இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் பொறாமையால் தங்கள் அழிவை தாங்களே தேடிக்கொள்வார்களாம் தெரியுமா?

பொறாமை குணம் அனைவருக்கும் பொதுவான குணமாக இருந்தாலும் ஒவ்வொருவரின் பிறந்த ராசிப்படி அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

பொறாமை குணம் என்பது பெண்களுக்கு கூடவே பிறந்தது. பெண்களிடம் ஆயிரம் நல்ல குணங்கள் இருந்தாலும் அவர்களின் சில தீயகுணங்கள்தான் அவர்க்ளின் அழிவிற்கு காரணமாக அமைகிறது. அதில் முக்கியமான ஒரு தீயகுணம்தான் பொறாமை ஆகும்.

most jealous female in the zodiac signs

பொறாமை குணம் அனைவருக்கும் பொதுவான குணமாக இருந்தாலும் ஒவ்வொருவரின் பிறந்த ராசிப்படி அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் தனக்குள்ளே பொறாமை பட்டுக்கொள்வார்கள், சிலரோ பொறாமையால் மற்றவர்களின் நிம்மதியையும் கெடுக்க நினைப்பார்கள். இந்த பதிவில் அதிக பொறாமை குணம் கொண்ட பெண்களின் ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விருச்சிகம்

விருச்சிகம்

இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் உணர்ச்சிகளுக்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் போராடுவார்கள். இவர்களின் சுயநலமும், தற்பெருமையும் மற்றவர்களின் வெற்றியை சகித்து கொள்ள அனுமதிக்காது. குறிப்பாக மற்றவர்களின் அழகு மீது இவர்களுக்கு எப்போதும் பொறாமை இருக்கும். அதிக கோபப்படும் இவர்கள் மற்றவர்களின் பொறுமையை அதிகம் சோதித்து அதனை இழக்க வைப்பார்கள். இதற்குத்தான் பொறாமைப்பட வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் இவர்களுக்கு இல்லை. எப்போதும் அதற்கு ஒரு காரணத்தையும் தயாராக வைத்திருப்பார்கள்.

சிம்மம்

சிம்மம்

ஆண்களின் மனதை ஆளத்தெரிந்தவர்கள் சிம்ம ராசி பெண்கள். அழகு மட்டுமல்ல இவர்களின் திறமை, ஆற்றல், புத்திசாலித்தனம் என அனைத்துமே மற்றவர்களை கவர்வதாக இருக்கும். ஆடம்பரமான பரிசுகளை இவர்கள் அதிகம் விரும்புவார்கள் ஆனால் அதற்கு பதிலாக இவர்கள் தருவது இவர்களின் இருப்பை மட்டுமே. இவர்கள் மறைமுகமாக பொறாமை படமாட்டார்கள், நேரடியாகவே தங்கள் மனதில் இருப்பதை கூறிவிடுவார்கள். இவர்களின் பொறாமையை இவர்கள் வெளிப்படுத்தும் விதம் இவர்களின் கோபம் ஆகும். மற்றவர்களை விட இவர்களிடம் பழிவாங்கும் குணம் அதிகமாகவே இருக்கும்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசி பெண்கள் தங்கள் மனது என்ன சொல்கிறதோ அதனை பின்பற்றி நடப்பவர்கள். இவர்களை பொறுத்தவரை அன்பு அவசியமான ஒன்றாகும் ஆனால் பொறாமை குணம் இவர்களின் உணர்ச்சிகளை தடுக்கிறது. இவர்களின் நடத்தை ஒரு சர்வாதிகாரியை போல இருக்கும் உலகம் முழுவதும் தன் முன் மண்டியிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். அவர்கள் விரும்புபவர்களுக்கும் இதே நிலைதான். மற்றவர்களின் அழகு, குணம் என அனைத்தின் மீதும் இவர்களுக்கு பொறாமை இருக்கும். நிரூபிக்க முடியவில்லை என்றாலும் இவர்களுக்கு இவர்கள் செய்வது எப்பொழுதுமே சரிதான்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி பெண்களின் மனநிலை வானிலை போல மாறிக்கொண்டே இருக்கும். பல முகங்களுடன் வாழ்வது என்பது மிகவும் தனித்துவமான ஒரு குணமாகும், அது இவர்களுக்கு மிகவும் எளிதாகவே வரும். இவர்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஒரு உறவை இழக்கும் நிலை வரும்வரை அதன் முக்கியத்துவம் இவர்களுக்கு புரியாது. இவர்களின் பொறாமை எப்பொழுதும் மற்றவர்களை காயப்படுத்துவதாகவே இருக்கும். இவர்கள் என்ன செய்வார்கள் என்ற பயம் எப்பொழுதும் அனைவருக்கும் இருக்கும்.

கடகம்

கடகம்

முரண்பாடுகளின் மொத்த உருவம் கடக ராசி பெண்கள். இவர்களுக்குள் எப்பொழுதும் ஏகப்பட்ட ரகசியங்கள் நிறைந்திருக்கும். இவர்களுக்கு உறவுகள்தான் எல்லாமே, எனவே அவர்களின் கவனம் எப்பொழுதும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது குறையும்பட்சத்தில் இவர்களுக்குள் பொறாமை அதிகரிக்கும். துரோகத்தையும், ஏமாற்றத்தையும் இவர்களால் தாங்கிக்கொள்ள இயலாது. பொறாமையால் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசி பெண்கள் புரியாத புதிராவார்கள். இவர்களின் சிறப்பே இவர்களிடம் நிறைந்திருக்கும் தன்னம்பிக்கைதான். இவர்கள் எப்பொழுதும் அமைதியாகவும், மற்றவர்களிடம் பழகாதவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்குள் பொறாமை தீ எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் அது அவர்களையே துன்புறுத்தும். இவர்களின் பொறாமையால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதை காட்டிலும் இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்களின் தன்னம்பிக்கை அதிகம் இருந்தாலும் இவர்களின் பொறாமை அதை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, May 8, 2019, 15:15 [IST]
Desktop Bottom Promotion