For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கப்பீஸ் செம லக்கி தான்... 'தளபதி 63' ல விஜய் கூடவே நடிக்கவும் பாடவும் போறாராம்

By Mahibala
|

விஜய் டீவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கென்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. அதில் பாடும் போட்டியாளர்கள் உடனே பேமஸாகிவிடுவார்கள்.

எல்லோருக்கும் அவர்களை நன்கு தெரிந்திருக்கும். அதில் சிலர் மட்டும் தான் மக்களுடைய பேராதரவையும் அன்பையும் பெற்று அவர்களுடைய மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள்.

intresting facts about gaana star kappis poovaiyar

அப்படி மக்களுடைய மனதில் இடம் பிடிக்கிறவர்கள் டேன்ஞர் ஜோனுக்குப் போகும் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து மீண்டும் அவர்களை நிகழ்ச்சிக்குள் கொண்டு வந்து பாட வைப்பார்கள். அந்தவகையில் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நம்முடைய கப்பீஸ் பூவையார் பற்றிய உங்களுக்குத் தெரியாத அவருடைய வாழ்க்கைப் பயணங்கள், ரகசியங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சூப்பர்சிங்கர் ஜூனியர் 6

சூப்பர்சிங்கர் ஜூனியர் 6

Image Courtesy

சீனியர் சீசன், ஜூனியர் சீசன் என்று மாறிமாறி போட்டிகள் நடத்துவார்கள். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பிரம்மாண்டமான வீடு ஒன்றையும் டைட்டில் வின்னர் பட்டமும் கிடைக்கும். இந்த பட்டங்கள் எல்லாம்தாண்டி ஒரு சிலர் மட்டும் தான் மக்களுடைய மத்தியில் பேராதரவைப் பெற்றிருப்பார்கள். அந்த வகையில் இந்த ஜூனியர் சீசன் 6 இல் மக்களின் விருப்பத்துக்குரிய போட்டியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனாலும் எந்தவித முறையான சங்கீதமும் கற்றுக் கொள்ளாமல், போட்டிக்குள் தன்னுடைய கானா பாடும் திறமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன் தான் நம்முடைய கானா ஸ்டார் கப்பீஸ்.

MOST READ: மாங்கொட்டையும் திராட்சையும் இப்படி செஞ்சு சாப்பிட்டிங்னா வலிப்பு நோய் உடனே சரியாகிடுமாம்...

கப்பீஸ் பூவையார்

கப்பீஸ் பூவையார்

Image Courtesy

கப்பீஸ் முறையான கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்ட பையன் இல்லையென்றாலும் கூட அவனுடைய வறுமையிலும் கானா என்னும் கலையால் தன்னுடைய வசீகரக் குரலால் மக்களைக் கட்டிப் போடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். அவன் என்ன செய்தாலும் ரசிக்கக்கூடிய மக்கள், அவனுடைய துறுதுறு துடுக்குத்தனம், ஆங்கர் பிரியங்காவை கலாய்ப்பது என அவனுடைய எல்லா செயல்களுமே மக்கள் ரசிக்கும்படியாக இருக்கிறது. அவரைப் பற்றித் தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

பிறப்பும் ஊரும்

பிறப்பும் ஊரும்

Image Courtesy

சென்னை தான் பூவையாரின் பூர்வீகம். இவன் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தூடுவாடி என்னும் பகுதியைச் சேர்ந்த சிறுவன். அவருடைய வயது 13. இவர் தன்னுடைய 8 வயதிலிருந்தே கானா பாடல்கள் பாடி வருகிறார். இவருடைய இயற்பெயர் பூவையார். ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

பெற்றோர்

பெற்றோர்

Image Courtesy

கப்பீஸ் என்கிற பூவையார் பிறந்து சிறிது காலத்திலேயே அவருடைய தந்தை இறந்து விட்டார். அன்று முதல் அவருடைய தாயார் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக வேலை செய்து தான் கப்பீஸின் அக்காவையும் கப்பீஸையும் காப்பாற்றி வந்தார்.

குடும்ப உறுப்பினர்கள்

குடும்ப உறுப்பினர்கள்

Image Courtesy

கப்பீஸின் வீட்டில் கப்பீஸின் அம்மா, அக்கா, பாட்டி மற்றும் கப்பீஸ் ஆகிய நாலு பேர் தான் வசித்து வருகிறார்கள்.

MOST READ: பென்சிலின் ஊசி உங்களுக்கு ஒத்துக்காதா? அப்போ நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

குடும்ப பாரம்

குடும்ப பாரம்

Image Courtesy

தன் அம்மா கஷ்டப்படுவதைப் பார்த்த கப்பீஸின் அக்கா படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் நீ படிப்பை நிறுத்த வேண்டும். தந்தையின் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் நீ படி என்று சொல்லி, இரவு பகலாக கச்சேரிகளுக்குச் சென்று கானா பாடல்கள் பாடி, அதிலிருந்து வரும் பணத்தின் தன் அக்காவை டீச்சர் டிரெயினிங் படிக்க வைத்து, தானும் படிக்கிறார் கப்பீஸ். இந்த சின்ன வயதில் கப்பீஸின் பெருந்தன்மையும் பொறுப்பும் யாருக்கு வரும்.

