Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
இந்த ராசிக்காரருக்கு ஏன் தோல்வி மட்டுமே வருது தெரியுமா? தெரிஞ்சி நடந்துக்கங்க...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் சுமூகமான நிலை உண்டாகும். செய்கின்ற வேலையில் நிம்மதியான சூழல்கள் உருவாகும். குழந்தைகளால் மேன்மை உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட துறையில் அறிவு மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நற்பெயர்கள் உண்டாகும். நினைத்த காரியங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும். சக ஊழியர்களுடைய ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் அதிகம் ஈடுபடும். பணியில் புதுப்புது பணி வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கருநீல நிறமும் .இருக்கும்.

மிதுனம்
போட்டித் தேர்வுகளில் ஈடுபடுகிறவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எடுத்துச் செல்லுகின்ற உடைமைகளின் மீது கவனமாக இருங்கள். வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

கடகம்
சர்வதேச வாணிகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள் பெரும் லாபம் அடைவார்கள். பெரியவர்களுடைய ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. புதிய நட்பு வட்டாரங்கள் உருவாகும். உறவினர்களுடைய ஆதரவினால் உயர்வு உண்டாகும். வாகனப் பயணங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9ம் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
வேலையில் இதுவரை இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி, சுறுசுறுப்பு அதிகரிக்கும். தாய் பற்றிய கவலைகள் வந்து போகும். புதிய புதிய கண்டுபிடிப்புகளின் உதவியினால் தொழிலில் பல புதிய வாய்ப்புகள் தோன்றும். பணி சம்பந்தமான இட மாற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி
எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதில் சிறிது கால தாமதங்கள் உண்டாகும். சக ஊழியர்களுடைய வீண் விவாதங்களைத் தவிர்த்து அமைதி காப்பது நல்லது. அக்கம் பக்கத்தில் உள்ள சாதகமற்ற சூழல் உருவாகும். விளையாட்டு வீரர்களுக்கு உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் இருக்கும்.

துலாம்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சில மனக்கசப்புகள் உண்டாகும். புத்திரர்களுடைய செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பெரியோர்களிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் சிறிது கவனம் தேவை. பல தடைகளைக் கடந்து நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களில் உறவினர்களுடைய ஆதரவினால் அனுகூலங்கள் உண்டாகும். உயர் பதவியில இருப்பவர்களுடைய நட்புகள் அதிகரிக்கும். வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான பண உதவிகள் கைக்கு வந்து சேரும். மனைவியின் மூலம் அனுகூலமான நிலை ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய பெருந்தன்மையான செயல்பாடுகளால் அனைவராலும் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து உறவில் புதிய மேம்பாடுகள் உண்டாகும். திருமண வரன் தேடுகின்றவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் சார்நு்த பயணங்களின் மூலமாக அனுகூலங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 4 ஆகவும் அதிர்ஷ்ட திசை மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
குடும்பத்தில் உள்ள புதிய நபர்களின் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடைய விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகளைத் தீர்க்க முழு முயற்சி செய்வீர்கள். செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் ஏற்படும். நிர்வாக ஆற்றல் முழுமையாக வெளிப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்
கலைஞர்களுக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும். புதிய சூழலை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்நியர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பணியில் எதிர்பாராத தடைகள், தாமதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கல்வி அறிவினால், மேன்மையான சூழல்களும் மதிப்புகளும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மீனம்
அரசு சம்பந்தப்பட்ட செயல்களில் அனுகூலங்கள் ஏற்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்கின்ற செயல்களுக்காக உங்கள் மீது பிறருக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நண்பர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான நிலை உண்டாகும். கலகலப்பான சூழலால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெண்மை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
