For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமான் எந்த கடவுளையும் வணங்காத போது விஷ்ணு மட்டும் ஏன் அனைத்து அவதாரத்திலும் சிவனை வழிபடுகிறார்

விஷ்ணு தனது அனைத்து அவதாரங்களிலும் சிவபெருமானை வழிபட்டார் என்று புராணங்களும், இதிகாசங்களும் கூறுகிறது.

|

இந்து மதத்தில் சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மூவரும் மும்மூர்த்திகளாக கருதப்படுகிறார்கள். மூவரும் தனக்கென ஒரு பணியை எடுத்துக்கொண்டு இந்த உலகத்தை பாதுகாத்தும், வழிநடத்தியும் செல்கிறார்கள்.

Reasons why Vishnu worship Lord Shiva

மும்மூர்த்திகளாக இருப்பினும் அவர்களில் சிவபெருமான் எப்பொழுதும் தனித்துவத்துடன் விளங்குகிறார். இவர் எந்த கடவுளையும் வழிபடமாட்டார் ஆனால் மற்ற கடவுள்கள் அனைவரும் இவரை வழிபடுவார்கள். குறிப்பாக விஷ்ணு தனது அனைத்து அவதாரங்களிலும் சிவபெருமானை வழிபட்டார் என்று புராணங்களும், இதிகாசங்களும் கூறுகிறது. சிவபெருமானை ஏன் விஷ்ணு வழிபடுகிறார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புராணங்கள்

புராணங்கள்

பகவத புராணத்தின் படி விஷ்ணுவே சிவனை விட வலிமை வாய்ந்த கடவுளாக இருக்கிறார். சிவபுராணத்தின் படி பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் ஆதி அனந்த் ஜோதிர் ஸ்தம்பாவிலிருந்து உருவானதாக கூறப்படுகிறது. இதன்படி சிவன்தான் அவர்களை விட சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால்தான் சிவன் யாரையும் வழிபடுவதில்லை என்று கூறப்படுகிறது.

பிற காரணம்

பிற காரணம்

கடவுள் அஜான்மா, அகார்த்தா மற்றும் அபோக்தா என்று கீதையில் கூறியது போல் அவர் பிறப்பற்றவர். பிறப்பே இல்லாததால் அவர் உச்ச பரமாத்மா ஆவார். இதனால்தான் அவர் யாரையும் வழிபடுவதில்லை. கடவுள் உருவமும், அமைப்பும் அற்றவர், சிவபெருமானின் சிவலிங்கம் இதன் பிரதிபலிப்புதான்.

விஷ்ணுவின் அறிவுரை

விஷ்ணுவின் அறிவுரை

விஷ்ணு தான் மட்டும் சிவனை வழிபடாமல் மற்ற கடவுள்களையும் சிவபெருமானை வழிபடும்படி அறிவுறுத்துகிறார். கடவுள்களே எந்த தவறு செய்தாலும் சிவபெருமானை வழிபடும்படி விஷ்ணு கூறுகிறார்.

MOST READ: கர்ப்பகாலத்தில் பெண்கள் பாகற்காய் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

இராமர்

இராமர்

இராமர் விஷ்ணுவின் அவதாரம் என நாம் அறிவோம். இராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன் சிவலிங்கத்தை எழுப்பி அதனை வழிபட்டார், இது இராமேஸ்வர மகாதேவா என்று அழைக்கப்படுகிறது. இராமாயணத்தில் பிராமணரின் மகனான இராவணனை கொல்வது பாவமென அறிந்த இராமர் அவனை கொல்வதற்கு முன் அனுமனிடம் பிரதிஷ்டை சிவலிங்கத்தை எழுப்பும்படி கூறினார். இது அந்த பாவத்தில் இருந்து தன்னை பாதுகாக்கும் என்றும் கூறினார்.

கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரத்தில் கிருஷ்ணர் இந்திரனிடம் இருந்து ஒரு கல்ப விருக்ஷத்தை பெறுவதற்கு முன் சிவபெருமானை வணங்கினார். இது கோபேஸ்வர மகாதேவா என்று அழைக்கப்படுகிறது. இதில் கோபால் என்பது கிருஷ்ணரையும், ஈஸ்வரா என்பது சிவனையும் குறிக்கிறது. மேலும் மகன் பெற்றுக்கொள்ள நினைக்கும்போது முனிவர்களின் அறிவுரைப்படி சிவபெருமானை தனது மகனாக பெற விரும்பினார். கிருஷ்ணர் " சிவ சர்வதி சாதிகே " என்று கூறினார். இதற்கு அர்த்தம் சிவனின் துணையின்றி எந்த செயலும் நடக்காது என்பதாகும். மகாபாரத போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை சிவபெருமானை வணங்கிவிட்டு போரை தொடங்கும்படி உத்தரவிட்டார்.

பகவத புராணம்

பகவத புராணம்

பகவத புராணத்தில் லக்ஷ்மி தேவி விஷ்ணுவின் மீது கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் விஷ்ணு தனது உள்ளத்தில் சரிபாதி சிவபெருமானுக்குத்தான் உரியது என்றும், மீதி சரிபாதியில் உலகத்தில் இருக்கும் அனைத்து உயிர்களும் இருப்பதாகவும் அதில்தான் லக்ஷ்மி தேவியும் இருப்பதாகவும் விஷ்ணு கூறியதாக கூறப்படுகிறது.

MOST READ: இந்தியர்கள் பசுமாட்டை கடவுளாக வழிபடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

அவதாரங்கள்

அவதாரங்கள்

பெரும்பாலான அவதாரங்களில் விஷ்ணு ராஜாவாகவும், சிவபெருமான் சாதுவாகவும் பிறந்திருப்பார். ராஜா எப்பொழுதும் ஆசைகள் நிறைந்தவராக இருப்பார்கள், சிவபெருமான் ஆசைகளை நிறைவேற்றுபவராக இருப்பார்கள். சிவபெருமான் தன்னிறைவு பெற்றவர் அதனால் அவர் மற்றவர்கள் வழிபடுபவராக இருப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons why Vishnu worship Lord Shiva in his all incarnations

Reasons why Shiva doesn't worship anybody whereas Vishnu worship Lord Shiva in his all incarnations.
Story first published: Tuesday, July 2, 2019, 14:50 [IST]
Desktop Bottom Promotion