Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
உயிரே போனாலும் இந்த மூன்று ராசிக்காரர்களை மட்டும் நம்பிடாதீங்க...
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள் பற்றி இந்த கட்டுரையில் மிக விரிவாகப் பார்ப்போம்.
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையான வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம்.

மேஷம்
உங்களுடைய முன்னோர்கள் செய்த அறச் செயல்களால் உங்களுடைய வாழ்க்கையில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். பெரிய பெரிய நிறுவனங்களிடம் இருந்து கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். மனதில் கவலைகள் அதிகரிக்கும். பெரியோர்களுடைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.

ரிஷபம்
பரம்பரை சொத்துக்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் ஏற்படும். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் நாளாக இன்று இருக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் காரிய விருத்திகள் உண்டாகும். உங்களுடைய சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்து காத்திருந்த கடன்கள் கைக்கு கிடைக்கும். வீண் அலைச்சல்கள் உண்டாகும் நாளாக இன்று அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மிதுனம்
கணவன் மனைவிக்கு இடையே புரிதல்கள் அதிகரிக்கும். பொருள் சேர்க்கையினால் மனம் மகிழ்ச்சி அடையும். பணியில் இருக்கும் உத்தியோகஸ்தர்களுக்க சாதகமான சூழல்கள் ஏற்படும். புதுப்புது முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய பொருள்கள், உடைமைகளில் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
விவாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்ததை விடவும் அதிக லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவர் மீதான விமர்சனங்களளைக் குறைப்பது நல்லது. புதிய நட்புகளின் அறிமுகங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய வேலைகளை யாரையும் எதிர்பார்க்காமல் நீங்களே செய்து கொள்வது சிறப்பு. பொது நலத்திற்காக நன்கொடைகள் கொடுக்க முன் வருவீர்கள். உயரமான இடங்களில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பேச்சில் கவனம் தேவை. நண்பர்களுடன் கலந்து பேசி, மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களுடைய வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு, மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம்அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

கன்னி
சுய தொழில் செய்பவர்களுக்கு செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். உடன் பிறந்த மூத்த சகோதர சகோதரிகளின் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனம் புத்துணர்ச்சி அடையும். அரசு தரப்பில் இருந்து எதிர்பார்த்திருநு்த உதவிக்ள வந்து சேரும். தொழிலின் மூலமாக மிகவும் பிரபலமடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நல்ல பெயர் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

துலாம்
குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பொருள் சேர்க்கை உண்டாகும். புதிதாக வேலை தேடுகிறவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். எந்த செயலைச் செய்தாலும் அதில் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது. உங்களுடைய நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்கி நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களுடைய எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. புதிய தொழிலுக்கு பிரபலங்களுடைய ஆதரவுகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் லாபங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

தனுசு
வீட்டின் பொருளாதாரத்தில் கொஞ்சம் முன்னேற்றமான சூழலே காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகிவிடும். பெரியோர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதிய வேலைக்கான முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்களைத் தரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்சிவப்பு நிறமும் இருக்கும்.

மகரம்
சமூக சேவை புரிகிறவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும் வாய்ப்புகள் உண்டாகும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வுகள் மேம்படும். உடன் பிறப்புகளிடம் தேவையில்லாத வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணிகளில் தேவையில்லாத அலைச்சல்களும் அதனால் வீண் விரயங்களும் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தருகிற எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

கும்பம்
எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியில் திருப்தியான சூழல்கள் உண்டாகும். செய்கின்ற தொழிலில் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் வந்து சேரும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே எண்ணங்களின் ஒற்றுமையினால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மீனம்
நிலுவையில் இருந்து வந்த பண வரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். புதிய தொழில் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் உங்களுக்குக் கிடைக்கும். தேவையற்ற வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு பெரும் புகழும் வெற்றியும் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். சொந்த தொழில் புரிகின்றவர்களுக்கு லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications