For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முற்பிறவியில் நீங்கள் என்னவான பிறந்தீர்கள் என்று எப்படி தெரிந்து கொள்வது? இத படிங்க...

By Sam Asir
|

சனாதன தர்மம், மறுபிறவி கொள்கை இரண்டும் ஒரே காலகட்டத்தில் தோன்றியிருக்கக் கூடும். சமய ஈடுபாடு கொண்டவர்கள் மறுபிறவியை ஒரு இறையியல் கொள்கையாக பார்க்கின்றனர். ஆனால் இந்து சமயத்தை பின்பற்றும் பெரும்பாலான மக்கள் இதை உண்மை என்றே ஏற்றுக்கொண்டுள்ளனர். மறுபிறவி கொள்கையை உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் காண கிடைக்கின்றன. மறுபிறவியை, தங்கள் கடந்த பிறவியை குறித்த நினைவுகளை கொண்ட ஜதிஸ்மரர்கள் மற்றும் வேதங்கள், முனிவர்களிடம் கிடைக்கும் சாட்சியங்கள் என இருவகையாக புரிந்து கொள்ளலாம்.

Reincarnation In Hindu Dharma

இந்து சமயத்தின் பல்வேறு நூல்களில் மறுபிறவியை குறித்து வாசிக்கலாம். பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம், "அர்ச்சுனா, நீயும் நானும் இவ்வுலகில் பலமுறை அவதரித்துள்ளோம். உனக்கு பழைய பிறவிகள் குறித்த நினைவுகள் இல்லை. எனக்கு எல்லா பிறவிகளில் நடந்தவையும் நினைவில் உள்ளது," என்கிறார். அந்த வகையில் கிருஷ்ணரை ஜதிஸ்மரர் என்று புரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிருஷ்ண பகவானும் அர்ஜுனனும்

கிருஷ்ண பகவானும் அர்ஜுனனும்

மறுபிறவியில் நம்பிக்கையுள்ளவர்கள், நம்பிக்கையற்றவர்கள் இருசாராருமே கடந்த பிறவி நினைவுகளை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். எல்லா கூற்றுகளுமே பலமுறை ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மறுபிறவி கொள்கையாலன்றி வேறு எதைக் கொண்டும் விளக்க இயலாத சில நிகழ்வுகள் உள்ளன. உதாரண குழந்தை மேதையான மொசார்ட்டின் திறமையை மரபணு, பரம்பரை ஆகியவற்றை மட்டும் கொண்டு விளக்கிட இயலாது. ஆனால், சென்ற பிறவியில் புகழ்பெற்றிருந்த இசைக்கலைஞன் இப்பிறவியில் கடந்த பிறவி யுக்திகளை இளமையிலேயே பயன்படுத்துவதாய் மறுபிறவி கொள்கை அடிப்படையில் விளக்க இயலும்.

MOST READ: வாழைப்பழத்தை வேகவைத்து சாப்பிடலாமா? சாப்பிட்டா என்ன ஆச்சர்யம் நடக்கும் தெரியுமா?

மறுபிறவி ஏன்?

மறுபிறவி ஏன்?

பூமியில் வாழ்ந்தபோது நிறைவேறிடாத ஆசைகளே திரும்பவும் பிறவியெடுக்க காரணமாக அமைவதாக இந்து தர்மம் கூறுகிறது. மரணம் மற்றும் மரணத்திற்கு பிறகானவை குறித்த இந்து சமய நோக்கை தெரிந்து கொண்டால் மட்டுமே இதை சரியான விதத்தில் புரிந்துகொள்ள முடியும்.

ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம்

ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம்

இந்து தர்மம் இரண்டு வகையான சரீரங்களை குறித்து பேசுகிறது. ஸ்தூல சரீரம் என்பது பூத உடல். நம்முடைய உடலை குறிக்கிறது. சூட்சும சரீரம் என்பது மனம், புத்திக்கூர்மை, உறுப்புகளின் உணர்ச்சி, ஆற்றல் ஆகியவற்றை குறிக்கிறது. கண்கள், காதுகள், தோல், நாக்கு, மூக்கு ஆகியவை இந்து தர்மத்தின்படி உண்மையான உணர்வு உறுப்புகளாக கருதப்படாது. அவை பார்த்தல், கேட்டல், உணர்தல், ருசித்தல் மற்றும் முகர்தல் ஆகிய உணர்வுகள் வெளியுலகோடு தொடர்பு கொள்ள உதவும் கருவிகளே.

