For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எல்லா மாநிலத்தலயும் அறுவடை திருநாள் இருக்கு... ஏன் நம்ம மட்டும் அத பொங்கல்னு சொல்றோம் தெரியுமா?

|

பொங்கல் என்று சொன்னேலே நமக்கு என்ன நியாபகம் வரும். சர்க்கரை பொங்கல் கரும்பும் கொத்து கொத்தாக மஞ்சளும் மாட்டுவண்டியும் கொம்பு சீவி கலர் பூசப்பட்ட மாடுகளும் தானே. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

pongal

நம்ம தமிழ்நாட்டுல மட்டும்தான் விவசாயம் நடக்குதா? இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்னு சொல்றோமே அது வெறும் தமிழ்நாடு மட்டும்தானா? அப்பறம் ஏன் அங்கெல்லாம் பொங்கல் கொண்டாடல என்று நீங்கள் கேட்கலாம். அதுபற்றி தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறுவடை நாள்

அறுவடை நாள்

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் விவசாயம் என்பது பிரதான தொழிலாக இருக்கிறது. தென்னிந்தியப் பகுதிகளில் அரிசியையும் சிறு தானியங்களையும் வட மாநிலங்களில் கோதுமையும் பிரதான உணவுப் பொருளாக விளைவிக்கப்படுகிறது. அதனால் பயிர்களுக்கு ஏற்றபடி அறுவடைக்கு உரிய மாதங்களும் மாறுபடும். அதனால்தான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பெரும்பான்மையாக அறுவடைத் திருநாள் என்று ஒரு நாள் கொண்டாடப்படுகிறது.

MOST READ: கோதுமையைவிட அரிசிதான் ஆரோக்கியமானது... சொன்னா நம்பமாட்டீங்க... நீங்களே பாருங்க

மதம் கடந்த திருநாள்

மதம் கடந்த திருநாள்

இந்தியாவில் ஏன், உலக அளவில் நாம் கொண்டாடுகின்ற தீபாவளி உட்பட எல்லா பண்டிகைக்குப் பின்னால் ஏதேனும் ஒருவித மத அடையாளம் உண்டு. ஆனால் இந்தியா முழுவதும் எந்தவித மத அடையாளமும் இல்லாத பண்டிகை என்றால் அது இந்த உழவர் திருநாள் தான். இதற்க சாதி, மத பேதங்கள் அல்லை என்பதை உணர்து்துவதற்கான சமீப காலங்களில் சமத்துவப் பொங்கல் என்ற பெயரில் சில கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

உழவர்களுக்கு மரியாதை

உழவர்களுக்கு மரியாதை

உணவை உற்பத்தி செய்கின்ற அறுவடைத் தொழிலில் இருக்கின்ற உழைப்பாளிகளுக்கு மனதார நன்றி செலுத்தும் வகையில் நாம் இந்த நாட்களை அறுவடைத் திருநாள் என்ற பெயரிலும் உழவர் திருநாள் என்ற பெயரிலும் கொண்டாடுகிறோம்.

எத்தனை நாள்

எத்தனை நாள்

பொதுவாக உழவர் திருநாளாகிய அறுவடைத் திருநாள் என்றபது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு நாள் தான் கொண்டாடப்படுகிறது. சில மாநிலங்களில் இரண்டு நாட்களாக இருக்கின்றன. அதுதவிர தமிழ்நாட்டில் மட்டும் தான் நான்கு நாட்கள் பொங்கல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

MOST READ: இன்னைக்கு பெருமையும் புகழும் கிடைக்கப்போகிற 4 ராசிகள் இவைதான்... நிச்சயம் நடக்கும்...

என்னென்ன சிறப்பு

என்னென்ன சிறப்பு

பொங்கல் பண்டிகையின் தொடக்கமாக, வீட்டு பானை போன்ற புதிய பொருள்களை வாங்குவார்கள். அவற்றையெல்லாம் வைத்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து காப்பு கட்டி, பழைய உபயோகமில்லாத பொருள்களைத் தூக்கி தீயில் போட்டு கொளுத்துவது போகி.

இரண்டாம் நாள் நம்முடைய எல்லா செயலுக்கும் காரணமாக இருக்கிற சூரிய பகவானுக்கு அதிகாலையில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். அதாவது விவசாயத்துக்குத் துணைபுரிகின்ற ஆடு, மாடு, பசு போன்றவற்றுக்கு மரியாதை செலுத்தி வழிபடுவது.

நான்காம் நாள் காணும் பொங்கல். குடும்பத்தோடு உணவு தயாரித்துக் கொண்டு சென்று குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருப்பது. இந்த நாட்களில் சிலர் தங்களுடைய வீட்டில் இறந்து போன முன்னோர்களுக்குப் படையல் வைத்து நினைவுகூர்ந்து வழிபடுவார்கள்.

