For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்துவின் படி சமையலறையில் இந்த திசையில் ப்ரிட்ஜை வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்...!

நமது முன்னோர்கள் இயற்றிய வாஸ்து சாஸ்திரம் ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவதுடன் எப்படி இருக்கக்கூடாது என்பதையும் கூறுகிறது.

|

வீடு என்றால் அதில் சமையலறை இருக்க வேண்டியது அவசியமாகும். சமையலறை என்பது உங்களின் உணவு தேவைக்கு மட்டுமின்றி உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை அழைத்து வரும் இடமாகவும் இருக்கிறது. எனவே அதனை சரியான முறையில் அமைத்து கொள்வதுதான் உங்களின் வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

easy Vastu Shastra tips for your kitchen

நமது முன்னோர்கள் இயற்றிய வாஸ்து சாஸ்திரம் ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுவதுடன் எப்படி இருக்கக்கூடாது என்பதையும் கூறுகிறது. ஒரு வீட்டின் சமையலறை எப்படி இருக்க வேண்டும், எந்த திசையில் இருக்க வேண்டும் என்பது பற்றிய அனைத்து குறிப்புகளும் வாஸ்து சாஸ்திரத்தில் உள்ளது. இந்த பதிவில் சமையலறை பற்றி வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடுப்பு வைக்க வேண்டிய திசை

அடுப்பு வைக்க வேண்டிய திசை

அடுப்பு எப்பொழுதும் சமையலறையின் தென்கிழக்கு திசையில்தான் வைக்கப்பட வேண்டும். நெருப்பை உற்பத்தி செய்யும் அடுப்பானது அக்னிபகவான் வாழும் தென்கிழக்கு திசையில்தான் வைக்கப்படவேண்டும். சமைக்கும் போது எப்பொழுதும் கிழக்கு திசை நோக்கி பார்க்க வேண்டும். ஏனெனில் தெற்கு திசை பார்த்து சமைக்கும் போது அது உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டங்களை உண்டாக்கும். அதேசமயம் அடுப்பிற்கு மேலே மூடிய எந்த அலமாரியும் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

தென்கிழக்கு மூலை

தென்கிழக்கு மூலை

வாஸ்து சாஸ்திரத்தின் படி அக்னி பகவான் ஒவ்வொரு வீட்டின் தென்கிழக்கு மூலையில்தான் வசிக்கிறார். எனவே அங்குதான் சமையலறை இருக்க வேண்டும். ஒருவேளை தென்கிழக்கு மூலையில் வைக்க இயலவில்லை என்றால் வடகிழக்கு திசையில் சமையலறையை வைக்கலாம்.

குளிர்சாதனப் பெட்டி

குளிர்சாதனப் பெட்டி

குளிர்சாதன பெட்டியை பொறுத்தவரை அதனை மொத்தம் நான்கு திசைகளில் வைக்கலாம். அது தென்கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகும். ஆனால் வடகிழக்கு திசையில் மட்டும் ஒருபோதும் வைக்கக்கூடாது. ஒருவேளை தென்மேற்கு திசையில் உங்களுக்கு இடம் கிடைத்தால் மூலையில் வைக்காமல் சிறிது தள்ளி வைக்கவும். இது உங்கள் இல்லத்திற்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

MOST READ:தூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா? உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை

ஜன்னல்கள்

ஜன்னல்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் சமையலறையில் ஒன்று அல்லது இரண்டு ஜன்னலாவது இருக்க வேண்டும். சிறிய ஜன்னலோ அல்லது பெரிய ஜன்னலோ ஆனால் அது கிழக்கு திசையை பார்த்து இருக்க வேண்டும். வாஸ்துவின் படி உங்கள் சமையலறையில் எவ்வளவு காற்றோட்டம் இருக்கிறதோ அவ்வளவு நல்லது.

 பாத்திரங்கள்

பாத்திரங்கள்

சமையலறையில் சேமிப்பு ஒரு முக்கிய பகுதியாகும், ஏனெனில் உணவு, தானியங்கள், பாத்திரங்கள் போன்றவற்றை எந்த குழப்பத்தையும் உருவாக்காமல் சேமிக்க வேண்டும். சேமிப்பு அலமாரிகள் சமையலறையின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்களில் இருப்பது நல்லது. வடக்கு மற்றும் கிழக்கு திசையில் இல்லாமல் இருப்பது சிறந்தது. சமையலறையை முடிந்தளவு ஒழுங்காகவும், சீராகவும் வைதித்திருக்க வேண்டியது அவசியமாகும்.

சமையலறையில் தண்ணீர்

சமையலறையில் தண்ணீர்

சமையலறையில் தண்ணீர் எவ்வளவு முக்கியமான பொருள் என்பது நாம் அறிந்ததுதான். தண்ணீர் சம்பந்தப்பட்ட எந்த பொருளாக இருந்தாலும் அது சமையலறையின் வடகிழக்கு திசையில் இருப்பதுதான் நல்லது.

MOST READ:லக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்

 சுவர்களின் வண்ணம்

சுவர்களின் வண்ணம்

சமையலறையின் சுவருக்கு வரும்போது துடிப்பான வண்ணங்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. பிங்க், மஞ்சள், பச்சை, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் சமையலறைக்கு அடிப்பது நல்லது. இது உங்கள் வீட்டிற்குள் எப்பொழுதும் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

easy Vastu Shastra tips for your kitchen

Here are some easy Vastu Shastra tips for your kitchen.
Story first published: Monday, July 15, 2019, 18:32 [IST]
Desktop Bottom Promotion