிபவர்கள் சிவனுக்கு இணையானவர்களாக கருதப்படுவார்கள். இது ஆற்றலை பரப்பி முத்தியை அடைய செய்யும்.

ருத்ராட்ச மாலை
108 ருத்ராட்சங்களுடன் இருக்கும் மாலை பூரணமாலை என்று அழைக்கப்படுகிறது. 54 ருத்ராட்சங்களுடன் இருக்கும் மாலை அர்த்தமாலை எனவும், 27 ருத்ராட்சங்களுடன் இருக்கும் மாலை நட்சத்திர மாலை எனவும் அழைக்கப்படுகிறது. 21 ருத்ராட்சத்துடன் இருக்கும் மாலை இந்திர மாலை என்று அழைக்கபடுகிறது. இது மிகவும் அரிதான ஒன்றாகும்.

ருத்ராட்சமும், பஞ்ச பூதமும்
ருத்ராட்சம் பஞ்ச பூதங்களின் பண்புகளை கொண்டது. இது காஸ்மிக் கதிர்கள் மூலம் நிரப்பப்பட்டு அதனை உடல் முழுவதும் பரப்புவதால் நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையில் அமைதி அதிகரிக்கிறது. ருத்ராட்சம் அணிவது மற்றும் அதனை கொண்டு ஜெபிப்பது உங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை உண்டாக்கும்.



Click it and Unblock the Notifications