கானா ஸ்டார்

கானா ஸ்டார்

Image Courtesy

தன்னுடைய முதல் நாள் நிகழ்ச்சியிலேயே அம்மாவைப் பற்றிய பாடல் ஒன்றைப் பாடி அனைவரையும் எழுந்து நின்று ஆரவாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். இவர் சென்னையின் பிரபல கானா பிரபலங்களான கானா சுதாகர், கனா மணி, கானா யோகேஷ் ஆகியோருடைய உதவியால் தன்னுடைய ஆறு வயதில் இருந்தே மேடை நிகழ்ச்சிகளில் பல்வேறு ஊர்களுக்கும் சென்று கானா பாடல் பாடி வருகிறார்.

MOST READ: வலிப்பு நோய் இருக்கிறவங்க கட்டாயமா தெரிஞ்சிக்க வேண்ய விஷயங்கள் என்ன? கட்டாயம் படிங்க...

பாடலாசிரியர்

பாடலாசிரியர்

Image Courtesy

கப்பீஸ் இவ்வளவு குறைந்த நாளிலேயே மிக வேகமாக பேமஸானதிற்குக் காரணம் இந்த சின்ன வயதிலேயே அவனுக்கு இருக்கும் படைப்பாற்றல் திறன் தான். தானே பாடல்கள் எழுதி பாடக்கூடிய திறமை கொண்டிருப்பவர். அதிலும் உடனுக்குடன் பாடல் எழுதுவார். சமயத்துக்கும் சூழலுக்கும் ஏற்றவாறு பாடல் வரிகளை மாற்றிப் போட்டு பாடுகிற ஆற்றல் கொண்டவர்.

கர்நாடக சங்கீதம்

கர்நாடக சங்கீதம்

Image Courtesy

கர்நாடக சங்கீதம் பற்றிய ஞானமெல்லாம் கிடையாது. அவர் முறையாக சங்கீதம் பயின்றவர் கிடையாது. சொல்லிக் கொடுத்தால் அதைக் கேட்டு பாடக்கூடிய அற்றல் கொண்டவர். அதனால் தான் அடிக்கடி ஸ்ருதி வர்ல ஸ்ருதி வர்ல என்று புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம்.

டேன்ஞர் ஜோன்

டேன்ஞர் ஜோன்

Image Courtesy

முறையான சங்கீத ஞானம் இல்லாததால் இதற்கு முன்பு வரை மூன்று முறை நடுவர்களிடம் குறைந்த மதிப்பெண் வாங்கி, டேன்ஞர் ஜோனுக்குத் தள்ளப்பட்டு, மூன்று முறையும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பல லட்சம் ஓட்டுகள் வாங்கி, மீண்டும் போட்டியில் கலந்து கொண்டார். தற்போது டாப் 8 இல் இருக்கும் இவர், ஃபைனல்ஸ் நெருங்கும் நிலையில், மீண்டும் நடுவர்களால் டேன்ஞர் ஜோனுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். மீண்டும் அதேபோல் பல லட்சம் ஓட்டுகள் வாங்கி. பைனலில் பாடுவார் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

பிடித்த நடிகர்

பிடித்த நடிகர்

நம்ம பூவையாருக்கும் தமிழில் பிடித்த நடிகர் யார் என்று தெரியுமா உங்களுக்கு? வேற யாரு. நம்ம கப்பீசுக்குப் பிடித்த நடிகர் நம்ம "தல" அஜித் தானாம். அஜித் படம்னா வெளித்தனமாக பார்ப்பாராம்.

MOST READ: அடிக்கடி மரத்துப்போகுதா? அப்போ இந்த 7 உணவையும் நீங்க தொடவே கூடாது... தொட்டா அவுட் தான்

பிடித்த நடிகை

பிடித்த நடிகை

பொதுவாக இன்றைய தலைமுறையினருக்கு பிடித்த நடிகை யார் என்று குட்டால் அவ்வப்போது பேமஸாக இருக்கும் யாராவது ஒரு நடிகையைச் சொல்வார்கள். ஆனால் நம்ம பூவையாருக்குப் பிடித்த நடிகைன்னா அது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகம் முழுக்க தன்னுடைய குணத்தால் மக்கள் மத்தியில் இடம் பிடித்த ஓவியாவை தான் பிடிக்குமாம். ஒருவேளை இவரும் ஓவியா ஆர்மியில உறுப்பினரா இருப்பாரோ?

Image Courtesy

தளபதி 63

தளபதி 63

தளபதி 63 படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல. பொதுவாக சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே இருக்கிறது. காரணம் அடுத்தடுத்த படங்களில் தனக்கான அரசியலை விஜய் நிதானமாகவும் தேவையான கோவத்தோடும் பேசுவது தான். அதிலும் குறிப்பாக, டைரக்டர் அட்லியுடன் இணைந்து தெறி, மெர்சல் படத்துக்கு அடுத்து மூன்றாவது படத்தில் விஜய் நடிக்கிறார். மெர்சல் தமிழ்நாட்டில் செய்த மெர்சல் தான் நமக்குத் தெரியுமே.

அப்படியொரு மாஸ் ஹீரோவான நம்ம தளபதி விஜய்யின் தளபதி 63 படத்தில் நடிப்பதற்காககத் தான் நம்ம கப்பீஸ் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். தளபதி கூட நடிக்க மட்டுமில்ல, இந்த படத்துல தன்னோட அதே கானா ஸ்டைலில் ஒரு பாடலையும் பாடுவதற்காக வாய்ப்பு தரப்பட்டிருக்கிறதாம். இனிமே என்ன கப்பீஸ் காட்டுல மழை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

intresting facts about gaana star kappis poovaiyar

Poovaiyar is one of the mass performers in Super Singer Junior Season 6 which is being aired on Star Vijay being He has started receiving a warm welcome from the audience right from the inauguration show
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more