For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ராசிய சொல்லுங்க... நீங்க எந்த வழியில பணம் சேமிக்கலாம்னு தெரிஞ்சிக்கங்க...

|

பணத்தை சம்பாதிப்பதை விட அதை சேர்த்து வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் நமது அன்றாட தேவைக்கு பணம் மிகவும் முக்கியம். அதன் தேவை யாருக்கும் போதுமானதாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை வித்தியாசமான வழிகளில் செலவழிக்க முயலுகின்றனர்.

Money Saving

சிலர் ஆடம்பர செலவுகளையும், சிலர் குடும்பத்திற்காகவும், சிலர் சொத்துக்கள் வாங்கவும் பணத்தை பயன்படுத்துகின்றனர். நாம் சம்பாதிக்கும் பணத்திற்கும் செலவழிப்பதற்கும் ராசிக்குமே நிறைய தொடர்பு உள்ளது என்கிறார்கள் ஜோதிடர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் பணத்தை கையாளத் தெரியாதவர்கள். இவர்கள் மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவார்கள். புதிய ஆடை, புதிய கார் வாங்க வேண்டும் என்றால் போதும் பணத்தை தண்ணியாக செலவழிக்கக் கூடிய பேர்வழிகள். இருப்பினும் சொந்தமாக சம்பாதிக்கும் திறனைக் கொண்டு செயல்படுவார்கள். பணத்தை மிச்சப்படுத்த இலக்குகளை நிர்ணயித்து கொள்வார்கள். இலக்குகளை அடைந்து அதற்கான வெகுமதியையும் தட்டிச் செல்ல தவறமாட்டார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் எதிர்காலத்திற்கு இவர்களது மனக்கிளர்ச்சியை ஓரளவுக்கு கட்டுப்படுத்தினாலே போதும்.

MOST READ: இந்த பூ தெரியுமா? இத டீயில போட்டு குடிச்சா ஆஸ்துமா ஒரே வாரத்துல சரியாயிடும்...

 ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பிறக்கும் போதே பண மேலாளராக இருப்பார்கள். வாழ்க்கையின் மிகச் சிறந்த விஷயங்களையும் அனுபவிப்பதில் வல்லவர்கள். புதிய ஆடை, நகைகள் என்றால் போதும் இவர்களை கையில் பிடிக்க முடியாது. ஆனால் ரெம்ப பொறுப்பானவர்கள், நம்பிக்கையானவர்கள். எனவே எதிர்காலத்திற்கு பணத்தை சேமித்து வைப்பதில் வல்லவர்கள். இருப்பினும் பணத்தை ஆடம்பரத்திற்கு செலவிடுவதற்கு முன் இருமுறை யோசித்து செய்தால் நல்லது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் சிக்கலான மனப்பான்மை அவர்களை எளிதில் கணிக்க முடியாமல் செய்து விடும். இவர்களுக்கு பணத்தை நிர்வகிக்க தெரியாது. ஆனால் இவர்களுடைய பேச்சுத் திறன் ஒன்றே போதும் எளிதில் மக்களை கவர்ந்து பணம் சம்பாதித்து விடுவார்கள். இருப்பினும் சேமிப்பு, தங்களுடைய ஓய்வூதியம் போன்றவற்றை தாராளமாக செலவழிக்காமல் சேமிப்பது நல்லது.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு பணத்தை சேமிக்க யாரும் தேவையில்லை. இவர்கள் ஒரு கடின உழைப்பாளிகள். பணத்தை எதிர்காலத்தில் சேமிப்பது, முதலீடு செய்து தொழிலை வளர்ப்பது போன்றவற்றில் ஆர்வம் உடையவர்கள். அதே நேரத்தில் வீடு, குடும்பத்திற்கான செலவுகளையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். கடன்களை அடைக்க அதற்கென்று தனி நிதி ஒதுக்கி விடுவார்கள். இவர்கள் பணத்தை வளர்ப்பதற்காக சதா கவலைப்படுவதை நிறுத்தி விட்டு தொழிலில் முன்னேற்றம் காண ஈடுபடலாம்.

MOST READ: இந்தமாதிரி இருந்தா சும்மா விட்றாதீங்க... இது அந்த நோயா கூட இருக்கலாம்...

