Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரானு உங்கள் கையில இருக்கற போன வச்சே கண்டுபுடிச்சிரலாம் எப்படினு தெரியுமா?
நம் வாழ்வில் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமத்திருக்கும் இந்த போன் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதின் அடையாளமாகவும் இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது கர்ணனுக்கு இருந்த கவச குண்டலம் போல அனைவருக்கும் மாறிவிட்டது. அது இல்லாமல் யாரும், எங்கும் செல்வது இல்லை. குழந்தைகள் கூட செல்போனை கொடுத்தால்தான் சாப்பிடும் நிலைக்கு இந்த சமூகம் நம்மை தள்ளிவிட்டது. செல்போன் மட்டும் இருந்த வரை ஸ்மார்ட்டாக இருந்த நமது வாழ்க்கை இந்த ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு மிகவும் மோசமாக மாறியிருக்கும், ஆனால் இதில் துரதிர்ஷ்டமானது அதனை நாம் உணருவதே இல்லை என்பதுதான்.

ஸ்மார்ட் போன் வந்த பிறகு நாம் அன்றாட வாழ்வில் உபயோகித்த பல சாதனங்கள் நமக்கு தேவையில்லாமல் போய்விட்டது, நாம் எப்போது தூங்க வேண்டும் என்பதை கூட போனின் சார்ஜே முடிவு செய்கிறது. நம் வாழ்வில் பெரும்பாலான நேரத்தை ஆக்கிரமத்திருக்கும் இந்த போன் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதின் அடையாளமாகவும் இருக்கிறது. உளவியல்ரீதியாக நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் உபயோகிக்கும் போனை வைத்தே கண்டறிந்து விடலாம்.

ஸ்மார்ட் போன்
ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் எப்பொழுதும் தங்கள் விருப்பங்களை மற்றவர்களுக்கு தெரியும்படியே வைத்திருப்பார்கள் மற்றும் அதிக வேடிக்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த அனைத்திலும் அதிக சாய்ஸ்களை எதிர்பார்ப்பார்கள். அதேசமயம் தங்களின் வித்தியாசமான எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும் இவர்கள் தயங்க மாட்டார்கள்.

பல வேலைகளை செய்பவர்கள்
இவர்கள் நேரத்தை போனிலேயே கழித்தாலும் அதனால் தங்கள் வேலை பாதிக்கக்கூடாது என்று விரும்புவார்கள். எனவே ஒற்றே நேரத்தில் பல வேலைகளை செய்ய முயலுவார்கள். இதனால் சிலசமயம் அவர்கள் பிரச்சினைகளில் சிக்கி கொள்ளக்கூடும்.

பேசிக் போன்
இந்த காலகட்டத்தில் இந்த போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கைக்கு மிகவும் குறைவாகும். சிலர் வேறு வாய்ப்புகள் இன்றி இதனை உபயோகிப்பார்கள். சிலர் இந்த போனே போதும் என்ற உணர்வுடன் இதனை பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் எளிமையாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். மேலும் அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறும் நடந்து கொள்வார்கள்.

வேலையில் கவனம் செலுத்துவார்கள்
இந்த போன் உபயோகிப்பவர்கள் எப்பொழுதும் வேலையிலேயே கவனம் செலுத்துபவராக இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் பாதுகாப்பு உணர்வை உறுதி செய்து கொள்வதில் எச்சரிக்கையாக இருப்பார்கள், மேலும் அனைத்து பொருட்களுக்கும் அதற்கான இடம் உள்ளது என்று நினைப்பார்கள். அனைத்து பொருட்களும் அதற்குண்டான இடத்தில் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். மாற்றங்களை அவ்வளவாக விரும்பமாட்டார்கள்.

வேடிக்கை
இவர்களும் மற்றவர்களை போலவே வேடிக்கையாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே வேடிக்கையை அனுபவிக்க எண்ணுவார்கள். எப்பொழுதும் தங்கள் தனிப்பட்டவாழ்க்கையையும், பணி சார்ந்த வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்திருப்பதில் இவர்கள் கவனமாக இருப்பார்கள்.

ஐபோன்
ஆடம்பர பொருட்களில் ஒன்றாக மாறிவிட்ட ஐபோன் மற்ற பொங்கலை விட அதிகளவு பயன்பாடுகளை கொண்ட ஒரு நேர்த்தியான சாதனமாகும். இந்த போனை உபயோகிப்பவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், பணிசார் வாழ்க்கையையும் வெளிப்படுத்தி கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.

ஸ்டேட்டஸ் சார்ந்தவர்கள்
இவர்கள் எப்பொழுதும் ஸ்டேட்டஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்கள் வேலை எளிதில் முடிய வேண்டும் என்றும் தன் மீது மற்றவர்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் விரும்புவார்கள். இவர்கள் விளையாட்டை அதிகம் விரும்புவார்கள் ஆனால் தன்னை பெருமையாக காட்டிக்கொள்வதிலேயே இவர்கள் எப்பொழுதும் ஆர்வம் செலுத்துவார்கள்.

விண்டோஸ் போன்
விண்டோஸ் போன்கள் வேகத்திற்கும், சிறப்பான மற்றும் எளிமையான பயன்பாட்டிற்கும் புகழ்பெற்றவையாகும். அதேபோல இவர்களும் வேகமாகவும், சிறப்பாகவும் செயல்பட கூடியவர்கள். அவர்கள் தேவையில்லாத செயல்களை கற்றுக்கொள்வதில் நேரம் செலவழிக்க விரும்பமாட்டார்கள். அதேபோல மற்றவர்கள் போல இருப்பதில் கவலைப்படவும் மாட்டார்கள்.

வித்தியாசமானவர்கள்
இவர்கள் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று விரும்பமாட்டார்கள், ஆனால் இவர்கள் அணியும் உடைகள், செய்யும் சின்ன சின்ன செயல்கள் இவர்களை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, வேலையிலும் சரி இவர்கள் எப்பொழுதும் சமநிலையுடன் இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications