Latest Updates
-
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
எந்தெந்த ராசிக்காரருக்கு யார் யார் கூட கசமுசா ஆகும்? யாருக்கு நட்பாகும்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உங்களுடைய உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களுடைய உதவியினால் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நீங்கள் எதிர்பாராத நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உங்களுக்குப் பிடித்த பொருள் ஏதாவது ஒன்றை வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். நீர்வழிப் பயணங்களால் பொருளாதார மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

ரிஷபம்
மனதுக்குள் திட்டமிட்ட காரியங்களைத் துணிவோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். உங்களுடைய வேலையில் உங்களுடைய உழைப்புக்கேற்றவாறு ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். நீங்கள் பணிபுரியும் இடத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உங்களுக்கு உள்ள பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானமாக இருங்கள். உங்களுடைய புதிய முயற்சிகள் யாவும் உங்களுடைய உழைப்புக்கு ஏற்றவாறு பலன் கிடைப்பதில் கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பாதிப்புகள் உண்டானாலும் விரைவில் மறைந்து போகும். உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வாகனங்களில் செல்லுகின்ற பொழுது, கொஞ்சம் எச்சரிக்கையுடன் செல்லுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய உறவினர்களின் வருகையினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய மனதுக்குள் உண்டான தேவையற்ற எண்ணங்கள் மற்றும் சிந்தனையால் தேவையில்லாத மன உளைச்சல்கள் ஏற்படும். சுரங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். பெரியோர்களுடைய தேரவு கிடைக்கும். மனதுக்கு நெருக்கமானவர்களிடம் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்
வேலை நிமித்தமாக வெளியூா் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் புதுவித அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன மாறுதல்களைச் செய்தீர்கள் என்றால் நல்ல லாபத்தை அடைவீர்கள். உங்களுடைய பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு மனதில் புதுவிதமான நம்பிக்கையைத் தரும். வேலை தேடுகிறவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி
வேகமாக முடியும் என்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கொஞ்சம் காலதாமதமாகவே நடந்து முடியும். முக்கியப் பணிகளில் இருக்கின்றவர்களுக்கு உத்தியோகத்தில் பொறுப்புகளும் அலைச்சல்களும் அதிகரிக்கச் செய்யும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
மனதுக்கு மகிழ்ச்சி தருகிற நல்ல செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது சாதகமான நாளாக அமையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் இருந்த சின்ன சின்ன இன்னல்கள் தீர்ந்து போகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வேலையாட்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நீங்கள் திட்டமிட்ட வேலைகள் மற்றும் பிற முயற்சிகளில் இருநு்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். மனதுக்குள் பலவிதமான கவலைகள் வந்து போகும். கொஞ்ச நேரத்தில் அவை விலகி தெளிவு பிறக்கும். நீங்கள் எதிர்பார்த்த பண உதவியினால் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். வீட்டின் தேவைகளை அறிந்தது அதை நிறைவு செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

தனுசு
வெளியூர் பயணங்களின் மூலமாக செலவுகள் உண்டாகும். வீட்டில் எல்லா காரியங்களும் மந்தமாகவே நடக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரியிடம் அனுசரித்துப் போங்கள். வேலையிடத்தில் ஒற்றுமையாகச் செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கத் தொடங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்
நீங்கள் எதிர்பாராத திடீர் பணவரவும் கைக்கு வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரங்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகமும் உங்களுக்கு மாற்றமான சூழலை ஏற்படுத்தும். உங்களுடைய உத்தியோகத்தில் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் சற்று குறையும். நிலுவையில் இருந்து வந்த பழைய பாக்கிகள் கைக்கு வந்து சேரும். உங்களுடைய உடன் பிறப்புகளின் மூலம் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

கும்பம்
வீட்டுக்குள் இருப்பவர்களுக்குள் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வந்து போகும். வீட்டில் குழந்தைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் சிந்தித்து செயல்பட்டீர் என்றால், தேவையற்ற வீண் செலவுகளைத் தவிர்த்துவிட முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு உருவாகும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளில் கூடுதல் அலைச்சலும் காலதாமதமும் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
பரம்பரை சொத்துக்கள் தொடர்பான சுப செய்திகளின் மூலம் மனம் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களைக் கொடுக்கும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். தொழில் துறையில் உள்ள பெரிய மனிதர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