மரணமும் லோகங்களும்

மரணமும் லோகங்களும்

இந்து சமய கொள்கைப்படி ஒருவர் மரித்ததும் அவரது ஸ்தூல சரீரம் இங்கே விடப்படும். சூட்சும சரீரம் பல்வேறு லோகங்களுக்கும் பயணம் செய்யும். சொர்க்கலோகம், மத்தியலோகம், பாதாளலோகம் ஆகியவை இந்து தர்மம் கூறும் பொதுவான லோகங்களாகும். கணக்கற்ற லோகங்கள் உள்ளன. பூமியாகிய பூலோகத்தைப் போன்றே மற்ற லோகங்களும் விரிந்துள்ளன.

பிரம்மலோகம், பிரஜாபதிலோகம், இந்திரலோகம், ஆதித்யலோகம், வருணலோகம், வாயுலோகம் மற்றும் அக்னிலோகம் ஆகிய ஏழு உயர்லோகங்கள் இருப்பதாக கௌஷிதகி உபநிடதம் கூறுகிறது.

MOST READ: முகத்துல பரு, மருனு எதுவும் வராம பளிச்சினு இருக்கணுமா? இந்த கத்திரிக்காய இப்படி தேய்ங்க...

லோகங்கள்

லோகங்கள்

சத்யலோகம், தபலோகம், மஹர்லோகம், ஜனலோகம், ஸ்வர்லோகம், புவர்லோகம், பூலோகம், அதலலோகம், விதலலோகம், சுதலலோகம், தலாதலலோகம், மகதலோகம், ரசாத்தலலோகம், பாதாளலோகம் உள்ளிட்ட அநேக லோகங்கள் உள்ளன.

பூலோகத்துடன் ஒப்பிட்டே மற்ற லோகங்கள் உயரே அல்லது கீழே இருப்பதாக கூறப்படுகிறது. உயரே இருக்கும் லோகங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை என்றும் கீழே இருக்கும் லோகங்கள் பாடுகள் நிறைந்தவை என்றும் இந்துகள் நம்புகின்றனர். இந்த ஆன்மீக ஆசீர்வாங்களும் பாடுகளும் சூட்சும சரீரத்தால் மட்டுமே அனுபவிக்கத்தக்கவை. சூட்சும சரீரம் தூய்மையாக இருந்தால் உயரே உள்ள லோகங்களுக்குச் செல்ல முடியும். இல்லையாயின் அவை கீழே உள்ள லோகங்களுக்கு பயணிக்கும். சூட்சும சரீரத்தின் தூய்மை சம்மந்தப்பட்டவரின் கர்மத்தை கொண்டே அளவிடப்படும்.

நிறைவேறாத ஆசைகளும் மறுபிறவியும்

நிறைவேறாத ஆசைகளும் மறுபிறவியும்

சிலரது மனதில் இருக்கும் ஆழ்ந்த ஆசைகள் நிறைவேறாமலே இவ்வுலக வாழ்வை நீத்திருப்பர். அப்போது மறுலோகத்திற்கு பயணப்படும் அவர்களது மனம் அல்லது சூட்சும சரீரம், நிறைவேறாத விருப்பத்தை நிறைவேற்றிப் பார்க்க வேண்டும் என்று வாஞ்சிக்கும். அந்த உறுதியான விருப்பம் அவர்களை மீண்டுமாக இந்த உலகத்திற்குக் கொண்டு வந்து மறுபிறவியாக அல்லது மறுபடியும் இந்த மண்ணில் பிறக்கும்படியாக செய்யும்.

