For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிபகவானுக்கும், அரசமரத்திற்கும் உள்ள சுவாரஸ்யமான தொடர்பு என்ன தெரியுமா?

குரு நன்மையை வழங்கக்கூடியவராய் இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் பொருத்தமில்லாத இடத்தில் இருக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

|

இந்து மத வழிபாட்டில் அரசமரம் மிகவும் முக்கியமானதாகும். அரசமரம் அறிவியல் பயன்பாட்டிற்கு மட்டுமின்றி பல ஆன்மீக சடங்குகளுக்கும் பயன்படுவதாகும். இந்து மத நம்பிக்கைகளின் படி அரசமரம் நன்மைகளை வழங்கும் குருவுடன் தொடர்புடையது. இதனை தேவர்களின் குருவான பிரகஸ்பதி என்றும் கூறலாம்.

Significance of worshipping Peepal tree on Saturday

இந்திய இறையியலின் படி பிரகஸ்பதிதான் தேவர்களின் ஆசன ஆவார். ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு அனைத்து ராசிகளுக்கும் நன்மையை வழங்குபவர் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு ராசியிலும் இவர் இருக்கும் வீட்டை பொறுத்து இவர்கள் வழங்கும் நன்மைகள் இருக்கும். அரசமரத்தை வழிபடுவதன் மூலம் குருவின் அருளை எப்படி பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரசமர வழிபாடு

அரசமர வழிபாடு

குரு நன்மையை வழங்கக்கூடியவராய் இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் பொருத்தமில்லாத இடத்தில் இருக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் மோசமானதாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அரசமரத்தை வழிபடுவது தீமையை குறைத்து வாழ்க்கையில் நன்மையை ஏற்படுத்தும்.

யார் வழிபட வேண்டும்?

யார் வழிபட வேண்டும்?

அனைத்து ராசிக்காரர்களும் அரச மரத்தை வழிபடுவது நல்லது. இருப்பினும், உங்கள் ஜாதகத்தில் குருவின் பார்வை பலவீனமாக இருந்தாலோ அல்லது தவறான வீட்டில் இருந்தாலோ நீங்கள் நிச்சயமாக அரச மரத்தை வழிபட வேண்டும். அரச மரத்தை வழிபடுவதன் மூலம் குருவிடம் இருந்து கிடைக்கும் வரங்களை அதிகரிக்கலாம்.

பலன்கள்

பலன்கள்

அறிவு, ஆரோக்கியம், அதிர்ஷ்டம், செல்வம் என அனைத்தையுமே குருபகவான் வழங்குவார். பெண்களை பொறுத்தவரையில் குரு பகவானின் அருளால் திருமண தடைகள் நீங்கும், கணவருடனான உறவு பலப்படும். வேலையில் ஏற்படும் பிரச்சினைகள் எளிதில் நீங்கும். குருபகவானின் அருளை பெறுவதற்கு அரச மரத்தை வழிபடுவதுதான் சிறந்த மற்றும் எளிய வழி ஆகும்.

MOST READ: இந்த பிரச்சினைகள் இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி என்பதே இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்..

ஏன் சனிக்கிழமையில் வழிபட வேண்டும்?

ஏன் சனிக்கிழமையில் வழிபட வேண்டும்?

கொடூர அரக்கர்களான அஸ்வத்தனும் அவனது சகோதரனும் மக்களுடன் ஆபத்தான விளையாட்டை விளையாடி கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் அரச மரமாக வடிவெடுத்து கொள்வான் அதன் அருகில் வருபவர்களை மற்றொருவன் கொல்வான். இந்த இரண்டு அரக்கர்களும் சனிபகவானால் அழிக்கப்பட்டனர். இதனால் சனிக்கிழமையில் அரச மரத்தை வழிபடுவது புனிதமானதாக மாறியது. அதுமட்டுமின்றி சனிக்கிழமையில் லக்ஷ்மி தேவி அரச மரத்தில் வீற்றிருப்பார். இதனால் லக்ஷ்மிதேவியின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

அரச மர மந்திரம்

அரச மர மந்திரம்

அரச மரத்தின் வேரானது பிரம்மா என்றும், தண்டானது விஷ்ணு என்றும், இலைகள் சிவபெருமான் என்றும் என்றும் கூறப்படுகிறது. அரச மரம் விருக்ஷராஜா அல்லது மரங்களின் அரசன் என்றும் கூறப்படுகிறது. சமஸ்கிருதத்தில் அரசமரத்திற்கு மற்றொரு பெயர் அஸ்வத்தா ஆகும். அரசமரத்தை " மூல டூ பிரம்மா மஜ்ஹி டூ விஷ்ணு ரூபினே அக்ரதோ சிவரூபாயா விருக்ஷ ராஜாய நமஹ நமஹ " என்னும் மந்திரத்தை கூறி பூஜை செய்து வழிபடுவது உங்களுக்கு அனைத்து கடவுளின் அருளையும் பெற்றுத்தரும்.

அரச மர வழிபாட்டின் பலன்கள்

அரச மர வழிபாட்டின் பலன்கள்

அரச மர வழிபாட்டின் மூலம் மக்கள் நிலையான மனநிலையையும், தெளிவான சிந்தனையையும் பெறுவார்கள். முடிவெடுக்கும் திறமையானது பன்மடங்கு பெருகும். குருபகவானின் அருளானது புத்திசாலித்தனத்தையும், அதிர்ஷ்டத்தையும் வழங்கக்கூடும். திருமணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.

குழந்தைகளுக்கான பலன்கள்

குழந்தைகளுக்கான பலன்கள்

அரச மர வழிபாடு குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும். இது அவர்களின் புத்திக்கூர்மையை அதிகரித்து படிப்பில் சிறந்து விளங்க உதவும். தொழில் செய்பவர்களுக்கு சீரான முன்னேற்றத்தை வழங்கும். ஆரோக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி, செல்வம் ஆகியவற்றை வழங்கக்கூடும்.

MOST READ: நீங்கள் செய்யும் இந்த உடற்பயிற்சி தவறுகள் உங்களுக்கு சீக்கிரமே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

அறிவியல் உண்மைகள்

அறிவியல் உண்மைகள்

அதிகளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதில் அரச மரத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். காளி நேரத்தில் அரச மரத்திற்கு அருகே செல்வது சுத்தமான ஆக்ஸிஜனை உங்களுக்கு வழங்கும். இது பல மருத்துவ நன்மைகளையும் வழங்குகிறது. பண்டைய காலத்தில் முன்னோர்கள் அரச மர இலைகளை காயவைத்து அதில் தட்டு தயாரித்து அதில் உணவு உண்டனர். இது அவர்களை பல நோய்களில் இருந்து பாதுகாத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: lakshmi tree lord shiva pooja
English summary

Significance of worshipping Peepal tree on Saturday

According to hindu mythology worshipping Peepal tree is considered to bring prosperity.
Desktop Bottom Promotion