பொங்கல் என்ற பெயர் ஏன்

பொங்கல் என்ற பெயர் ஏன்

பொதுவாக எல்லா மாநிலங்களிலும் அறுவடைத் திருவிழா என்பது உண்டு. ஆனால் அங்கே புதிதாக அறுவடைத் தொடங்கும். அந்த தானியங்களை வைத்து வழிபடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், புதிதாக அறுவடை செய்த புத்தரிசியை தங்களுடைய கைகளால் இடித்து, அதை பொங்கலாக பொங்கி, புது அரிசி பொங்கும் நீரை அப்படியே மண்ணில் பொங்கவிட்டு, அதுவும் சூரியன் தான் எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதால் உதிக்கும் நேரத்தில் பொங்கல் வைக்கப்பட்டு, அதை சூரியனான இயற்கைக் கடவுளுக்கும் தங்களுடைய உழவுக்கு ஆதாரமாக இருக்கிற கால்நடைகளுக்கு அவைகளின் மூலமாக விளைவிக்கப்பட்ட பயிர் கொண்டு வைக்கப்பட்ட பொங்கலை முதலில் அந்த கால்நடைகளுக்கு ஊட்டிவிட்டு ரசிப்பார்கள். இதுபோன்ற ஒரு கொண்டாட்டம் வேறு எந்த மாநிலத்திலும் நிகழ்வதில்லை. அதனால் தான் நாம் பொங்கல் என்ற பெயரில் அழைக்கிறோம்.

கால்நடை வழிபாடு

கால்நடை வழிபாடு

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். அதாவது விவசாயத்துக்குத் துணைபுரிகின்ற ஆடு, மாடு, பசு போன்றவற்றுக்கு மரியாதை செலுத்தி வழிபடுவது. அன்றைக்கு மாடு, ஆடு ஆகியவற்றைக் குறிப்பாட்டி, கலர் பொடிகள் தூவி, கொம்புகள் சீவுப்பட்டு ஒரே கொண்டாட்டமாக அதோடு விளையாடுவார்கள்.

MOST READ: தினமும் காலையில 3 உலர்ந்த பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இந்த 7 வகை பிரச்சினையும் தீரும்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

மாடு, ஆடு ஆகியவற்றைக் குறிப்பாட்டி, கலர் பொடிகள் தூவி, கொம்புகள் சீவுப்பட்டு ஒரே கொண்டாட்டமாக அதோடு விளையாடுவார்கள். தன்னுடைய பெருமையை பறைசாற்றும் வகையில் தன்னுடைய மாட்டை ஊர் மந்தையில் விட்டு ஊர் மக்களுடன் சேர்ந்து விளையாடும் விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு.

இன்று மாடும் அந்த மாட்டை வளர்ப்பவரும் மாட்டைப் பிடிப்பவன் என எல்லோரும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணரும் நாளாக இருக்கும். இதற்கு மாடுபிடி, ஜல்லிக்கட்டு என்று பல பெயர்கள் இருந்தாலும் நம்முடைய பண்டைய காலத்தில் முன்னோர்கள் இந்த விளையாட்டை ஏறு தழுவுதல் என்று தான் குறிப்பிட்டார்கள். அது ஒரு ஆனந்தத்தின் வெளிப்பாடு.

முன்னோர் வழிபாடு

முன்னோர் வழிபாடு

பொங்கல் அன்று குறிப்பாக, காணும் பொங்கல் அன்று தங்களுடைய வீட்டில்இறந்தது போன முன்னோர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அவற்றைத் தங்களுடைய கைகளால் விரதமிருந்து உப்பின்றி சமைப்பார்கள். சமைத்து படையலிட்டு, அவர்களுக்குப் பிடித்த புத்தாடைகள் வாங்கி, இந்த ஆண்டு பொங்கல் நம் வீட்டில் பொங்கியது போல எல்லா வருடமும் செழிப்போடு வாழ உங்கள் வழியைப் பின்பற்றுகிறோம். நீங்கள் எங்களை வழிநடத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

MOST READ: இப்படி பிரபோஸ் பண்ணினா பெண்களால நோ சொல்லவே முடியாதாம்... ட்ரை பண்ணிபாருங்க..

வளமையின் குறியீடு

வளமையின் குறியீடு

பொங்கல் என்பது வளமைக்கான ஒரு குறியீடு. நல்ல விளைச்சல் என்பது ஊருக்கே உணவளிக்கும் விஷயம். அதேபோல் அறுவடை முடிந்து அடுத்த பயிர் வைக்கத் தொடங்குவதற்கான ஆதாரமும் கூட. ஒரு வருடம் பொங்கல் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது என்றால் அந்த வருடம் விளைச்சலும் விவசாயமும் அமோகமாக இருந்தது என்றும் மக்களுடைய பொருளாதாரம் முன்னேறியிருக்கிறது என்பதும் அதன் முக்கிய குறியீடுகளில் ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

facts about why we called the name of pongal

here we are duiscussing about the cultural festival of pongal, and that facts too,
Story first published: Friday, January 11, 2019, 16:05 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more