உதாரணமாக உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு கடையில் உங்களுக்கு மிகவும் விருப்பமான உணவு கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த உணவு குறிப்பிட்ட அந்தக்கடையில் மட்டும்தான் கிடைக்கும். அதை சாப்பிட வேண்டுமென்ற விருப்பம் உங்களுக்குள் நெடுநாளாய் இருந்துகொண்டே உள்ளது. என்றாவது ஒருநாள் நீங்கள் வாகனத்தை எடுத்துச் சென்றாவது அதை வாங்கிகொண்டு வருவீர்கள் அல்லவா! அதுபோலவே, ஆன்மா, நிறைவேறாத ஆசையை நிறைவேற்றுவதற்காக இவ்வுலகில் மறுபிறவி எடுக்கிறது.

ஆன்மீக நோக்கில் முன்னேற வாய்ப்பு

ஆன்மீக நோக்கில் முன்னேற வாய்ப்பு

நாம் பல்வேறு பிறவிகள் வழியாக கடந்து செல்லும்போது, ஆன்மீக உலகில் முன்னேற முடியும். ஆன்மீக தேட்டம் உச்சத்தை அடையும்போது, நாம் எல்லா ஆசைகளையும் விருப்பங்களையும் கடந்து இறைவனை உணரும் கட்டம் வரும். இந்து தர்மம் கூறுகிறபடி, அப்போது ஆன்மா வேறு சரீரத்தில் கூட பிறப்பெடுக்கும். முக்தி அல்லது மோட்சத்தை அடையும்வரை ஆன்மா, மறுபிறவி எடுத்துக்கொண்டே இருக்கும். மிக மோசமான கர்மா வழியாக கடந்து செல்லவேண்டிய நிலை கூட ஆன்மாவுக்கு ஏற்படலாம். அது முடியும்போது, மீண்டும் மேல்நோக்கிய தன் ஆன்மீக பயணத்தை அது தொடரும்.

MOST READ: திருமால் ஒரே ஒரு பெண் அவதாரம் மட்டும் ஏன் எடுத்தார்? அந்த சுவாரஸ்ய கதை தெரிஞ்சிக்கணுமா?

பரிணாமமும் மறுபிறவியும்

பரிணாமமும் மறுபிறவியும்

மறுபிறவி கொள்கையின்படி, முக்தி அல்லது மோட்சகதி அடைந்த ஆன்மாக்கள் மறுபிறவி எடுக்காது. ஆகவே, பூலோகத்தில் மனுஷர்களின் எண்ணிக்கை குறையவேண்டுமே தவிர கூட கூடாது என்பது வாதமாகி உள்ளது. ஆனாலும், ஆன்மாக்கள் பரிணாமத்தின்படி மனுஷனாக மட்டுமல்லாது மற்ற உயிரினமாகவும் பிறக்கலாம். இந்த நோக்கில் பார்த்தால் மனுஷரின் எண்ணிக்கை அதிகரிக்க முடியும். மனுஷனுடைய ஆன்மா, ஏனைய உயிரினங்களின் ஆன்மா எதுவாக இருந்தாலும் அந்த ஆன்மாவுக்குள் தெய்வீக தன்மை உள்ளது. அப்படியில்லையென்றால் பரப்பொருளின் எங்கும் வியாபித்துள்ள தன்மைக்கு பொருளிருக்காது.

யோகக் கலையை தோற்றுவித்தவரான பதஞ்சலி சாதகமான சூழலில் பரிமாணத்திற்கு ஏற்ற சுற்றுப்புறம் அமையும்போது ஓர் உயிரினம் மற்றொன்றாக மாற்றம் பெறும் என கூறுகிறார். இது ஜத்யேந்தர பரிணாமம் என்று கூறப்படுகிறது. இப்படியாய் பரிணாம கொள்கையை மறுபிறவி கொள்கை ஆதரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reincarnation In Hindu Dharma

The concept of Sanatana Dharma and reincarnation might just have the same birth date. For those indulged in religion, reincarnation is a theological doctrine. It’s a fact for most of the Hindus. There are certain evidences that support the claims of reincarnation. But mostly, they can be categorized into two: i. jatismaras – the people who can remember their past, and ii. The testimonies in different scriptures and saints.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more