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் பணத்தை தேடி கண்டுபிடிப்பவர்கள். அவர்கள் பணம் சம்பாதிப்பதில் லட்சியவாதிகள் மட்டுமல்ல ஆக்கப்பூர்வமானவர்களும் கூட. அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களையும் அனுபவிக்க கூடியவர்கள். அவர்களின் டேஸ்ட் எப்பயும் விலையுயர்ந்ததாகவே இருக்கும். லேட்டஸ்ட் டிரெண்ட் மற்றும் ஸ்டைல் என்றால் போதும். இவர்கள் மலிவான பொருட்களை வாங்குவதை விட விலையுயர்ந்த பொருட்களையே விரும்புவார்கள். இருப்பினும் சந்தோஷமான வாழ்க்கைக்கு முதலீடு செய்வதற்கும் சேமிப்பிற்கும் இடையே இவர்கள் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இயற்கையாகவே கடின உழைப்பாளிகள். எனவே இவர்களுக்கு நிதி நிலைமை சமாளிப்பது எளிதான ஒன்று. பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்று இவர்களுக்கு யாரும் சொல்லத் தேவையில்லை. இவர்களின் உந்து சக்தியே போதும் பணத்தை சிக்கனமாக செலவழிப்பார்கள். இருப்பினும், தங்கள் வாழ்க்கையை வசதியாகவும் எளிதாகவும் செய்ய சில நேரங்களில் செலவிடுவது நல்லது என்றும் நினைப்பவர்கள் இவர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் செலவழிப்பு சேமிப்பு என்ற இரண்டிலும் கெட்டிக்காரர்கள். இரண்டையும் சமமாக வைத்து செயல்படுபவர்கள். சமூகத்தில் உள்ள தங்களது ஸ்டேட்டஸ்யை காப்பாற்ற மட்டுமே இவர்கள் செலவிடுவார்கள். ஆனால் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை செலவழிக்க நிறையவே யோசிப்பார்கள். நீங்கள் பட்ஜெட் போட்டு செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம்

பணப்பராமரிப்பு என்று வந்தாலே விருச்சிக ராசிக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். கொள்முதல் செய்வதற்கு அல்லது முதலீட்டிற்குச் செல்வதற்கு முன்பு அவர்கள் நிறைய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள். . அது அவர்களுக்கு சரி என்று பட்டால் மட்டுமே வாங்குவார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்களின் உள்ளுணர்வும் சரியாகத்தான் இருக்கும். இதுவே அவர்கள் சரியான முதலீட்டை நோக்கிச் செல்ல காரணமாக அமைகிறது. இருப்பினும் பணத்தை சேமிப்பது இவர்களுக்கு சவாலான விஷயம் தான்.

MOST READ: வெறும் பொம்மைகள் மட்டும் வாழும் அமானுஷ்ய கிராமத்தை பாருங்க... பார்க்கவே பீதியா இருக்கு...

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வியாழன் கோளால் ஆளப்படுவதால் இவர்களுக்கு பணம் வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும் இவர்களின் பொறுமையற்ற குணம் செலவுகளுக்கு வழிவகுக்கும். சிறந்த முடிவுகளையும் எடுக்க தெரியாது. எனவே இவர்கள் எதையும் செய்வதற்கு முன் ஆராய்ந்து கொள்வது நல்லது.

மகரம்

மகரம்

இவர்கள் பிறக்கும் போதே பணத்தை கையாளத் தெரிந்தவர்கள். இதற்கு காரணம் இவர்களின் ஒழுக்கமும், ஒழுங்கான நடவடிக்கையுமே ஆகும். ஆனால் இவர்களின் எண்ணமே எல்லாத்தையும் கெடுத்து விடும். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும் என்ற எண்ணமே இவர்களை சிரமத்தில் ஆழ்த்தி விடும்.

கும்பம்

கும்பம்

இருக்கின்ற ராசிகளிலே இவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள். பணம் செலவழிப்பதில் இவர்கள் தாராள வள்ளர்கள். இதுவே இவர்களை சிக்கலில் ஆழ்த்தி விடுகிறது. தொண்டு மற்றும் நன்கொடை என வருவதற்குள் தங்களுடைய நிதிநிலையை சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

MOST READ: கிரகணம் முடியும் நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

மீனம்

மீனம்

இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை சேமிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். இவர்கள் கனிவானவர்கள், பணத்தை விட வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பவர்கள். எனவே நிதிநிலையை பள்ளி புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.

உங்கள் ராசிப்படி கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்திருப்பது எதிர்காலத்திற்கு எப்பயும். நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Money Saving Advice Based On Zodiac Sign

Have you got to a point where you do not have to talk about money? Have you earned it just enough? Well, the fact is that we can never stop talking about money because it never feels like enough. We spend our entire life earning money, spending it, find avenues to increase it and in some cases dream for it.
Story first published: Wednesday, July 3, 2019, 15:25 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more