Latest Updates
-
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
இந்த ஊர்ல கல்யாணத்துக்கு முன்னாடி கட்டாயம் எச்ஐவி டெஸ்ட் பண்ணணுமாம்... எங்கனு தெரியுமா?
திருமணத்துக்கு முன்பு கட்டாயமாக எச்ஐவி சோதனை நிகழ்த்தப்பட வேண்டும் என்று கோவா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது பற்றிய தொகுப்பு தான் இது.
எச்ஐவி பரிசோதனை என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பது நம் எல்லோருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். அதிலும் பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாக பரவுகிறது.

அதேபோல் ரத்தம் மாற்றப்படும்போது ஊசியின் மூலம் என பல காரணங்கள் இருந்தாலும் ஒருமுறை பரவிவிட்டால் தடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் கோவா அரசு இனி திருமணத்துக்கு முன்பாக எல்லோரும் கட்டாயம் எச்ஐவி பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆணை ஒன்றையும் பிறப்பித்திருக்கிறது.

எங்கு இப்படி?
கோவாவின் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கிற விஸ்வஜித் ரானே திருமணத்துக்கு முன்பாக எச்ஐவி பரிசோதனை செய்து கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என்னும் பரிந்துரையை கோவா நீதித்துறைக்கு அனுப்பி இருக்கிறார். அது மிகப்பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் அதே அளவுக்கு ஆதரவையும் பெற்றிருக்கிறது.

திருமணப்பதிவு
தங்களுடைய திருமணத்தை தம்பதியினர் பதிவு செய்கின்ற பொழுது கட்டாயம் எச்ஐவி சோதனை ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு
மாநில சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடர் வருகின்ற போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. வருகிற 15 ஆம் தேதியிலிருநு்து தான் இந்த கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது.

கிடப்பில் போடப்பட்டது
இதற்கு முன்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு அதே கோவாவில் சுகாரத்துறை அமைச்சராக இருந்த தயானந்த நர்வேக்கர் இதே பரிந்துரையை அப்போதே முன் வைத்திருந்தார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. அதனால் இந்த முறையாவது நிறைவேற்றப்படுமா, சட்ட வரைவு கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு கோவா மக்களிடம் அதிகமாகி இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.



Click it and Unblock the Notifications
